கண்காணிப்பாளர் பேருல கட்டப்பஞ்சாயத்து... காவல்துறையில் கவனிக்கப்படாத பேராபத்து!| Dinamalar

கண்காணிப்பாளர் பேருல கட்டப்பஞ்சாயத்து... காவல்துறையில் கவனிக்கப்படாத பேராபத்து!

Added : ஜூலை 31, 2018
கண்காணிப்பாளர் பேருல கட்டப்பஞ்சாயத்து... காவல்துறையில் கவனிக்கப்படாத பேராபத்து!

வெளியில் எங்கும் சுற்றப்போக வேண்டாம் என்ற 'அம்மா'வின் அன்புக்கட்டளையைக் கேட்டு, வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தாள் சித்ரா; கூப்பிட்ட அரை மணி நேரத்தில், அங்கு வந்து சேர்ந்தாள் மித்ரா. இருவரும் சேனல் சேனலாக மாற்றிக் கொண்டு, 'டிவி' பார்த்தபடி, பேசிக் கொண்டிருந்தனர். எங்கிருந்தோ, 'செம்மொழியான தமிழ்மொழியாம்' என்ற, செம்மொழிப் பாடல் சத்தம் கேட்டது.''நம்மூர்ல கருணாநிதி இருந்த காலத்தைப் பத்தி, 'நெஞ்சுக்கு நீதி'யில அவரே எழுதுனதைப் படிச்சிருக்கேன்...ஆனா, செம்மொழி மாநாட்டுல தான் முதமுதல்ல அவரைப் பார்த்தேன்...நம்ம ஊர்னா, அவருக்கு தனிப்பாசம் தான்!'' என்றாள் மித்ரா.''கண்டிப்பா மித்து...அந்த பாசத்துல தான், நம்ம ஊருக்கு நிறைய திட்டங்களும் கொண்டு வந்தாரு...இங்க இருக்குற கட்சிக்காரங்க சரியில்லாததாலதான், எங்கேயும் ஜெயிக்க முடியலை; அவர் வாழ்ந்த சிங்காநல்லுார்ல மட்டும், தி.மு.க., ஜெயிச்சதுதான் ஒரே ஆறுதல்!'' என்றாள் சித்ரா.''அந்தக் கட்சியில, ஒருத்தரை ஒருத்தர் போட்டுக் கொடுக்குறதைத் தான் 'மெயின்' வேலையா பாக்குறாங்க; சொத்துவரி உயர்வுக்கு எதிரா போன வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குக் கூட, பெருசா கூட்டம் ஒண்ணும் வரலை!'' என்றாள் மித்ரா.''ஆளுங்கட்சியில மட்டும் என்ன வாழுதாம்...ஆட்சியில இருக்குறதால, ஒத்துமையா இருக்குறது மாதிரி 'பாவ்லா' காட்டிட்டு இருக்காங்க...அஞ்சாறு வருஷத்துல, ஒரு தொகுதியில மட்டும் எவ்வளவு கோடிக்கு வேலை நடந்திருக்குன்னு எம்.எல்.ஏ.,க்கள் கணக்கு எடுத்திருக்காங்க...கூட்டிப்பாத்து பேயறைஞ்சது மாதிரி ஆயிட்டாங்களாம்...இந்த கணக்கை, 'பிஜேபி'யில முக்கியமான ஆளுக்கு, ஒரு அமைப்பு மூலமா அனுப்பியும் வச்சிருக்காராம் ஒரு எம்.எல்.ஏ.,!'' என்றாள் சித்ரா.''அங்கேயும் அதே கதைதான்... அந்தக் கட்சியில முக்கியமான பொறுப்புல இருக்குற நம்ம ஊரு 'லேடி' தலைவரைப்பத்தியும், அவுங்க கட்சிக்காரங்க தலைமைக்கு பெருசா ஒரு பெட்டிஷன் அனுப்பிருக்காங்களாமே!'' என்றாள் மித்ரா.''ஆக மொத்தத்துல, எந்தக் கட்சியிலயும் ஒத்துமை இல்லைன்னு சொல்லு!'' என்ற சித்ரா, வீட்டில் செய்த எள் உருண்டை, கை முறுக்கு எடுத்து வந்தாள்; கூடவே சுக்கு மல்லி காபியும் வந்தது. ருசித்துக் கொண்டு, அவளே தொடர்ந்தாள்...''மித்து... போன வாரம் தான், ரூரல் போலீஸ் படுமோசமாயிருந்துச்சுன்னு, கொதிச்சிட்டு இருந்த...அடுத்து மூணு நாள்லயே எஸ்.பி.,யை மாத்திட்டாங்க; தெரிஞ்சு தான் பேசுனியா?''''அவரை எதுக்கு மாத்துனாங்களோ தெரியலை...