ஹிந்துக்களுக்கு 5 குழந்தைகள் பா.ஜ., - எம்.எல்.ஏ., மீண்டும் சர்ச்சை | Dinamalar

'ஹிந்துக்களுக்கு 5 குழந்தைகள்' பா.ஜ., - எம்.எல்.ஏ., மீண்டும் சர்ச்சை

Added : ஜூலை 26, 2018 | கருத்துகள் (7)
Share
லக்னோ,: ''கடவுள் தந்த வரப்பிரசாதம், குழந்தைகள். எனவே, ஹிந்து மதத்தைச் சேர்ந்த அனைவரும், குறைந்தது ஐந்து குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்,'' என, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேந்திர சிங் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், பைரியா தொகுதி,
  'ஹிந்துக்களுக்கு 5 குழந்தைகள்'  பா.ஜ., - எம்.எல்.ஏ., மீண்டும் சர்ச்சை


லக்னோ,: ''கடவுள் தந்த வரப்பிரசாதம், குழந்தைகள். எனவே, ஹிந்து மதத்தைச் சேர்ந்த அனைவரும், குறைந்தது ஐந்து குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்,'' என, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேந்திர சிங் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், பைரியா தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேந்திர சிங். இவர், சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் பெற்றவர்.இந்நிலையில் நேற்று, சுரேந்திர சிங் கூறியதாவது:கடவுள் தந்த வரப்பிரசாதம், குழந்தைகள். ஹிந்து மதத்தைச் சேர்ந்த அனைவரும், குறைந்தது, ஐந்து குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். தந்தைக்காக இரண்டு, தாய்க்காக இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுதவிர, கூடுதலாக ஒரு குழந்தையும் அவசியம்.நாட்டின் மக்கள் தொகையில், ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, கணிசமாக இல்லையெனில், அவர்கள் சிறுபான்மையினராக மாறி விடுவர். இதற்கு, பயங்கரவாதிகள் காரணம் இல்லை; ஹிந்துக்களே காரணம். ஹிந்துக்கள் வலிமையானால், நாடு வலிமை அடையும். ஹிந்துக்கள் பலவீனமானால், நாடு பலவீனம் அடையும்.இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேந்திர சிங், அடிக்கடி சர்ச்சை பேச்சுக்களைபேசி வருவது, மாநில அரசுக்கு, தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.சமீபத்தில், 'நாட்டில், பாலியல் பலாத்கார சம்பவங்களை, கடவுள் ராமர் வந்தாலும் தடுக்க முடியாது' என, எம்.எல்.ஏ., சுரேந்திர சிங் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X