பதிவு செய்த நாள் :
டோக்லாம் விவகாரத்துக்கு தீர்வு
மத்திய அமைச்சர் சுஷ்மா தகவல்

புதுடில்லி : ''டோக்லாம் விவகாரம் தொடர்பாக, இந்தியா - சீனா இடையிலான பிரச்னைக்கு, துாதரக மட்டத்திலான பேச்சு மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

BJP,Sushma Swaraj,சுஷ்மா,சுஷ்மா சுவராஜ்,பா.ஜ,டோக்லாம்,விவகாரத்துக்கு,தீர்வு


பதற்றம் :


சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியை, இந்தியாவும், சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. கடந்த, 2017, ஆக., 28ல், இந்த பகுதியில், சாலைகள் அமைக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டதால், மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அங்கு, சீன ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக, இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால், மூன்று வாரங்களாக அங்கு பதற்றம் நிலவியது. நீண்ட பேச்சுக்கு பின், இரு தரப்பு வீரர்களும் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர். இருப்பினும், இந்த விவகாரத்துக்கு முழுமையான தீர்வு எட்டப்படாமல் இருந்தது.

இந்நிலையில், லோக்சபாவில் நேற்று, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: சமீபத்தில், சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வூஹான் நகரில், சீன அதிபர் ஜி ஜினபிங்குடன் பேச்சு நடத்தினார்.

இந்தியா - சீனா நாடுகள் இடையே, பரஸ்பர நம்பிக்கை, புரிதல், ஒத்துழைப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என, இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். அதன் பின், டோக்லாம் விவகாரத்துக்கு, துாதரக அளவிலான பேச்சு மூலம் தீர்வு காணப்பட்டு உள்ளது.

Advertisement



சுற்றுப்பயணம் :


இதையடுத்து, டோக்லாம் பகுதியில், ஏற்கனவே இருந்த நிலை தொடர வேண்டும் என்ற கருத்தை, இரு தரப்பும் ஏற்றன. வூஹானில் நடந்த பேச்சின் பலனாக, இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், சீன ராணுவ அமைச்சரும், வெளியுறவுத் துறை அமைச்சரும், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Navn - Newyark,யூ.எஸ்.ஏ
02-ஆக-201811:49:19 IST Report Abuse

Navnசீனாவுக்கு முன் வல்லரசு இந்தியா EPS, OPS குனிந்துதான் காலம் தள்ளவேண்டும். சீனாவின் வலிமை அமெரிக்காவுக்கு சவாலானது. தேவையில்லாமல் நம் அரசியல் வியாபாரிகள் இந்தியாவை சீனாவுக்கு ஒப்பிட்டு பில்டப் கொடுக்க வேண்டாம்...

Rate this:
Yezdi K Damo - Chennai,இந்தியா
02-ஆக-201813:41:30 IST Report Abuse

Yezdi K Damoஇதுல செம காமடி என்னன்னா இந்த டாஸ்மாக் நாட்டு பிஜேபி அல்லக்கைகள் கொடுக்கும் தேவையில்லாத பில்டப். ...

Rate this:
dinesh - pune,இந்தியா
02-ஆக-201809:35:26 IST Report Abuse

dineshஇந்தியா டோக்லாமை உரிமை கொண்டாட வில்லை. அவர்கள் டோக்லாம்சில் படைகளை நிறுத்தினால் நமது நாட்டுக்கு அச்சுறுத்தல். அதனால் தான் அவர்கள் நாட்டு எல்லையில் அவர்கள் படையை நிறுத்த இந்தியா எதிர்க்கிறது.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-ஆக-201821:58:40 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அதை தான் அவனுங்களும் சொல்றானுங்க.. இந்தியா கொண்டாட அங்கே ஒரு உரிமையும் இல்லைன்னு.. நமது வலிமையை காட்ட வேண்டுமென்றால் நாம் வலிமையை காட்ட வேண்டும். வாய்லே வெறும் வடை சுடக்கூடாது. ...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
02-ஆக-201808:33:53 IST Report Abuse

Srinivasan Kannaiyaயார் என்ன செய்தாலும் பேசக்கூடாது என்று சைகையில் காட்டுகிறார்...

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X