சென்னை : காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் அஜித் நேரில் விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து கட்சி தலைவர்களும், திரை உலகத்தினரும் ஸ்டாலினிடம் நேரில் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அஜித் குமார் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். முன்னதாக இன்று காலை நடிகர் விஜய் நேரில் விசாரித்தார். தொடர்ந்து நடிகர் கவுண்டமணியும் ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். குறிப்பிடத்தக்கது.