அரசியல் செய்தி

தமிழ்நாடு

தரையில் உருண்டு புரண்ட தொண்டர்

Updated : ஜூலை 30, 2018 | Added : ஜூலை 30, 2018 | கருத்துகள் (74)
Advertisement
தரை, தொண்டன், தி.மு.க., கருணாநிதி

சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு வெளியே ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் உணர்ச்சி பொங்க காணப்பட்டனர். அதில் ஒருவர் தரையில் உருண்டும், புரண்டும் தலைவரை காப்பாற்று இறைவா என மண்டி வேண்டியதும் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.
கருணாநிதி, மருத்துவமனையில் கடந்த 27 ம் தேதி அனுமதிக்கப்பட்ட நாள் முதல், தொண்டர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இரவு பகல் பாராமல் அங்கேயே தவம் கிடக்கின்றனர். " கேட்கலையா, கேட்கலையா எங்கள் குரல் கேட்கலையா, எழுந்து வா , எழுந்து வா காவேரியை விட்டு எழுந்து வா " என்றும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில் மருத்துவமனை முன்பாக இன்று பெண்களும், ஆண்களும் அழுதபடி நிற்கின்றனர். ஒரு தீவிர தொண்டர் கை கூப்பி வணங்கியபடி வேண்டுதலில் ஈடுபட்டார். அவர்களை பார்த்த அனைவரையும், பெரும் அளவில் மனதை துயருர செய்தது.

கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் அவர் படித்த மற்றும் பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran - Kongu seemai,இந்தியா
31-ஜூலை-201804:19:52 IST Report Abuse
Cheran தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் வாழ்க. இன்றைய பிற்ப்பட்ட, மிகவும் பிற்ப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரும் கல்வி, பொருளாதாரத்தில் ஆதிக்க சக்தியினரை காட்டிலும் வளர்ச்சி பெறுவதற்கு முக்கிய காரணம் கலைஞர். அதுவே பலர் கேவலமான கருத்துக்களை இங்கே உமிழ்வதற்கு காரணம். விட்டு தள்ளுங்கள் இந்த கயவர்களின் கருத்துக்களை.
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
31-ஜூலை-201803:42:11 IST Report Abuse
Kunjumani இந்த தொண்டர் ஜெஜெ இருந்த காலத்தில் அதிமுகவில் இருந்திருந்தால் அமைச்சரோ இல்லை துணை முதல்வராக ஆகியிருக்கலாம் தன்னுடைய எதிர்காலத்தை வீணடித்துவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Hari Iyer - Austin,இந்தியா
31-ஜூலை-201800:00:15 IST Report Abuse
Hari Iyer கருணாவை டன் கணக்கில் வசை பாடினாலும் ஒரு ஆட்டு மந்தை அவர் புகழ் பாடி ஓட்டும் போட்டு வெற்றி அடைய செய்கின்றது ஒரு தேர்தலிலும் தோல்வி அடையவில்லை. இந்த விஞ்சான திறமைசாலிக்கு எப்படி ஆதரவு கிடைக்கின்றது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X