ஆனா, அவரோட பேரைக் கெடுத்த அந்த 'குண'மான ஆபீசரை மாத்தலியே... எஸ்.பி.,மாறுனாலும், வசூல் களத்துல விடாம அவர் மட்டும் 'ரன்' அடிச்சிட்டு இருக்காரே; அவருக்கு உதவியா, ஊர்ல இருந்து ஒரு வக்கீலைக் கூப்பிட்டு வந்து, ராம் நகர்ல 'ரூம்' போட்டு, 'பேரலல் எஸ்.பி.,ஆபீஸ்' நடத்துறாராமே!''''அந்த விஷயம் நானும் கேள்விப்பட்டேன் மித்து...அவரு வக்கீலா, போலி வக்கீலான்னே தெரியலைங்கிறாங்க. ஆனா, அவரு தான், ரூரல்ல இருக்குற பழைய கேசை எல்லாம் துாசி தட்டி எடுத்து வச்சுக்கிட்டு, 'பார்ட்டி'களை கூப்பிட்டுப் பேசுறாராம்; கேசுல 'பார்ட்டி'க்குக் கிடைக்கிற 'வேல்யூ'க்குத் தகுந்ததுமாதிரி, துட்டை வாங்கிட்டு, கேசை முடிச்சுத் தர்றாராம். இவுங்க ரெண்டு பேரையும் துாக்கலைன்னா பெரிய ஆபத்து காத்திருக்குன்னு பல 'இன்ஸ்'கள் புலம்புறாங்க!''''இன்ஸ்பெக்டர்ன்னதும் ஞாபகம் வந்துச்சு...ரெண்டு 'லேடி' இன்ஸ்களும், ஏ.சி.,யும் சேர்ந்து, நிர்வாணமா என்னைப் படம் எடுத்தாங்கன்னு அந்த 'கல்யாண மோசடி' நடிகை, 'கம்பிளைன்ட்' கொடுத்திருக்காங்களே...எனக்கென்னவோ, அது நம்புற மாதிரியே இல்லை...நீ ஏதாவது விசாரிச்சியா?''''விசாரிக்காம இருப்பனா...அந்தப் பொண்ணு, இதுவரைக்கும் நாப்பது பசங்களையாவது ஏமாத்தி, பல கோடி ரூபா சம்பாதிச்சிருப்பாளாம்; யாராவது போலீஸ்ல 'கம்பிளைன்ட்' கொடுக்கப் போனா, அந்த பையன் பேருல போலியா 'பேஸ்புக்' கிரியேட் பண்ணி, இவளே நிர்வாணப் படத்தை போட்டு விட்டு, அந்தப் பையன் போட்டதா போலீஸ்ல புகார் கொடுத்து, மிரட்டுவாளாம்''''அச்சச்சோ...அதுக்கு பயந்தே, பல பேரு ஓடிருவாங்களே?''''இதுவரைக்கும் அது தான் நடந்திருக்கு...இப்போ அதே துப்பாக்கியை, போலீசுக்கு எதிரா துாக்கி, ஏ.சி.,யையும், ரெண்டு 'லேடி' இன்ஸ்களையும் மிரட்டுறதா சொல்றாங்க'' என்றாள் மித்ரா.''அதுக்காக, போலீஸ் ஆபீசர்கள் எல்லாரும் ஒழுக்கம்னு சொல்ல முடியாது...நம்மூர்ல ஆயுதப்படையில இருக்குற எஸ்.ஐ., ஒருத்தரு, 'லேடி போலீஸ்'கள்ட்ட நடந்துக்கிறதைப் பத்தி, ஏகப்பட்ட புகார் குவியுது...'ரோல் கால்'ல பெண் போலீஸ்களை ரொம்ப நேரம் நிற்க வச்சு, ரசிக்கிறாராம்...அவருக்கு ஒத்து வரலைன்னா, ரொம்ப கஷ்டமான 'டூட்டி'யைப் போட்டு, பழி வாங்குறாராம்...அவரைப் பத்தி, நான் கேள்விப்பட்டதெல்லாம் 'வேற லெவல்' புகார்!'' என்றாள் சித்ரா.அலைபேசியில் வந்த அழைப்பை எடுத்த மித்ரா, 'சுரேஷ்! நாளைக்கு நீயும், சண்முகநாதனும் ஆபீசுக்குப் போய், அவரைப் பாத்திருங்க' என்றாள். சுக்கு மல்லி காபியை சுவைத்துக் கொண்டே, அடுத்த விவகாரத்துக்குள் புகுந்தாள் மித்ரா...''நம்ம கார்ப்பரேஷன்ல 24 X 7 குடிநீர்த் திட்டம் பத்தி, மினிஸ்டர், கமிஷனர் எல்லாருமே பல முறை பேட்டி கொடுத்துட்டாங்களே...அப்புறம் எதுக்கு சி.எம்.ஏ., வந்து, அரைச்ச மாவையே அரைச்சாரு...எல்லாரும் மறந்து போயிருக்குறப்போ, இது ரொம்ப அவசியமா?''''எனக்குமே அந்த 'டவுட்' வந்துச்சு...