சிவாஜி சிலையை குறைச்சிட்டாங்க...: கதறும் கட்சிகள்

Updated : ஜூலை 24, 2018 | Added : ஜூலை 24, 2018 | கருத்துகள் (31)
Advertisement
மும்பை, சத்ரபதி சிவாஜி, பா.ஜ., சிலை, காங்., தேசியவாத காங்.,

மும்பை: மும்பையில், அரபிக் கடல் பகுதியில் நிறுவப்பட உள்ள சத்ரபதி சிவாஜி சிலையின் உயரத்தை குறைத்து மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் பா.ஜ., அரசு மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கட்சிகள் புகார் கூறியுள்ளன.


காங்., தேசியவாத காங்., திட்டம்


மகாராஷ்டிரா மாநிலத்தில், மராத்திய சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களின் ஓட்டு வங்கியை கவர காங்., - தேசியவாத காங்., கூட்டணி கடந்த 2004, 2009 ஆண்டுகளில் நடந்த தேர்தல் அறிக்கைகளில், சிவாஜிக்கு பிரமாண்டமான சிலை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தன. துவக்கத்தில், 98 மீட்டர் உயர சிலைக்கு திட்டமிடப்பட்டது. பின் சிலையின் உயரம் 210 மீட்டர் கொண்டதாக அமைக்க திட்டமிடப்பட்டது.


பின் ஆட்சிக்கு வந்த பா.ஜ., இந்த திட்டத்தை மாற்றியது. உலகின் மிக உயரமான சிலையாக அது இருக்கும் என அறிவித்தது. உலகளவில் சீனாவில் உள்ள புத்தர் சிலை 208 மீட்டர் உயரம் கொண்டது. எனவே, மும்பையின் நாரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து 2.4 கி.மீ., தொலைவில் கடலில் புதைந்து இருக்கும் பிரமாண்டமான கல்லின் மீது சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கப்படும்.
இதில் பீடத்தின் உயரம் 88.8 மீட்டர்; குதிரையில் அமர்ந்தபடி, கையில் வாளை உயர்த்தியபடி உள்ள சிவாஜி சிலையின் உயரம் 121.2 மீட்டர் என அறிவிக்கப்பட்டது.


ரூ.2,800 கோடி செலவுதுவக்கத்தில் இதன் சிலையை அமைக்கும் செலவு 3,826 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. எனினும் பா.ஜ., அரசு இதை 2,800 கோடி ரூபாய்க்குள் இருக்கும்படி திட்டமிட்டது. சிவாஜி சிலை முழுவதும் வெண்கலத்தால் அமைக்கப்பட உள்ளது. முன்பு குதிரையின் மேல் அமர்ந்து இருக்கும் சிவாஜியின் சிலையின் உயரம் 83.2 மீட்டர் உயரமும், அவரது கையில் உள்ள வாளின் உயரம் 38 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டது.

தற்போது சிலையின் உயரத்தில் 7.5 மீட்டர் குறைத்து 75.7 மீட்டர் உயரம் எனவும், வாளின் உயரத்தில் 7.5 மீட்டர் அதிகரித்து 45.5 மீட்டர் உயரம் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி செய்தால், மொத்த செலவில் 338.94 கோடி ரூபாய் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எப்படி மாற்றி அமைத்தாலும், பீடம் மற்றும் சிலையின் மொத்த உயரம் 212 மீட்டராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. சிவாஜி சிலையின் உயரத்தை வேண்டுமென்றே குறைத்து மராத்திய சமூகத்தினரை பா.ஜ., ஏமாற்றி வருகிறது என்று அக்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) நம்முடைய வரலாறுகள் மறைந்து விடாமல் நம் எதிர்கால சந்ததிகளுக்கு கொண்டுபோய் சேர்க்கும் இதுபோன்ற முயற்சிகள் வரவேற்க வேண்டியதே...
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-201800:09:37 IST Report Abuse
Mani . V நாட்டில் எவ்வளவோ தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கையில் இவர்கள் சாதாரண சிலை பிரச்சினையை பிரதானப்படுத்தி விவாதிக்கிறார்கள். எல்லா மாநில அரசியல்வாதிகளும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் போலிருக்கிறது - மக்கள் மீது அக்கறையில்லாமல்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
24-ஜூலை-201820:56:42 IST Report Abuse
Ramesh Kumar மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதி விவசாயிகளின் தற்கொலைகளால் நிலை குலைந்து போயுள்ளளது , இந்நிலையில் ஆயிரக்கணக்கான கோடிகளில் மாவீரன் சிவாஜிக்கு சிலை தேவையா...? அவர் சத்ரபதியாய் ஒவ்வொரு மராத்தியரின் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.....
Rate this:
Share this comment
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201805:42:32 IST Report Abuse
 Muruga Velபெரும்பாலான தற்கொலைகள் சூதாட்டத்தில் காசை தொலைத்தவர்கள் ... அல்லது இறந்தபின் குடும்பத்திற்கு கிடைக்கும் நிவாரண தொகையை கணக்கில் கொண்டு தான் ...விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் குறிப்பாக கடன், இன்ஷுரன்ஸ் மற்றும் நிவாரணம் எப்பொழுதும் கிடைக்கின்றன .. அரசியல் காரணங்களுக்காக தற்கொலையை ஊக்குவிப்பதாக நிலைமை இருக்கிறது ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X