பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதியின் நலம் விசாரித்தார் ஜனாதிபதி

Updated : ஆக 05, 2018 | Added : ஆக 05, 2018 | கருத்துகள் (43)
Advertisement
கருணாநிதி, திமுக,  ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த்

சென்னை: சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார். பிற்பகல் 2.20 மணி அளவில் விமானம் நிலையம் வந்த ஜனாதிபதி ராம்நாத்தை, கவர்னர், சபாநாயகர் தனபால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

கருணாநிதி உடல்நலம்: ஜனாதிபதி விசாரித்தார்

இதன் பின்னர் அங்கிருந்து காவேரி மருத்துவமனைக்கு சென்றார் . அங்கு, கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் கேட்டறிந்தார். ஜனாதிபதியுடன் கவர்னர் பன்வாரிலால், அமைச்சர் ஜெயக்குமார் உடன் வந்தனர். ஜனாதிபதி வருகையைமுன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


குணமடைய வாழ்த்து

சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-ஆக-201814:55:24 IST Report Abuse
Nallavan Nallavan ஜனாதிபதியாவது கலைஞரைப் பார்க்க முடிந்ததா ???? இல்லை என்றால் ஏன் ???? ராகுல் மற்றும் வெங்கையாவுக்குக் கிடைத்த "பாக்கியம்" ஏன் இவருக்கு கிட்டவில்லை ?? இக்கேள்விகளுக்குத் தேவை திமுக ஆதரவாளர்களின் நேரிடையான பதில் .....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-ஆக-201814:11:31 IST Report Abuse
Nallavan Nallavan வைகோவின் லேட்டஸ்ட் விசிட் -இல் அவருடைய காரின்மீது திமுக -வினர் (தலைவரை ஆறாவது முறையா முதல்வர் ஆகவிடாம தடுத்தவன் இவன்தான்யா என்று கூறி) ஓங்கி குத்தினார்களாமே ?
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-ஆக-201813:55:56 IST Report Abuse
Nallavan Nallavan இந்தியக் குடிமக்கள் அனைவரும் நேரில் கண்டு விசாரித்ததாகவே கருதலாம் என்று ஒரு வாசகர் குறிப்பிட்டிருந்தார் .... இந்த குறிப்பிட்ட விசாரிப்பில் சில மர்மங்கள் அரசியல் மேகக்கூட்டங்களிடையே புதைந்துள்ளன .... அவை கூடிய வெளியாகும் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X