ஏதோ 'பொலிடிக்கல் பிரஷர்'லதான் வந்து பேட்டி கொடுத்தது, அப்பட்டமாத் தெரிஞ்சுது; ஆனா, அமைச்சர்ட்ட கேக்க முடியாத கேள்வியெல்லாம், அவர்ட்ட கேட்டதுல, அந்த இளம் ஐ.ஏ.எஸ்., கொஞ்சம் ஆடித்தான் போயிட்டாராம்''''அது சரி...நம்ம ஊருக்கு சி.எம்., சி.எம்.ஏ., எல்லாரும் வர்றாங்க போறாங்க...இந்த யுனிவர்சிட்டிக்கு, 'லேண்ட்' கொடுத்த விவசாயிக, 30 வருஷமா இழப்பீடு கிடைக்காம அவதிப்படுறாங்களே...அதை யாருமே கவனிக்க மாட்டாங்களா?''''உண்மைதான் மித்து...நிலம் கொடுத்த பலர் உயிரோடயே இல்லை...பல பேரு, வயசாகி பாடுபடுறாங்க; அவுங்க வாரிசுக பயனடையுறது மாதிரியாவது ஏதாவது செய்யலாம்...ஆனா, 120 கோடி ரூபாய் இழப்பீடுக்கு, வெறும் 40 கோடி ரூபாயை, 'ரெவின்யூ' டிபார்ட்மென்ட்ல கொடுத்திருக்காங்க. அதுவும் ஒழுங்கா 'செட்டில்' ஆகலை!'' என்றாள் சித்ரா.''எடுத்த 999 ஏக்கர்ல, 125 ஏக்கரை, அண்ணா பல்கலைக்குக் கொடுத்திருக்காங்க...அவுங்களும் இழப்பீடு தரலாமேன்னு, பாரதியார் யுனிவர்சிட்டியில கேக்குறாங்க'' என்றாள் மித்ரா.''படிப்பைப் பத்திப் பேசவும், சி.இ.ஓ., ஆபீஸ் மேட்டர் ஒண்ணு ஞாபகம் வந்துச்சு...அங்க இருக்குற 'கிளார்க்' ஒருத்தரு, பகல்லயே பச்சைக்கலர் 'போர்டு' கடைக்குப் போயிட்டு தான், ஆபீசுக்கு வர்றாராம்; வாசம் வராம இருக்க, யாரோ 'ர'கசிய 'வி'யாபாரிகிட்ட பான் மசாலா வாங்கிப் போட்டுக்கிறாராம்...பக்கத்துல போகவே, மத்தவுங்க பயப்படுறாங்க'' என்றாள் சித்ரா.''ஒண்டிப்புதுார்ல இருக்குற டி.இ.ஓ.,ஆபீஸ்ல, அவருக்கு அண்ணணா ஒரு கிளார்க் இருக்காராம்...அவர்ட்ட பைசா கொடுக்காமல் ஒரு அணுவும் அசையாதாம்; டூட்டி மாத்துறதுக்கு 500 ரூபா, ஏதாவது சர்ட்டிபிகேட் வேணும்னா ஆயிரம் ரூபான்னு அவரே 'டேபிள்' போட்டு வச்சிருக்காராம்'' என்றாள் மித்ரா.''இவரெல்லாம் என்ன பெருசா வசூல் பண்ணிடுவாரு...சூலுார்ல இருக்குற பிரேக் இன்ஸ்பெக்டர், பேருல மட்டும் 'சத்திய'த்தை வச்சுக்கிட்டு, வசூல்ல வாரிச்சுருட்றாராம்...லைசென்ஸ் கேட்டு, எந்த ஊர்ல இருந்து, யார் வந்தாலும், அஞ்சாயிரம் ரூபா வாங்கிக்கிட்டு, அவரே போலி டாக்குமென்ட்களை தயார் பண்ணி, லைசென்ஸ் கொடுத்துர்றாராம். அவர் கேட்ட காசைக் கொடுத்தா, வண்டியே ஓட்டிக் காட்டத் தேவையில்லையாம்'' என்றாள் சித்ரா.''விஜிலென்ஸ்க்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்?'' என்று கேட்டாள் மித்ரா.''அது தெரியலை...ஆனா, ஏற்கனவே ஒரு மீட்டிங்ல அவரை 'ஜேடிசி' கடுமையா 'வார்ன்' பண்ணுனாராம்...அதுக்கு அப்புறமும் அவர் திருந்தலையாம். யாராவது கேட்டா, 'நான் கோபிக்காரன்; மினிஸ்டருக்கு சொந்தக்காரன்'னு வாரி விடுறாராம். உண்மையில, அவர் சொந்தக்காரரே இல்லியாம்'' என்றாள் சித்ரா.திடீரென ஏதோ நினைவுக்கு வந்த மித்ரா, 'அக்கா...நான் லைப்ரரி போகணும்; வர்றேன்!' என்று 'பைபை' கூறி கிளம்பினாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X