மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணமா ? | Dinamalar

மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணமா ?

Added : ஆக 02, 2018 | கருத்துகள் (62)
Advertisement
மீண்டும், பின்னோக்கி, பயணமா ? ஓட்டுச்சீட்டு, மின்னணு இயந்திரம்

புதுடில்லி: மீண்டும் பழைய ஓட்டுச்சீட்டு முறைக்கே மாற வேண்டும் என 17 எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். 2019 பொது தேர்தலில் இந்த முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை இது குறித்து முக்கிய முடிவு எடுக்கவிருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
சமீபத்திய தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வுக்கு சாதகமாக வந்ததால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செட் செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. இதன் காரணமாக ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வர வலியுறுத்தியிருக்கலாம் என தெரிகிறது. உலக அளவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்தி ஓட்டு முறை பல்வேறு முன்னணி நாடுகளில் நடைமுறைக்கு வராத நிலையில் இந்தியாவில் இயந்திர ஓட்டுப்பதிவு பெரும் பாராட்டை பெற்றிருந்தது. ஆனால் எதிர்கட்சியின் தற்போதைய கோரிக்கை நாட்டை பின்னோக்கி இழுத்து செல்லும் முயற்சி என ஆளும் பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.


திமுக, அதிமுக நிலை ?


காங்கிரஸ், மார்க்., கம்யூ., சமாஜ்வாடி, ராஷ்ட்டிரிய ஜனதாதளம், திரிணாமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம், தெலுங்குதேசம், சிவசேனா உள்ளிட்ட 17 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தின் திமுக, அதிமுக தங்களின் கருத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
03-ஆக-201810:19:46 IST Report Abuse
தமிழர்நீதி பின்னோக்கிப் போனாலும் மக்கள் யாரை தங்கள் பிரதிநிதியாக ஜனநாயக கடமையாற்றிட விரும்புகிறார்களோ அவர்கள் தேர்வாகிட வாய்ப்புகள் வாக்குசீட்டுமுறை தேர்தலில் அதிகம் . இன்னும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் பிஜேபி ஆட்சியில் சட்டப்பாதுகாப்புடன் சுருட்டிவருவதால் இவர்கள் பிஜேபி கிக்கு ஆதரவாக EVM ல தில்லுமுல்லு நடந்துமுடிந்த தேர்தல்கள் போல செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் . தற்போது பிஜேபி ஊழலுக்கு ஆதரவாக இருப்பதால் அரசு ஊழியர்கள் பிஜேபி பாதுகாப்பில் வளம்பெற விரும்புகிறார்கள் . தேர்தல் நேரத்தில் இவர்கள் பிஜேபி ஏஜெண்டாக செயல்படுவதை தடுக்க ஒரே வழி EVM ஒழித்து வாக்குசீட்டு முறைக்கு மாறுவதுதான் .
Rate this:
Share this comment
Cancel
Jesudass Sathiyan - Doha,கத்தார்
03-ஆக-201808:39:30 IST Report Abuse
Jesudass Sathiyan EVM இயந்திரத்தின் நம்பகத்தன்மையை BJP கேள்விக்குறி ஆக்கியதனின் விளைவு?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஆக-201801:11:46 IST Report Abuse
Pugazh V ஓட்டுச்சீட்டு முறை வந்து விடுமோ என்று பீஜேபீயினர் பயப்படுகிறார்கள். ஏன் என்று சொல்லவும் வேண்டுமோ? ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் தானே தைரியமாக இருக்க முடியும். ஐந்து ஆண்டுகள் நடுத்தர/ ஏழை மக்களுக்கு நன்மை எதுவுமே செய்யவில்லை. உபத்திரவம் அவதி தான் செய்தார்கள். அதனால் இப்போது வாக்குச்சீட்டு முறை வருமோ என்று பயப்படுகிறார்கள். வாக்கு இயந்திரம் பயன் படுத்தி னாலும் பூத் கேப்சரிங் பண்ணமாட்டாங்களா? எலக்ட்ரானிக் கலாக அதைத்தானே பணணினார்கள். உ.பி. யில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சீட்டு முறை இருந்த எல்லா இடங்களிலும் பீஜேபீ தோல்வி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X