அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காவேரியில் கருணாநிதி குடும்ப பஞ்சாயத்து
அழகிரிக்கு கட்சி பதவி;
ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு வரும், அவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் பலர், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினிடம் பேசும்போது, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை பற்றியும், தவறாமல் பேசுகின்றனர். அவரை மீண்டும் கட்சியில் இணைத்து செயல்படும்படி, ஸ்டாலினிடம் வலியுறுத்துவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்,அழகிரி


தென் மண்டல அமைப்பு செயலர் பதவி வகித்த அழகிரி, 2014ல், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். அதனால், அதிருப்தி அடைந்த அழகிரி, லோக்சபா தேர்தலிலும், 2016 சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டார். இதனால், தென் மாவட்டங்களில், தி.மு.க., வெற்றி பாதித்தது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியை விமர்சித்த அழகிரி, 'செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை, தி.மு.க., வெற்றி பெறாது' என்றார். இதனால், அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில், ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் உறுதியாக இருந்தனர்.

இச்சூழலில், 'இன்னும், ஆறு மாதத்திற்கு பின், தீவிர அரசியலில் ஈடுபடுவேன்' என, சமீபத்தில், அழகிரி கூறியிருந்தார். இவ்வாறு, அவர் கூறிய சில நாட்களுக்குள், கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை, கோபாலபுரம் வீட்டில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், திடீரென ரத்தம் அழுத்தம் குறைந்து, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அன்றைய இரவு, ஸ்டாலின், அழகிரி,

கனிமொழி, தமிழரசு என, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், டாக்டர்களிடம் ஆலோசித்தனர். அப்போது, அழகிரி தான், 'அப்பாவை, உடனடியாக, காவேரி மருத்துமவனைக்கு அழைத்து செல்லுங்கள்' என, சத்தம் போட்டுள்ளார்.

அவரது கோபத்துக்கு பயந்து, உடனே மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில், கருணாநிதி சேர்க்கப்பட்டார்; சில நொடிகளில், அவரது ரத்த அழுத்தம் சீரானது. மருத்துவமனையில், கருணாநிதிக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து, அழகிரி தெரிவித்த ஆலோசனையை, ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டார்.

மருத்துவமனைக்கு வருகிற நண்பர்கள், தொழிதிபர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கருணாநிதியின் நண்பர்கள் அனைவரையும், மருத்துமவனையில் உள்ள அறையில் சந்தித்து, அழகிரி தனியாக பேசுகிறார். கருணாநிதி குடும்பத்தினரும், முதலில் அழகிரியை சந்தித்து விட்டு தான், ஸ்டாலினிடம் சென்று பேசுகின்றனர். அப்போது, அழகிரியின் அரசியல் வாழ்க்கை குறித்தும், கட்சியில், அவருக்கு முக்கிய பதவி வழங்குவது குறித்தும், பரிந்துரை செய்கின்றனர்.

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், கட்சியை, ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து நடத்த வேண்டும் என்றும், அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.,வில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவதுபோல, அழகிரியும், ஸ்டாலினும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், டில்லி அரசியலை, கனிமொழியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கூறியதாக தெரிகிறது.

சமீப காலமாக, ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள ஒருவரின் தலையீடு, கட்சியில் அதிகம் இருப்பதாக, புகார் சொல்லப்படுகிறது. அந்த நபரை, கட்சி நடவடிக்கைகளில் தலையிடாமல் தடுத்து, ஸ்டாலின் குடும்பத் தொழில்களை மட்டும், அவர் பொறுப்பில் விட்டு விட வேண்டும் என்றும், காவேரியில் நடந்த பஞ்சாயத்தில் பேசப்பட்டு உள்ளது.

