ஜெ., சிகிச்சை பெற்ற அறைகளில் கமிஷன் வழக்கறிஞர்கள் ஆய்வு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., சிகிச்சை பெற்ற அறைகளில்
கமிஷன் வழக்கறிஞர்கள் ஆய்வு

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறைகளை, ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் வழக்கறிஞர்கள் மற்றும், ஜெ., அண்ணன் மகள் தீபா ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

 ஜெ., சிகிச்சை, பெற்ற,அறைகளில் , கமிஷன் ,வழக்கறிஞர்கள், ஆய்வு


ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. கமிஷன் வழக்கறிஞர்கள், பார்த்த சாரதி, நிரஞ்சன் ஆகியோர், ஜெ., சிகிச்சை பெற்ற அறைகளை, நேரில் பார்வையிட

அனுமதி கோரி, நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர்.நீதிபதியும் அனுமதி அளித்தார். அவர்களுடன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் இருவர் செல்லவும், அனுமதி தரப்பட்டது.


அதேபோல, ஜெ.,அண்ணன் மகள் தீபா தரப்பில், அவரது வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி, தங்களையும் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி, மனு செய்தார். அதை ஏற்று அவர்களுக்கும், நீதிபதி அனுமதி வழங்கினார்.


நேற்று இரவு, 7:00 மணிக்கு, விசாரணை கமிஷன் செயலர் கோமளா, வழக்கறிஞர்கள், பார்த்தசாரதி, நிரஞ்சன், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்துார் பாண்டியன் ஆகியோர், அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றனர். அவர்கள் மருத்துவமனை யில், ஜெ., சிகிச்சை பெற்ற இடங்கள், அமைச்சர்கள் அமர்ந்திருந்த அறை, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவர்கள் ஆலோசனை அறை என,

Advertisement

அனைத்தையும் பார்வையிட்டனர்.அவர்களின் ஆய்வு முடித்த பின், ஜெ., அண்ணன் மகள் தீபா, தன் கணவர் மாதவன், வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி ஆகியோருடன், மருத்துவமனை யில், ஜெ., சிகிச்சை பெற்ற அறைகளை பார்வையிட்டார். ''ஜெ., அதிக நாட்கள் தங்கி, சிகிச்சை பெற்ற அறை, அவசர சிகிச்சைப் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது,'' என, தீபா தெரிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூலை-201821:08:47 IST Report Abuse

ManiSIvan vera adikra veyilla coat maatittu vandhu comedy pannitirukaan. Kadaisiya generalize panni oru report koduppan. Adha vechu onnum panna mudiyaadhu. Dheivam nindru kondradhu.

Rate this:
durairaj - coimbatore,இந்தியா
30-ஜூலை-201817:15:33 IST Report Abuse

durairajஅம்மா இறப்பில் மர்மம் இல்லை உண்மை, இதை வைத்து நாடகம் நடக்கிறது இது O P S இன் நாடகம் அம்மாவின் விசுவாசிகளே புரிந்து கொள்வீர்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஜூலை-201816:43:29 IST Report Abuse

Pugazh Vசாதாரண மருத்துவமனைகளிலேயே ஒரு பேஷண்ட் டிஸ்சார்ஜ் ஆனதும் அந்த அறையை மொத்தமாக சுத்தம் செய்து விடுவார்கள். அப்போலோ அந்த அறையை ஐ சி யு வாக மாற்றி விட்டது. ஜெயலலிதாவுக்குப் பிறகு பல பேஷண்ட்டுகள் அதில் தங்கி சிகிச்சை பெற்று வீட்டுக்கும் போயிருக்கலாம். இத்தனை மாதம் கழித்து அந்த அறையில் என்ன பார்க்க போனார்கள்? நல்லா காட்டறாங்கப்பா பிலிமு.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X