என்.ஆர்.சி., பட்டியல் சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
என்.ஆர்.சி., பட்டியல் சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

புதுடில்லி,:'அசாம் மாநிலத்தில், என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாதோர் மீது, வலுக்கட்டாயமாக நடவடிக்கை எடுக்கக்கூடாது' என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

என்.ஆர்.சி., பட்டியல் கோர்ட் கண்டிப்பு


அசாம் மாநிலத்தில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமானோர் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.அந்த பட்டியலில், அசாம் மாநில மக்கள் தொகையான, 3.29 கோடியில், 2.89 கோடி பேர் மட்டுமே இடம்பெற்றனர். பட்டியலில் இடம்பெறாத, 40 லட்சம் பேர், தங்களுக்கு எதிராக சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:அசாமில், என்.ஆர்.சி., இறுதி வரைவில் இடம்பெறாதோருக்கு எதிராக, மத்திய அரசு வலுக்கட்டாயமாக எந்தவித நடவடிக்கையும்எடுக்கக் கூடாது.தற்போது வெளியாகி உள்ளது, வரைவு மட்டுமே; இது, இறுதி பட்டியல் அல்ல.என்.ஆர்.சி., வரைவு தொடர்பாக எழும் எதிர்ப்புகள், ஆதரவு கருத்துகளை எதிர்கொள்ளும் வகையில், எஸ்.ஓ.பி., எனப்படும், செயல்பாட்டு நடைமுறையை, மத்திய அரசு உருவாக்க வேண்டும். இந்த செயல்பாட்டு நடைமுறை, 16ம் தேதிக்கு முன், உச்ச நீதிமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.என்.ஆர்.சி., இறுதி வரைவில் இடம்பெறாதோர், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பதற்கு போதிய அவகாசம் தரப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

'துணிச்சல் இல்லாத காங்கிரஸ்'


பா.ஜ., தேசியத் தலைவர்அமித் ஷா, ராஜ்யசபாவில் நேற்று பேசியதாவது:கடந்த, 1985ல், அசாமில், என்.ஆர்.சி., பட்டியல் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில், காங்.,கை சேர்ந்த,

Advertisement

அப்போதைய பிரதமர், ராஜிவ் கையெழுத்திட்டார். ஆனால், என்.ஆர்.சி., பட்டியலை வெளியிட்டு, அதை அமல்படுத்தும் துணிச்சல், காங்.,கிற்கு இல்லை.மாறாக, என்.ஆர்.சி.,யை வெளியிடும் துணிச்சல், பா.ஜ.,விற்கு உண்டு. அதை நிகழ்த்திக் காட்டியுள்ளோம்.அசாமில் சட்டவிரோதமாக வாழும் வங்கதேசத்தவரை பாதுகாக்க, காங்., விரும்புகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். என்.ஆர்.சி., இறுதி வரைவு தயாரிக்கும் பணி, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அமித் ஷாவின் பேச்சுக்கு, காங்., மற்றும் திரிணமுல், காங்., உறுப்பினர்கள், கடும் கண்டனம் தெரிவித்து, கோஷங்கள் எழுப்பினர். இதனால், சிறிது நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது.கடும் அமளி நிலவியதால், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் பதில் அளிக்க முடியாமல் போனது.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-201800:04:20 IST Report Abuse

SathyanarayananSathyasekarenwhat the judges want, they pass the rule, but not to take action, are they joke? another khancongress blunder, should be thrown out in 1975, better late than never, Judges come to sense, this is not a helmet case.

Rate this:
RR Iyengar - Bangalore,இந்தியா
01-ஆக-201820:37:33 IST Report Abuse

RR Iyengarபெரும்பான்மை இனமான ஹிந்துக்கள் (உடனே பாப்பான் அது இதுனு பேச வேண்டாம்) இங்கே வாழ்வாதாரத்திற்கு போராடிக் கொண்டிருக்க அந்நிய நாட்டவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்திற்காக ஏகப்பட்ட சலுகைகள் அளித்து அவர்களை முன்னேற்ற வேண்டிய அவசியம் என்ன ... மம்தாவுக்கு ஒட்டு போடுவதாலா இல்லை உங்கள் இனம் என்பதாலா

Rate this:
davan - Kudavasal,இந்தியா
01-ஆக-201817:22:30 IST Report Abuse

davanமத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன். காங்கிரசும், மம்தாவும் ஓட்டுக்காக இந்த முடிவை எதிர்க்கின்றனர். இந்த நாட்டை அல்லாதவர்கள் இங்கிருந்து வெளியேற்றபடவேண்டியவர்கள். பங்களாதேஷி எப்பொழுதும் பிரச்சினைக்குரியவர்களே

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X