பதிவு செய்த நாள் :
மேற்கு வங்க மாநில பெயரை'பங்க்ளா'
என மாற்ற தீர்மானம்

கோல்கட்டா,: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்க்ளா' என மாற்றி, சட்டசபையில், அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு, மத்திய உள்துறை அமைச்ச கத்தின் ஒப்புதல் கிடைத்த பின், அதிகாரப் பூர்வமாகஅமலுக்கு வரும்.

மேற்கு வங்கம்,மாநிலம்,பெயரை,பங்க்ளா, மாற்ற, தீர்மானம்


மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின்

பெயர், 'டபிள்யு' என்ற ஆங்கில எழுத்தில் துவங்கு வதால், அகர வரிசையின் படி, அந்த மாநிலம், பட்டி யலில் பின்வரிசையில்உள்ளது. இதையடுத்து, அகரவரிசையில் முன்னிலை பெறும்நோக்கத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்க்ளா' என, மாற்ற முடிவு செய்யப்பட்டது.


இந்த பெயர் மாற்றத்திற்கு, சமீபத்தில், மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டது.இந்நிலையில் நேற்று, மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்க்ளா' என, மாற்றுவதற் கான தீர்மானம், சட்டசபையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.இந்த தீர்மானம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.


ஒப்புதல் கிடைத்த பின், அதிகாரபூர்வமாக, 'பங்க்ளா' என, பெயர் மாற்றப்படும்.இரு ஆண்டுகளுக்கு முன்,

Advertisement

'பங்க்ளா' என, பெங்காலியிலும், 'பெங்கால்' என, ஆங்கிலத்திலும், 'பங்கால்' என, ஹிந்தியிலும், பெயர் மாற்றம் செய்யப்படுவதாக, முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றியது.ஆனால் இதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-ஜூலை-201821:00:46 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்"பூத் பங்க்ளா" ன்னு கலாய்ப்பாய்ங்களே..

Rate this:
sumutha - chennai - Chennai,இந்தியா
27-ஜூலை-201819:46:41 IST Report Abuse

sumutha - chennaiஎன்னது மாநிலத்தோட பேர பங்களான்னு மாத்த போறிங்களா பங்களான்றது கூட ரொம்ப சின்னதா இருக்கும் பேசாம அரண்மனைன்னு மாத்திடுங்க. ஆல்பபெட்ல முதலிடத்திலயும் இருக்கும். இன்னொரு விஷயம் ஏற்கனவே அரண்மனை, அரண்மனை 2 ன்னு எங்க ஊர்ல பேரவைச்சாச்சு நீங்க வேனா அரண்மனை 3 ன்னு வையுங்க. (பேய் பங்களான்னு ஒங்களுக்கு ஞாபகம் வந்தால் அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.)

Rate this:
KSK - Coimbatore,இந்தியா
27-ஜூலை-201818:29:18 IST Report Abuse

KSKஇது, இது தான் சார் புடம் போட்ட பகுத்தறிவு என்பது, மமதை தலைக்கேறி விட்டது, இனி கஷ்டம் தான்.

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X