Advertisement

கருணாநிதியின் குடும்ப உறுப்பினரும், திரைப்பட இயக்குனருமான ஒருவர், ஸ்டாலினிடம், 'கட்சியை இரண்டாக உடைத்தவர், வைகோ. கடந்த தேர்தலில், கருணாநிதியை, ஆறாவது முறை முதல்வராக பதவி ஏற்க விடாமல் தடுத்தவர். அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளீர்கள். ஆனால், வைகோ பிரிந்து சென்றபோது, தென் மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்திய அழகிரியை, வேண்டாம் என்பீர்களா' என, கோபமாகக் கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு, ஸ்டாலின் பதில் ஏதும் கூறாமல், மவுனமாக இருந்துள்ளார். கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், 'கட்சியில், அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்களின் ஆதிக்கம் தான் உள்ளது. அனைத்து மட்டங்களிலும், அவர்களின் தலையீடு உள்ளது. இதனால், கோஷ்டி பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது. திராவிட சிந்தனை உள்ளவர்களுக்கே, முக்கியத்துவம் தரப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

'அழகிரியை மீண்டும் சேர்க்காவிட்டால், அவர், வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிரானவர்களுடன் சேரவும் தயங்க மாட்டார். அப்படி நடந்தால், அது, தி.மு.க.,வுக்கு ஆபத்தாகி விடும்' என்றும், அந்த பெண் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், மருத்துவமனைக்கு வரும், ஸ்டாலின் ஆதரவாளர்களை, அழகிரி சந்திக்கும்போது, படபடவென்று பொரிந்து விடுகிறார். இதனால், ஸ்டாலின் ஆதரவாளர்கள், அழகிரி பக்கம் திரும்பவே அச்சப்படுகின்றனர். எனவே, அவர்களை எல்லாம் ஊருக்கு செல்லும்படி, ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
02-ஆக-201821:06:38 IST Report Abuse

dandyகுப்பன் சுப்பன் போன்ற கழக கண்மணிகளுக்கு இதயத்தில் மாத்திரம் இடம் ..அறிவாலயத்தில் நகி..ஹி ஹி ஹி இன்னுமா நம்புகிண்றீர்கள் பன்னாடைகளே ?????சூடு சுரணை வெட்கம் மானம் எதுவும் உங்களுக்கு இல்லையா ?

Rate this:
SARAVANAN G - TRICHY,இந்தியா
02-ஆக-201821:17:32 IST Report Abuse

SARAVANAN Gமோர் சாப்பிடு.......koooooool ............... ...

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
02-ஆக-201821:06:35 IST Report Abuse

r.sundaramசேர்த்த சொத்துக்கள் அத்தனையும் கரையும் வரை அவர் உயிரோடு இருக்க ஆசிகள்.

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
02-ஆக-201820:31:55 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)திமுக என்ன அவர்களின் குடும்ப சொத்தா பங்கு போட்டுக் கொள்ள ? குடும்ப தொழிலை மட்டும் மருமகன் பாக்கணுமாம் . அந்த தொழிலுக்கு பணம் வியாபர தொடர்புகள் எல்லாம் எப்படி வந்தது ? இவங்க தொழிலே கொள்ளை மிரட்டல் மூலம் சம்பாதிப்பது தானே ?

Rate this:
adalarasan - chennai,இந்தியா
02-ஆக-201821:01:07 IST Report Abuse

adalarasanஎன்ன புதுசா கேட்கிறீங்க?அதுதான் உலகமே அறியுமே5 வருடங்கலமுன்பே மு.க. அவர்கள், கட்சியை என் குடும்பம் காப்பாத்தும் என்று கூறிவிட்டார்கட்சியும், கட்சி சொத்தயும் அவர்கள் தான் ஆள வேண்டும் என்று அவர் விருப்பம்அதன் படிதான் நடக்கும்? மற்ற உறுப்பினர்கள், கட்சிக்காக உழைத்தால் மட்டும் போதும்உயர் பதவிக்கு எல்லாம் ஆசை படக்கூடாதுவாழ்க ஜனநாயகம்வளர்க்க குடும்ப கட்சி ...

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X