எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கடலாய் காவிரி!
கொள்ளிடத்தில் கடலாய் விரிந்த காவிரி;
5 ஆண்டுகளுக்கு பின் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்

காவிரியில் கூடுதல் நீர் திறப்பால், கொள்ளிடம் ஆற்றில், ஐந்து ஆண்டுகளுக்கு பின், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 கொள்ளிடம், கடலாய், விரிந்த, காவிரி,  ஐந்து, ஆண்டுகளுக்கு, பின், ஆர்ப்பரிக்கும், வெள்ளம்


கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, நேற்று முன்தினம், வினாடிக்கு, 75 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. நேற்று, கபினி நீர் வரத்து, வினாடிக்கு, 28 ஆயிரம் கன அடி, கே.ஆர்.எஸ்., நீர் வரத்து, 40 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

இதனால், இரு அணைகளில் இருந்தும், வினாடிக்கு, 61 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு, 80 ஆயிரத்து, 291 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, இன்று சரியும்.மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்டம், 120 அடி. நேற்று நீர்மட்டம், 120.22 அடியாகவும், நீர் இருப்பு, 93.82 டி.எம்.சி., யாகவும் இருந்தது. வினாடிக்கு, 76 ஆயிரத்து, 611 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

பெண்கள் குளிக்க தடை


ஈரோடு மாவட்டம், பவானியில், பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இதன் பின்புறம், கூடுதுறை பகுதியில், தினமும் ஏராளமான பக்தர்கள், முன்னோருக்கு

தர்ப்பணம் செய்து, காவிரியில் குளித்து, சுவாமியை வழிபட்டு செல்வர்.

தற்போது, பவானி கூடுதுறை, இரட்டை விநாயகர் படித்துறையின் மேல் பகுதி வரை, தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பெண்கள் குளிக்கும் இடமான காயத்ரி மண்டபம், கிழக்கு கோபுரம் பகுதிகளில் குளிக்க தடைவிதித்து, கோவில் நிர்வாகத்தினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

ஆண்கள் பகுதியில், சவுக்கு கட்டைகளால் வேலி கட்டப்பட்டு, பாதுகாப்பாக குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

கொள்ளிடம்


திருச்சி, முக்கொம்பு அணையிலிருந்து, நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் திறந்து விடபட்டது.துவக்கத்தில், 150 கன அடியாக இருந்த தண்ணீர் திறப்பு, நேற்று, 42 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதே போல், கல்லணையில் இருந்தும், 7,500 கன அடிக் கும் அதிகமான தண்ணீர், கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், கொள்ளிடம் ஆற்றில், 50 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

போலீசார் தயார்


வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், காவிரி பாயும் மாவட்டங்களில், கரையோர மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற போலீசார், தஞ்சையில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக,

Advertisement

20 வகையான உபகரணங்களுடன், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஒரு, எஸ்.ஐ., தலைமையில் நான்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் குழுவாக, கல்லணை, திருவையாறு மண்டப படித்துறை போன்ற பகுதிகளுக்கு, பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, கல்லணை கால்வாயில் நேற்று மதியம், மாடு ஒன்று மிதந்து வந்தது. இதை பார்த்த அப்பகுதியினர், இளைஞர்கள் உதவியுடன், கயிற்றை கட்டி, மாட்டை காப்பாற்றினர்.

தென்பட்ட அருவிகள்


ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 80 ஆயிரம் கன அடி நீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, 66 ஆயிரம் கன அடியாக குறைந்தது. பிற்பகல், 3:00 மணிக்கு, மேலும் குறைந்து, 55 ஆயிரம் கன அடியானது.இதனால், சினி அருவி, ஐந்தருவி, ஐவர் பாணியில், தண்ணீர் வரத்து குறைந்தது. 16ம் தேதி முதல் வெள்ளத்தால் மூழ்கிய அருவிகள், நேற்று தென்பட்டன. நேற்று, 17வது நாளாக, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், தடை விதிக்கப்பட்டது.

மணல் குவாரிகள் மூடல்


பொதுப்பணித் துறை சார்பில், 60 மணல் குவாரிகளை திறக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை, மாநிலம் முழுவதும், 16 குவாரிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. இதில், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பயணிக்கும், கொள்ளிடம் ஆற்றில் மட்டும், ஐந்து குவாரிகள் இயங்கி வந்தன.கொள்ளிடம் ஆற்றில், 2013க்கு பின், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு செயல்பட்டு வந்த, ஐந்து மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன.

