ஜோதிராதித்யா சிந்தியாவிடம் கட்கரி மன்னிப்பு

Added : ஜூலை 26, 2018 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி, : மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த, தேசிய நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு, தன்னை அழைக்கவில்லை என, குற்றஞ்சாட்டிய, காங்., - எம்.பி., ஜோதிராதித்யா சிந்தியாவிடம், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மன்னிப்பு கேட்டார்.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., - எம்.பி.,யுமான, ஜோதிராதித்யா சிந்தியா, லோக்சபாவில் நேற்று பேசியதாவது:சமீபத்தில், மத்திய

புதுடில்லி, : மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த, தேசிய நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு, தன்னை அழைக்கவில்லை என, குற்றஞ்சாட்டிய, காங்., - எம்.பி., ஜோதிராதித்யா சிந்தியாவிடம், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மன்னிப்பு கேட்டார்.முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., - எம்.பி.,யுமான, ஜோதிராதித்யா சிந்தியா, லோக்சபாவில் நேற்று பேசியதாவது:சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலம், குணா தொகுதியில், நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.தொகுதியின், எம்.பி., என்ற முறையில் என்னை அழைக்கவில்லை; அழைப்பிதழிலும் என் பெயர் இடம்பெறவில்லை; என் பெயர் பொறித்த கல்வெட்டு மாற்றப்பட்டது.இது தொடர்பாக, மத்திய பிரதேச மாநில, பா.ஜ., முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் குணா மாவட்ட கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிந்தியாவின் புகாருக்கு பதில் அளித்த, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி, நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதுடன், ''இனி இவ்வாறு நடக்காது,'' என்றும் உறுதி அளித்தார்.இதற்கிடையில், ''எம்.பி.,க்கள் இதுபோல் நடத்தப்படுவது நல்லதல்ல,'' என, காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.''காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்த விழாக்களுக்கு, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை,'' என, மத்திய சுரங்கத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
27-ஜூலை-201819:37:12 IST Report Abuse
sumutha - chennai //சிந்தியாவின் புகாருக்கு பதில் அளித்த, மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி, நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதுடன், ''இனி இவ்வாறு நடக்காது,'' என்றும் உறுதி அளித்தார்// ஏங்க வருங்கால பிரதமரே மரியாதையும் நாகரிகமும் பண்பாடும் இதுதான். நீங்கள் செய்த "கண்ணடி" வேலைக்கு நீங்கள் எப்படி பதிலளிக்க போகிறீர்கள். நாட்டு மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-ஜூலை-201811:26:00 IST Report Abuse
Bhaskaran ஜோதிராதித்தியா தந்தை காங்கிரசில் இருந்து ஓரம்கட்டப்பட்டு அதில் இருந்து விலகி பின் சுயேச்சையாகவோ வேறு கட்சியில் சேர்ந்தோ ஜெயித்துபின் காங்கிரஸில் சேர்ந்துகொண்டார் அவரை மதிக்காத சோனியாவின் கட்சியில் அவர் மகன் இருப்பது அவமானமே
Rate this:
Cancel
rajan. - kerala,இந்தியா
27-ஜூலை-201809:31:40 IST Report Abuse
rajan.  லஞ்ச ஊழல் சார்ந்த MP களை எப்படி நடத்தணுமாம் கார்கே ? எல்லா ஆடையும் மக்களாகிய நாங்கள் உங்களுக்கு ஒட்டு போட்டு அனுபவிச்சுட்டோம். இன்னும் மிச்சம் மீதி இருக்கா என்ன. வந்துட்டானுங்கா வாய் கிழிய வக்கணையா பேசுறதுக்குன்னு. போவியா சும்மா உள்ளதை வச்சுக்கிட்டு,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X