ஆதார் சர்ச்சை: டிராய் தலைவரின் சவால் முறியடிப்பு

Updated : ஜூலை 29, 2018 | Added : ஜூலை 29, 2018 | கருத்துகள் (46) | |
Advertisement
பெங்களூரு : ஆதார் தகவல்கள் பகிரப்படுவதாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவுக்கு மர்மநபர் ஒருவர் டுவிட்டரில் சவால் விடுத்தார்.சர்மாவுக்கு வந்த மர்ம நபர் அனுப்பிய டுவிட்டர் பதிவியில், 13 அடி பாதுகாப்பு அமைப்பு சுவற்றின் மீது உங்களுக்கு மிக அதிக அளவில் நம்பிக்கை இருந்தால் உங்களின் ஆதார் தகவல்களை வெளிப்படையாக
டிராய், ஆதார் எண், ஆர்எஸ் சர்மா, டுவிட்டர்,  ஹேக்கர் ஆன்டர்சன் , ஆதார் தகவல்கள், ஆதார் சர்ச்சை, Aadhaar controversy,
TRAI, Aadhaar Number, RS Sharma, Twitter, Hacker Anderson, Aadhaar Information,

பெங்களூரு : ஆதார் தகவல்கள் பகிரப்படுவதாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவுக்கு மர்மநபர் ஒருவர் டுவிட்டரில் சவால் விடுத்தார்.

சர்மாவுக்கு வந்த மர்ம நபர் அனுப்பிய டுவிட்டர் பதிவியில், 13 அடி பாதுகாப்பு அமைப்பு சுவற்றின் மீது உங்களுக்கு மிக அதிக அளவில் நம்பிக்கை இருந்தால் உங்களின் ஆதார் தகவல்களை வெளிப்படையாக வெளியிடுங்களேன் பார்க்கலாம் என சவால் விட்டிருந்தார்.

இதற்கு டுவிட்டரில் பதில் அளித்திருந்த சர்மா, தனது ஆதார் எண்ணை பதிவிட்டார். அத்துடன், இப்போது உங்களுக்கு இந்த சவாலை விடுகிறேன். எனது ஆதார் எண்ணை வைத்து உங்களால் ஏதாவது தீங்கை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் செய்து காட்டுங்கள் என பதில் சவால் விடுத்தார்.

சர்மாவின் ஆதார் எண்ணைக் கொண்டு அவரின் மொபைல் எண், மாற்று மொபைல் எண், முகவரி, இமெயில் முகவரி, பிறந்த தேதி, பான் எண், பிறந்த மாநிலம், தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி உள்ளிட்ட தகவல்களை , ஆன்டர்சன் என்ற ஹேக்கர் வெளியிட்டுள்ளார். சர்மா போன்று ஆதார் எண்ணை வெளிப்படையாக வெளியிடுவது சரியான முன்னுதாரணம் அல்ல பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
29-ஜூலை-201822:35:54 IST Report Abuse
adalarasan பான் ,ஆதார் ,மற்ற விபரங்களை வைத்து இவர் பெயரில், வாங்கி கணக்கை ஆரம்பித்து, கறுப்புப்பணம், கைமாற்றுதல் எளிதாக செய்யலாம்?ஒரு திருடன், வடநாட்டில், 60 பான் எண்களில்வெவ்வேறு வாங்கி கணக்குகளை ஆரம்பித்து, ஏமாற்றியது, செய்தி 2 வருடம் முன் வெளிவந்தது?
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
29-ஜூலை-201819:44:03 IST Report Abuse
spr சர்மாவின் ஆதார் எண்ணைக் கொண்டு அவரின் மொபைல் எண், மாற்று மொபைல் எண், முகவரி, இமெயில் முகவரி, பிறந்த தேதி, பான் எண், பிறந்த மாநிலம், தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி உள்ளிட்ட தகவல்களை , ஆன்டர்சன் என்ற ஹேக்கர் வெளியிட்டுள்ளார். சர்மா போன்று ஆதார் எண்ணை வெளிப்படையாக வெளியிடுவது சரியான முன்னுதாரணம் அல்ல. பொதுவாக சமூக வலைத்தளங்களில் ஆதார் எண்ணை பதிவிடுவது ஒரு நல்ல முறை அல்ல. ஆனால் இந்தத் தகவல்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்கள் ஸ்மார்ட் கைபேசி பதிவுகள் எனப் பல் வகையிலும் சேகரிக்கப்படலாம் நம் நாட்டில் இருப்பது போல ஜெராக்ஸ் எடுக்கும் பழக்கம் எடுப்பவர் நம்பகமானவரா எடுக்கப்படும் பிரதி நாம்கேட்ட எண்ணிக்கையைவிட அதிகமாக எடுக்கப்பட்டதா என்றெல்லாம் எவரும் கேட்பதில்லை அரசு முட்டாள்தனமாக "எங்கும் ஆதார் எதற்கும் ஆதார்" என்று கட்டாயப்படுத்துவதிலும் கழிப்பறை பாதுகாவலர் கூட ஆதாரைக் காண்பித்தால்தான் அனுமதி என்று சொன்னாலும் வியப்பில்லை. அதிலும் கைபேசி பதிந்தால்தான் ஆதார் எண்ணே பெற முடியும் என்ற கட்டாயமிருக்கையில், நம் கைபேசியினை ஆதாருடன் இணைக்க வேண்டுமென்று சொன்னதால் கைபேசி நிறுவனங்கள் நம் ஆதார் தகவல்களைத் திருட வாய்ப்பிருக்கிறது எனவே அரசு இது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும் "லூசு பய புள்ளைங்க ஆதார் வைத்து அவரது விபரம் சொன்னீர்கள். சரி. மேற்கொண்டு என்ன புடுங்கி போடுகிறார்கள் என்று பார்ப்போம்" எனச் சொல்வது அறியாமையின் உச்சம் எங்கேனும் ஒரு குற்றம் நிகழ்ந்தால், அதனுடன் உங்கள் ஆதார் விவரம் பகிரப்பட்டால், ஏன் எதற்கு எனக் கேட்காமல் காவற்துறை உங்களை கைது செய்ய வாய்ப்புள்ளது உங்கள் பேரில் தவறில்லை என்று நிரூபித்து வெளியே வருவது ஒரு இமாலய சாதனை. பாதுகாப்புக்கு கட்டமைப்புக்கள் சரிவர இல்லாத நிலையில், நுகர்வோர் விழிப்புணர்ச்சி பாதுகாப்பு இவற்றுக்கென எந்தவித ஏற்பாடுகளையும் செய்யாமல், ஆதார் நடைமுறைப்படுத்த இந்த அரசு துடிப்பது முட்டாள்தனம் ஓட்டுநர் உரிமத்தைக் கூட ஆதாருடன் இணைக்க வேண்டுமென அண்மையில் ஒரு செய்தி வந்தது இரும்புத்திரை படம் பாருங்கள் விவகாரத்தின் தீவிரம் ஓரளவாவது புரியும்
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
29-ஜூலை-201819:36:28 IST Report Abuse
K.Sugavanam சிரிப்பா சிரிக்க வச்சிட்டாரே நம்ப சர்மா ஜி..ஹாஹா..அது அவரோட ஆதார் நம்பர் தானே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X