93 வயது ஒவியர் பார்வதி

Updated : ஆக 02, 2018 | Added : ஆக 02, 2018 | கருத்துகள் (3)
Share
Advertisement
93 வயது ஒவியர் பார்வதி

சென்னை நங்கநல்லுாரைச் சேர்ந்தவர்பிரபல டாக்டர் ஹரிகரன். இவரது தாயார் பார்வதி, வயது 93 ஆகிறது.பார்வதியி்ன் கணவர் சுந்தரம் கால்நடை துறையி்ல் உயரதிகாரியாக இருந்தவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சார்ந்தவரான பார்வதி அந்தக்காலத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்தவர் படிக்கும் போது ஒவியம் வரைவதில் ஈடுபாடு உண்டு ஆனால் திருமணமாகி கணவர் குழந்தைகள் என்று வந்த பிறகு குடும்பத்தை கவனிக்கவே நேரம் சரியாக இருந்துவிட்டது.

கடந்த 2010ல் கணவர் சுந்தரம் இறந்த பிறகுதான் இவருக்கு தனிமை தட்டுப்பட்டது.தனிமையில் கிடைத்த நேரத்தை வீணாக்க விரும்பாமல் சிறு வயதில் விட்டுப்போன ஒவியப் பழக்கத்தை கையில் எடுத்துக்கொண்டார்.

ஏதாவது புத்தகத்தை பார்த்தோ அல்லது கற்பனையாகவோ பென்சிலால் படங்கள் வரைய ஆரம்பித்தார் ஆரம்பத்தில் காந்தி நேரு எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்களின் படங்களை வரைந்தவர் பிறகு சாமி படங்கள் மட்டுமே வரயை ஆரம்பித்தார்.

ஒரு நோட்டுப்புத்தகத்திற்கு இருபது படங்கள் என்று இதுவரை 66 நோட்டுப்புத்தகங்களில் 1320 படங்களை வரைந்துள்ளார்.இந்த ஒவியங்கள் எல்லாம் தன் மனதிருப்திக்கும் சந்தோஷத்திற்கும்தான் என்றும் அடக்கத்துடன் குறிப்பிடுகிறார்.

எந்த வயதிலும் தனக்குள் உள்ள கலைக்கு உயிர் கொடுக்க முடியும் என்பதற்கு பார்வதியம்மா ஒரு நல்ல உதாரணம்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஆக-201820:08:18 IST Report Abuse
Bhaskaran திருராகவன் சொன்னது நூற்றில் ஒருவார்த்தை
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
03-ஆக-201813:34:11 IST Report Abuse
raghavan நல்ல முன் உதாரணம், வீட்டில் வேலை வெட்டி இல்லாமல் சீரியல் பார்த்து, ஊர் வம்பு பேசி திரியும் இள வயது பெண்களும் கற்று கொள்ளவேண்டிய விஷயம்..
Rate this:
Share this comment
Cancel
Munukur SridharanChettiar - Madipakkam,இந்தியா
03-ஆக-201807:44:30 IST Report Abuse
Munukur SridharanChettiar எந்த ஒரு கலைக்கும் வயது ஒரு பொருட்டல்ல. கண்டிப்பாக பாராட்ட வேண்டியவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X