சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நாதெள்ளா,நகை கடை,ரூ.328 கோடி,சொத்துகள்,முடக்கம்

சென்னை உட்பட, பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வந்த, என்.எஸ்.ஜெ., எனப்படும், 'நாதெள்ளா சம்பத் ஜுவல்லரி' நகைக் கடை நிறுவனத்தின், 328 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி, வங்கி பண மோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த நிரவ் மோடியும், அவரது உறவினர், மெஹுல் சோக்சியும், பல்வேறு நாடுகளில், தங்கம், வைரம், பிளாட்டினம் என, வித விதமான நகைகள் விற்பனை செய்யும் கடைகளை, 'கீதாஞ்சலி ஜெம்ஸ்' என்ற பெயரில் நடத்தி வந்தனர்.

கடன் மோசடி :


இவர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 11 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் கடன் பெற்று, ஏப்பம் விட்டுள்ளனர். 'ரோட்டோ மெக்' பேனா நிறுவன அதிபர், விக்ரம் கோத்தாரி, பொதுத் துறை வங்கிகளில், 3,695 கோடி ரூபாய் கடன் வாங்கி, மோசடி செய்துள்ள விவகாரமும், அதைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'டோடம் இன்பிராஸ்ட்ரக்சர்' என்ற

நிறுவனத்தின் அதிபர், சலாலித், அவரது மனைவி கவிதா ஆகியோர், 1,394 கோடி ரூபாய், வங்கி கடன் பெற்று, மோசடி செய்தனர்.

அந்த வரிசையில், சென்னை உட்பட, பல நகரங்களில், 'கனிஷ்க்' நகைக் கடை நடத்தி வந்த, பூபேஷ்குமார் ஜெயின், அவரது மனைவி நீடா ஜெயின் உட்பட, ஐந்து பேர், 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்துள்ளனர். அதேபோல், சென்னையில், தி.நகர், அண்ணா நகர், வேளச்சேரி என, பல்வேறு இடங்களிலும், ஓசூர், வேலுாரிலும், 'நாதெள்ளா சம்பத் ஜுவல்லரி' என்ற நகைக் கடைகளை நடத்தி வந்தவர், ரங்கநாத குப்தா. அவரும், அவரது மகன்கள், பிரபன்னகுமார், பிரசன்னகுமார், உறவினர்

கோடா சுரேஷ் ஆகியோர், பாரத ஸ்டேட் வங்கி உட்பட, பல வங்கிகளில், 380 கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பித் தராமல், மோசடி செய்துள்ளனர்.

நகை சேமிப்பு :


மேலும், அவர்கள் நடத்தி வந்த, 'நாதெள்ளா சம்பத் செட்டி' என்ற நகைக் கடைகளில், தங்க நகை சேமிப்பு திட்டத்தை துவங்கி, 21 ஆயிரம் பேரிடம், 75 கோடி ரூபாய் வசூலித்தனர். ஆனால், 2017 அக்டோபரில், திடீரென இந்த கடைகள் மூடப்பட்டன. இதனால், பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் ஏமாந்தனர்; அவர்கள், போலீசில் புகார் அளித்தனர். அதேபோல், இவர்களால் மோசடிக்கு ஆளான வங்கி அதிகாரிகளும், சி.பி.ஐ.,யில் புகார் செய்தனர்.

சி.பி.ஐ., விசாரணையில், ரங்கநாத குப்தா உள்ளிட்ட நால்வரும், வங்கி கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, 2018 ஏப்ரலில், நால்வர் மீதும், சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், அவர்கள், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள், வழக்கு பதிந்து, விசாரிக்க துவங்கினர். அப்போது, வங்கியில் கடன் பெற்ற பணத்தில், ரங்கநாத குப்தா மற்றும் அவரது மகன்கள், பல கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி குவித்திருப்பது தெரிய வந்தது.

பண்ணை வீடு :


இதையடுத்து, அவர்களுக்கு சொந்தமாக, சென்னையில், தி.நகர், மயிலாப்பூர் - லஸ் கார்னர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், அம்பத்துார், மீஞ்சூரில் உள்ள நிலம், கட்டடங்கள். உத்தண்டியில் உள்ள பண்ணை வீடு என, 37 அசையா சொத்து உட்பட, 328 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்து, முடக்கினர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
03-ஆக-201816:30:42 IST Report Abuse

ganapati sbஉண்ண தினமும் மூன்று வேளை உணவு, பொங்கல் தீபாவளி புதுவருடம் பிறந்தநாள் என வருடம் நான்கு உடுக்க உடை, பணி நிமித்தம் பயணிக்க பத்தாண்டுக்கு வாகனம், குழந்தைகள் பள்ளி முதல் கல்லூரி வரை இருபதாண்டு படிப்பு, குடும்பத்தோடு இருக்க ஐமபத்தாண்டுக்கு ஒரு வீடு தவிர வேறெதற்கு இத்தனை பணம் முறைகேடாக சேர்த்து பதுக்கி வைக்கிறான் மனிதன் .வாரிசுக்கு படிப்பை அல்லது தொழிலை கொடுத்துவிட்டால் போதும் அவன் சுயமாக பிழைத்து கொள்ள போகிறான் . கடைசியில் எதை கொண்டு போக போகிறான் . ஊருணி நீர் நிறைந்தற்றே உலகம் பேரறிவாளன் திரு என வள்ளுவன் சொன்னது போல .கூடுதலாக இறை அருளால் கிடைக்கும் பணத்தை வசதி இல்ல சொந்த ஜாதி மொழி மத தேச மக்களுக்காவது தானம் தர்மம் என பகிர்ந்தளிக்கலாமே .அல்லது வேறு துறைகளிலும் தொழில் துவக்கி வேலை வாய்ப்பை அளிக்கலாம்

Rate this:
Jayanthi Srinivasan - chennai,இந்தியா
03-ஆக-201823:20:26 IST Report Abuse

Jayanthi Srinivasanvery true...

Rate this:
jagan - Chennai,இந்தியா
04-ஆக-201800:31:48 IST Report Abuse

jaganஅப்போ பென்ஸ் காரு, வெளிநாட்டு சுற்றுலா எல்லாம் ?...

Rate this:
Nithiyanandan Baskar - tuticorin,இந்தியா
03-ஆக-201816:07:07 IST Report Abuse

Nithiyanandan Baskarமோடியின் வேட்டை தொடரட்டும்

Rate this:
VK Jayalakshmi Jayanthi - Chennai,இந்தியா
03-ஆக-201814:59:33 IST Report Abuse

VK Jayalakshmi Jayanthiஏமாந்தவர்களில் நானும் அடங்குவேன் மூடு விழாக்கு 2 நாள் முன்னர் தான் ரூ 20000/- கட்டி தொலைத்தேன் ஆண்டவன் தான் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும் .

Rate this:
jagan - Chennai,இந்தியா
03-ஆக-201821:37:29 IST Report Abuse

jaganவாங்கி இருக்கும் போது இவர்களிடம் பணம் போட்ட உங்களுக்கு தான் ஆண்டவன் தெளிவான புத்தியை தரவேண்டும்....ஆழ்வார் பேட்டை, ராயப்பேட்டை , இப்போ இது.......

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X