இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: 10 பேர் பலி

Updated : ஜூலை 29, 2018 | Added : ஜூலை 29, 2018 | கருத்துகள் (3) | |
Advertisement
ஜகார்த்தா : இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவுப்பகுதியில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது. முக்கிய சுற்றுலாத்தலமான லோம்பாக் தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில்
இந்தோனேஷியா, நிலநடுக்கம், சுனாமி, ஆழிப்பேரலை

ஜகார்த்தா : இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவுப்பகுதியில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது. முக்கிய சுற்றுலாத்தலமான லோம்பாக் தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூகம்பம் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் மற்றும் பின்னர் என சில நிமிடங்களாக நிலஅதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், கடந்த 2004ம் ஆண்டில் 9.1 ரிக்டர் அளவாக ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப்பேரலையில் ( சுனாமி) சிக்கி 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-ஜூலை-201807:51:56 IST Report Abuse
Srinivasan Kannaiya கடுமையான உழைப்பாளிகளுக்கு வரும் சோதனை...
Rate this:
Cancel
Authentic Stag - Bangalore,இந்தியா
29-ஜூலை-201807:31:11 IST Report Abuse
Authentic Stag இயற்கையை கட்டி ஆண்ட எங்கள் கட்டுமரம் கட்டுண்டு கிடப்பதை பார்த்து tectonic plates என்ற புல்லுருவிகள் புத்துயிர் பெற்று போராட்டம் செய்கிறது. தளபதி விரைவில் தாண்டவம் ஆடி தக்க தண்டனை கொடுத்து "சுமித்திரை கொண்ட சுடாலின்" என பெயர் எடுப்பார்.
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
29-ஜூலை-201815:40:57 IST Report Abuse
dandyபூமிக்கே பொறுக்கவில்லை எங்கள் கட்டுமரம் அனுபவிக்கும் தண்டனை என்று கழக குஞ்சுகள் கவிதை எழுதும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X