Nirmala Sitharaman clarifies OPS not met in Delhi | ஓபிஎஸ் விவகாரம் : நிர்மலா விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஓபிஎஸ் விவகாரம் : நிர்மலா விளக்கம்

Updated : ஜூலை 25, 2018 | Added : ஜூலை 25, 2018 | கருத்துகள் (73)
Advertisement
நிர்மலா சீதாராமன்,  ஓபிஎஸ் டில்லி பயணம், துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஓபிஎஸ் விவகாரம், அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏர் ஆம்புலன்ஸ், மைத்ரேயன் , நிர்மலா -ஓபிஎஸ் சந்திப்பு,
Nirmala Sitaraaman, OPS Delhi tour, Deputy Chief Minister Panneerselvam, OPS affair, Minister Nirmala Sitharaman, Air Ambulance, Maitreyan, Nirmala-OPS meet,

புதுடில்லி : துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

டில்லியில் நேற்று, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பும் முன், நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த, என் சகோதரரை, மேல் சிகிச்சைக்காக, மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.அதற்கு, 'ஏர் ஆம்புலன்ஸ்' வசதியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்பாடு செய்து தந்தார். அதற்காக, அவரை நேரில் சந்தித்து, நன்றி தெரிவிக்க வந்தேன். இது, என் தனிப்பட்ட பயணம். இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின், சவுத் பிளாக்கில் உள்ள, ராணுவ அமைச்சகத்துக்கு, துணை முதல்வரின் கார் விரைந்தது. அவருடன், மைத்ரேயன் உள்ளிட்டவர்களும் சென்றனர். சில நிமிடங்களில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலக, 'டிவிட்டர்' பக்கத்தில், 'ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயனுக்கு தான், சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பன்னீர்செல்வத்தை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை' என, செய்தி வெளியானது.

இதுகுறித்து, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் தரப்பினர் கூறியதாவது: ஒரு மாதத்திற்கு முன், தம்பியை அழைத்து வர, 'ஏர் ஆம்புலன்ஸ்' உதவியை பன்னீர் கோரினார். அதற்கு, உரிய கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் தான், அமைச்சரை சந்திக்க, முதலில் அனுமதி கோரினார். அவரது மொபைல் போனில், பன்னீர்செல்வமும் பேசினார். அப்போது, மைத்ரேயனுடன் பன்னீரும் வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அமைச்சர், 'வரட்டும்' என்றார்.

இதையடுத்து, 'துணை முதல்வர் வருவது ரகசியமாக இருக்கட்டும். சந்திப்பின் போது, புகைப்படம் எடுக்க வேண்டாம். சந்திப்புக்குப் பின், படத்தை வேண்டுமானால் வெளியிடலாம்' என, மைத்ரேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கும் ,ராணுவ அமைச்சர் சம்மதித்தார்.எல்லாமே ரகசியமாக இருக்கட்டும் எனக்கூறி விட்டு, ராணுவ அமைச்சரை சந்திப்பதற்கு முன், அனைத்து விபரங்களையும், பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து விட்டார். அமைச்சரை சந்திக்காமலேயே, 'சந்தித்து நன்றி தெரிவித்தேன்' என்றார்.

எனவே, அவரை சந்திப்பதை, ராணுவ அமைச்சர் தவிர்த்து விட்டார். மைத்ரேயனை மட்டும் சந்தித்து பேசினார். அவரிடம், 'உங்கள் விவகாரங்களில், என் பெயரை, ஏன் தேவையில்லாமல் பயன்படுத்துகிறீர்கள்' என, அமைச்சர் கடிந்து கொண்டார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தரப்பினர் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pazhaniappan - chennai,இந்தியா
28-ஜூலை-201806:18:28 IST Report Abuse
pazhaniappan காசு கொடுத்தால் அனுப்பி வைக்க ராணுவ ஹெலிகாப்டர் என்ன கால் டாக்ஸியா? இந்த அம்மையார் செய்தது நியாயம் என்றால் பன்னீர் வெளியே சொன்னதற்காக ஏன் எரிச்சல் அடைய வேண்டும்? அத்திப்பழம் போலிருக்கும் அத்தை புட்டு பார்த்த அத்தனையும் சொத்தை ?
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
27-ஜூலை-201817:17:11 IST Report Abuse
dandy கோல் மால் புரம் கேடடாலும் helicopter கிடைக்குமா ???? சுவிற்சர்லாந்து நாட்டில் கிழடுகளை இளஞ்சர்களாகும் ஒரு உலக புகழ் பெற்ற clinic உண்டு
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-ஜூலை-201808:40:36 IST Report Abuse
D.Ambujavalli ராணுவ amaichchar
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X