பதிவு செய்த நாள் :
மருத்துவம்: கூடுதல் இடம் இல்லை
சுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு

புதுடில்லி : தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள மாணவர்கள் மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்கள் உருவாக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மருத்துவம்,கூடுதல் இடம்,இல்லை, கைவிரிப்பு,Court,Supreme Court,கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,நீதிமன்றம்


தமிழகத்தில், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கு, 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்கள், தாங்களும்

மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்களை உருவாக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதிகள், அருண் மிஸ்ரா, அப்துல் நஸீர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வாதங்கள் முடிந்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதியுள்ள மாணவர்கள், மருத்துவக் கல்லுாரியில் சேரும் வகையில், கூடுதல் இடங்கள் உருவாக்கி, இதற்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்; அத்தகைய உத்தரவுகளை, நீதிபதிகள் பிறப்பித்திருக்கக் கூடாது. எனவே, அதை, நாங்கள் மீண்டும் செய்யப் போவதில்லை.

மருத்துவக் கல்லுாரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்கும்படி, நீதிபதிகள் கூற முடியுமா என்பதே, தற்போதுள்ள கேள்வி.

Advertisement

சட்டப்படி, இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்த எண்ணிக்கையை விட அதிகமாக, ஒரு இடத்தைக் கூட புதிதாக உருவாக்க முடியாது.

அவ்வாறு உருவாக்க, சம்பந்தப்பட்ட மாநில அரசு சம்மதித்தாலும், நாங்கள் அதை செய்ய முடியாது. இட ஒதுக்கீடு, 50 சதவீதத்துக்குள் இருக்க வேண்டுமா என்பதை மட்டுமே, நீதிமன்றம் பரிசீலிக்க முடியும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
02-ஆக-201820:58:54 IST Report Abuse

r.sundaramராஜிவ் கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையில் குழந்தை பெற்ற அவரின் கோரிக்கையை ஏற்று, அவர்தான் குற்றம் செய்தார் அந்த குழந்தை குற்றம் செய்யவில்லை என்ற நியதிப்படி, அந்த பெண் குழந்தை படித்து இன்று பட்டமும் பெற்று வெளிநாட்டில் இருக்கிறார். ஆனால் முகம் தெரியாதவர்கள், மூன்று நான்கு தலைமுறைக்கு முன்னாள் உள்ளவர்கள் தப்பு செய்தார்கள் என்று கூறி இன்றய தலைமுறையை இடஒதுக்கீடு என்று கூறி தண்டிப்பது என்ன நியாயம்.

Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
02-ஆக-201818:10:56 IST Report Abuse

kalyanasundaramNOW PEOPLE WOULD HAVE STUDIED ON RESERVATION AND BECOME DOCTORS ARE NOT SUITED FOR TREATING ANY PERSON. AND EVIDENT NOW THAT ALL WELL DERVING LEAVE COUNTRY AND PROVE THEIR CAPABILITY. THEN INDIA CLAIMS THAT A DOCTOR OF INDIAN ORIGIN GETS WORLD AWARD. BUT FORGOT WHY HE WENT ABROAD. UNLESS DESERVING PEOPLE ARE ED IN ANY FIELD THEN PROGRESS WILL BE STUNTED. POLITICIANS MUST THINK ABOUT COUNTRY THAN THEIR PERSONAL NEEDS. OF COURSE THEY BECOME POLITICIANS ONLY TO AMASS WEALTH FOR THEIR DYNASTY

Rate this:
Gopi - Chennai,இந்தியா
02-ஆக-201815:59:21 IST Report Abuse

Gopiசெப்புமொழி பதினெட்டுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள் . அப்போது மகாகவி இந்த வரிகளை எழுதும் போது மக்கள் தொகை 40 கோடி. இன்று மூன்று மடங்கை தாண்டி 130 ஆகிவிட்டது. இந்த ஜனதாகை பெருக்கத்திற்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் முக்கிய காரணிகளான மருத்துவமனை, மருத்துவர், செவிலியர், ஆசிரியர்கள், விளைச்சல் நிலப்பரப்பு, பள்ளிகள் , கல்லூரிகளை தேவை அறிந்து உருவாக்குவது நம் அரசுகளின் கடமை . அதிலிருந்து (காமராஜரை தவிர ) இந்தியாவில் உள்ள அனைவரும் தவறிவிட்டனர். கிட்டத்தட்ட ஆயிரத்து அறுநூறு பேருக்கு ஒரு மருத்துவர் என ஒன்பதரை லட்சம் மருத்துவர்கள் நம்நாட்டில் உள்ளனர். இதில் நாலாயிரம் டாக்டருக்கு மேல் வெளிநாடு சென்றுவிடுகின்றனர். இதில் உதாரணத்திற்கு சிறுநீரக நிபுணர்களை எடுத்துக்கொண்டால் இந்தியா மொத்தத்துக்கும் 1100 பேர் மட்டுமே. இப்படி இருந்தால் எப்படி நாடு முன்னேறும் மக்கள் நலம்பெறுவர். இதை அவசர நிலையாக கருதி அரசும், நீதித்துறையும் இந்த இடைவெளியை சீர்செய்யவேண்டும். அதற்க்கு அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவ இடங்களை பலமடங்கு உயர்த்தவேண்டும். தமிழகத்தில் உள்ள மொத்த ஏழாயிரம் இடங்களுக்கு 40 ஆயிரம் பேர் போட்டி . இது மிகக்கொடுமை

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X