- நமது நிருபர் குழு -


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
27-ஜூலை-201810:01:36 IST Report Abuse

ரத்தினம்பெரிய அளவு திட்டங்களில் பல நன்மைகள் சில தீங்குகள் உண்டு. எல்லாவற்றிரும் முதலில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டும், இயற்கை வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு போய் விட்டது. அதை சீர்படுத்த சிறிய அளவு தடுப்பணைகள் கண்டிப்பாக வேண்டும். ஆற்று நீர் படுகைகளில் மணல் கொள்ளைகள் தடுக்கப்பட வேண்டும். ( மணலுக்கு மாற்று உபயோகிக்க வேண்டும்) அப்போது நிலவளம், நீர்வளம், விவசாயம், காடுகள் எல்லாம் சீர்படும். இவை எல்லாம் செயற்பட்டால் மழைப்பொழிவு அதிகரிக்கும். அதிக படியான நீர் கடலில் கலக்கும். இயற்கை சுழற்சி சமமாகும் . இப்போது உடனடியாக நாம் செய்ய வேண்டியது மழை நீர் சேகரிப்பு, பண்ணை குட்டைகள், தடுப்பணைகள், இருக்கும் காடுகளை பாதுகாப்பது , சமூக காடுகள் வளர்ப்பது ஆகியவை. இவற்றை தனி மனிதன் , சேவை நிறுவனங்கள், அதிகாரிகள், ஊராட்சிகள் , மாநில, மத்திய அரசுகள் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும். எல்லா அரசியல்வாதிகளும் சுய நல ஓட்டு அரசியலை மூட்டை கட்டி வைத்து விட்டு, வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு கொஞ்சம் பொது நலத்தோடு பணியாற்றினால் இவை நடக்கும்.. சில விடயங்களில் நாம் சீனாவை, இஸ்ரேலை பின்பற்ற வேண்டும். அவர்கள் இந்த நீர் மேலாண்மை விஷயங்களில் வெற்றி கண்டுள்ளனர்.

Rate this:
manick - chennai,இந்தியா
30-ஜூலை-201814:07:14 IST Report Abuse

manickWater management is still at stake. Earlier govt sent some team to Israel and we dont know what happened to their report and implementation on drip irrigation. Israel is helping in some part of TN including erode. But this has to spread to all cities very fast. Ground water level in Chennai was increased after appreciable amount of efforts taken but now this is stake as new builders never implement rain water harvesting tem . Hope when political stability achieved all will be taking momentums again . ...

Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-ஜூலை-201809:19:05 IST Report Abuse

மலரின் மகள்இதை பார்ப்பதற்காகவே தமிழ் திருநாடு வர வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. நதிப்பிரவாகம் கண்ணுக்கு அழகு மட்டுமல்ல. மனதிற்கு புத்துணர்ச்சி. நதியை பார்த்து கொண்டே இருங்கள் மனதின் அழுக்கு மறைந்து புத்துணர்ச்சி பெருகுவதை உணர்வீர்கள்.

Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூலை-201803:19:04 IST Report Abuse

Sivramkrishnan Gkஎன் ஆசையும் அது dhaan ...

Rate this:
venkat - chennai,இந்தியா
27-ஜூலை-201802:00:33 IST Report Abuse

venkatகுஜராத்தில் மோடி தலைமை பி ஜெ பி ஆட்சியில் 1,66082 தடுப்பணைகள் கட்டப்பட்டு 28,408 மில்லியன் கன அடி cubic (mcf) நதி நீர் சேகரிப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இது நதி நீர் சேமிப்பில் ஒரு வரலாற்று சாதனை ஆகும். பிரதமர் செயல் வீரர் மோடி, விவசாயிகளின் நலன்களை சரியான நிரந்தர பயனளிக்கும் திட்டங்கள் மூலம் காப்பாற்றுபவர் என்பது நிரூபணம். ஆனால் கடந்த 50 வருட தமிழக திராவிட கழக ஆட்சியினர் இதுவரை எத்தனை தடுப்பணைகள் கட்டி உள்ளனர்?

Rate this:
mayavan - Chennai,இந்தியா
27-ஜூலை-201809:33:36 IST Report Abuse

mayavanமுழு கொள்ளளவு கடலில் கலக்கவேண்டும் என்று யார் சொன்னார்கள் .நதி நீர் கடலில் கலக்கவிட்டால் முகத்துவாரங்கள் உப்புநீர் மிக்கதாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.மேலும் ஆற்றுமணல் இவ்வளவு சுரண்ட படுவதால் நதிநீர் பூமிக்குள் சேமிக்கும் வாய்ப்பு மிகவும் குறையும் ...

Rate this:
Dubuk U - Chennai,இந்தியா
13-ஆக-201814:23:45 IST Report Abuse

Dubuk UVenkat - Chennai,இந்தியா, சற்று கணக்கை சரியாக பார்த்து சொன்னால் நன்று இங்கு செம்மரம்பாக்கத்தின் கொள்ளளவு 3500 மில்லியன் கன அடி (mcf) அதாவது உனது கூற்றின்படி 1,66082 தடுப்பணைகள், 28,408 மில்லியன் கன அடி என்பது 20தே செம்மரம்பாக்கத்திற்கு சமம் (தமிழகத்தில் மற்ற ஏரிகள் உள்ளன) . மேலும் சிலநாட்களுக்கு முன் "வினாடிக்கு" இங்கு 120000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டது எனில் அவை உன் கூற்றின் தடுப்படைகள் அனைத்தும் 2 நாட்களில் நிரம்பி நீர் அரபிக்கடலில் கலந்துவிடும் ... சென்ற ஆண்டு சபர்மதி ஆறு அப்படிதான் ஆனது.. இங்கும் அப்படித்தான்.. மோடியை வேண்டுமானால் புகழ்த்துக்கொள் ஆனால் திராவிடத்தை பழிக்காதே .. ...

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X