பொது செய்தி

தமிழ்நாடு

வேகமாக உயர்கிறது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

Updated : ஜூலை 27, 2018 | Added : ஜூலை 27, 2018 | கருத்துகள் (16)
Advertisement
மேட்டூர் அணை, நீர்வரத்து

சேலம் : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 73,496 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து 25,000 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 48,496 கனஅடியும் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 50,000 கனஅடியில் இருந்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு வரம் நீரின் அளவும் 62,000 கனஅடியில் இருந்து 67,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் 19வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 48,065 கனஅடியில் இருந்து 61,291 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 120.22 அடியில் இருந்து 120.31 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 93.96 டிஎம்சி.,யாக உள்ளது. அணையில் இருந்து 66,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்காக 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) இனிமேல் வரும் தண்ணீர் அனைத்தும் நேராக கடலுக்குத்தான் போக போகிறது... நம்முடைய நீர் மேலாண்மை சரியில்லை என்பதுதான் எதார்த்த உண்மை
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-ஜூலை-201814:25:21 IST Report Abuse
Sridhar அம்மா சொன்ன 'ரெயின் ஹார்வெஸ்ட்டிங்' முறையை முறையாக எல்லோரும் கடைபிடித்திருந்தோமானால் இன்று நகரங்களில் நிலத்தடி நீர் கீழே இருங்கியிருக்காது. இப்போதும் மோசமில்லை. மழை நீரை சேமிப்போம். நதி நீரை சேமிப்பதற்கு புது புது வழிமுறைகள் வந்துள்ளன. வங்கி கடன் பெற்று விவசாயிகள் அவற்றை செயல் படுத்தினால் குளம் குட்டைகளை தூர்வாருவது கூட தேவையில்லாமல் போகும்
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
27-ஜூலை-201813:22:14 IST Report Abuse
Murugan நீரை சேமிக்கும் திட்டத்தை மக்கள் உணராதவரைக்கும் தண்ணீர் பஞ்சம் கோடையில் ஏற்படத்தான் செய்யும்…………..மக்களே வீர் கொண்டு எழுங்கள் ………. எதற்ஏதற்கோ போராடும் நீங்கள் ………………….
Rate this:
Share this comment
Senthil murugan - Madurai,இந்தியா
27-ஜூலை-201818:08:12 IST Report Abuse
Senthil muruganமிகவும் சரி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X