ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் எழுத்து காதல்! | Dinamalar

ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் எழுத்து காதல்!

Added : ஆக 05, 2018 | |
நாட்குறிப்பு எழுவதற்கே போதிய நேரமின்றி பணியாற்றி வரும் அரசு உயர் அதிகாரிகள் பலரின் நிலையை நாம் அறிவோம். அவர்கள் அன்றாட துறை சார்ந்த பணிகள், தகவல்களை திரட்டிக் கொண்டு திறம்பட செய்யவேண்டும் என்ற முனைப்புடன் தான் எப்போதும் இருப்பர். இத்தகைய சூழலில் வாசிப்பு ,எழுத்து மீது கொண்ட காதலால் 9 நுால்களை எழுதி உள்ளார் தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையாளராக உள்ள ஐ.ஏ.எஸ்.,
ஐ.ஏ.எஸ்., அதிகாரி, எழுத்து காதல்,ராஜேந்திரன்

நாட்குறிப்பு எழுவதற்கே போதிய நேரமின்றி பணியாற்றி வரும் அரசு உயர் அதிகாரிகள் பலரின் நிலையை நாம் அறிவோம். அவர்கள் அன்றாட துறை சார்ந்த பணிகள், தகவல்களை திரட்டிக் கொண்டு திறம்பட செய்யவேண்டும் என்ற முனைப்புடன் தான் எப்போதும் இருப்பர். இத்தகைய சூழலில் வாசிப்பு ,எழுத்து மீது கொண்ட காதலால் 9 நுால்களை எழுதி உள்ளார் தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையாளராக உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன்.அவர் கூறியதாவது: திருமங்கலம் அருகே வடகரை என்ற கிராமத்தில் பிறந்தேன். தந்தை ஊர் தலைவராக இருந்தார். அம்மா பள்ளி ஆசிரியை. ஊர் நுாலகத்திற்கு புதிதாக வாங்கப்படும் நுால்கள், எங்கள் வீட்டில் வைத்து சரிபார்க்கப்பட்டு கொண்டு செல்லப்படும். சிறுவயதில் ஏராளமான நுால்கள் பற்றி அறிந்து கொண்டேன். நுால்கள் மீது காதல் உண்டானது.மூத்தவர்களிடம் வரலாற்றுக் கதைகள், பழங்கதைகளை ஆர்வத்துடன் கேட்டு வளர்ந்தேன். அப்போதே எனக்கு வரலாறு மீது ஆர்வம் ஏற்பட்டது. நா.பார்த்தசாரதியின் கதைகளை படித்துவிட்டு, அது போலவே நானும் எழுதி பார்த்துள்ளேன். அது நடந்தது என் பத்து வயதில். கிராமத்தை மையமாக கொண்டு பாதாலி என்ற சிறுகதையை எழுதினேன். அதனை தொடர்ந்து சட்டப் படிப்பு, ஐ.ஏ.எஸ்., படிப்பு என காலங்கள் ஓடியது. என்னுடைய முதல் 2 நுால்களை முதல்வராக இருந்த ஜெ., வெளியிட்டார்.2008 ல், 250 ஆண்டு கால வரலாற்றை சொல்லும் 'வந்தவாசி போர்' என்ற நுாலை வெளியிட்டேன். செப்பேட்டில் ஆர்வம் உண்டானது, அதில் கிடைத்த அறிவு அனுபவங்களை கொண்டு சோழர்கால செப்பேடு, பாண்டியர், சேரர், பல்லவர் கால செப்பேட்டு நுால்களை எழுதினேன். இதற்கு ஏராளமான விருது, பாராட்டுகள் கிடைத்தது. அதில் முக்கியமானது' தினமலர் 'நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது.உலக வரலாறு, இந்திய வரலாறு என மூழ்கி கிடந்த என்னுள் எனது கிராமம், குடும்ப வரலாற்றை எழுத வேண்டும் என தோன்றியது. உண்மை சம்பவங்களை கொண்டு 'வடகரை' என்ற நுாலை எழுதினேன். அதனை தொடர்ந்து '1801' என்ற நுாலில் தென்மாவட்ட விடுதலை போராட்ட வீரர்களை பதிவு செய்துள்ளேன். தொடர்ந்து 3 நுால்களை எழுத திட்டமிட்டுள்ளேன். அரசு பணிகளுக்கு இடையே என்னுடைய தேடல், வாசிப்பு, எழுத்து பணியை கைவிடுவதில்லை என்றார்.

இவரை பாராட்ட 99620 -20012

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X