பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பொய் தகவல்களை நீக்குவதற்கு
சமூக வலைதளங்களுக்கு கோரிக்கை

புதுடில்லி : ''சமூக வலைதளங்கள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பொய் தகவல்களை நீக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

பொய் தகவல்,நீக்குவதற்கு,சமூக வலைதளங்களுக்கு,கோரிக்கை


லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது: சமூக வலைதளமான, 'பேஸ்புக்' பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், அதனால், இந்தியர்கள் பலர் பாதிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து, பேஸ்புக் நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டது. அதற்கு பதில் அளித்த அந்த நிறுவனம், மிக குறைந்த எண்ணிக்கையிலான இந்தியர்களின் தகவல்கள் மட்டுமே, உளவு பார்க்கப்பட்டதாக

கூறியது. எனினும், 'அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை' என, பிரிட்டனைச் சேர்ந்த, 'கேம்பிரிட்ஜ் அனலடிகா' நிறுவனம் தெரிவித்தது.

இந்த பதில்களில் திருப்தி அடையாத மத்திய அரசு, இது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியர்களின் தகவல்களை திருடி, அவற்றை, தேர்தல் நேரங்களில் பயன்படுத்த, பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலடிகா உட்பட, எந்த வெளிநாட்டு நிறுவனத்தையும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், இந்திய தேர்தல்கள், ஒளிவு மறைவற்றவை; பரிசுத்தமானவை.

அதனால், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தங்கள் வலைதளங்களில் இடம் பெறும் தவறான தகவல்களை நீக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து, குறிப்பிட்ட நாளில், லட்சக்கணக்கான தகவல்கள் வருகின்றன என்றால், அதை கண்டுபிடிப்பதில் சிரமம் இல்லை. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அந்த தகவல் களை நீக்க முடியும்.

அதனால், சமூக வலைதள நிறுவனங்கள், குறை தீர்வு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். புகார்கள் மீது, இந்திய சட்டத்துக்கு உட்பட்டு, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

தனிப்பட்டவர்களின் தகவல்கள், விபரங்களை மதிக்கிறோம். ஆனால் அவை, பயங்கரவாதிகளையும், ஊழல்வாதிகளையும் காப்பாற்றுவதாக இருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநிலங்களுக்கு கோரிக்கை :

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், லோக்சபாவில் நேற்று கூறியதாவது: தகவல் பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழு, தன் பரிந்துரைகளை சமீபத்தில் சமர்ப்பித்தது. தகவல் பாதுகாப்பு குறித்து, தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, மாநில அரசுகளின் தலைமை செயலர்களுக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், விரைவில் கடிதம் எழுதுவார். அந்த கருத்துகளை கேட்ட பின், மசோதா தயாரிக்கப்பட்டு, பார்லிமென்டில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா
02-ஆக-201810:46:33 IST Report Abuse

Kumarஎன்ன MR ரவிசங்கர், உங்களை விட எதிர்கட்சிகள் சமூக வலை தளத்தில் ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பதால் தாக்கு பிடிக்க முடியாமல் இந்த வேண்டு கோள். 2014 இல் நீங்க விதைத்த வினை இப்போ அறுவடை பண்ணுறீங்க.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
02-ஆக-201808:35:34 IST Report Abuse

Srinivasan Kannaiyaபிறகு உங்களுடைய பிரமாண்டங்கள் எதுவும் இருக்காதே... சௌகரியமா...?

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-ஆக-201805:44:28 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்பாஜகவின் அம்புட்டு நியூஸும் எடுக்க வேண்டி வருமேஜி.. பரவாயில்லையா?

Rate this:
02-ஆக-201807:31:11 IST Report Abuse

பாலாஆமாம் முழுக்க முழுக்க உங்க ஆளுங்க பரப்புர பா.ஜ எதிர்ப்பு செய்திய தானே சொல்றீங்க? ...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X