93 ஹீரோ நடிக்கும் '93 நாட் அவுட்'

Added : ஆக 05, 2018
Advertisement
இதயத்தில் 'பேஸ் மேக்கர்' பொருத்திய 93 வயது தாத்தா சைக்கிள் ஓட்ட ஆசைப்படுகிறார், உயிருக்கு ஆபத்து வேண்டாம் என தடுக்கிறார்கள் டாக்டர். அடுத்தாக அந்த தாத்தா 'கடவுளை தேடி' என்ற விலை உயர்ந்த புத்தகம் வாங்க பணமின்றி தவிக்கிறார்... தாத்தா, ஆசைப்பட்டபடி சைக்கிள் ஓட்டினாரா, விரும்பிய புத்தகம் வாங்கினாரா என்பதே '93 நாட் அவுட்'குறும்படத்தின் மையக் கதை. தள்ளாத வயதிலும்
93 ஹீரோ நடிக்கும் '93 நாட் அவுட்'

இதயத்தில் 'பேஸ் மேக்கர்' பொருத்திய 93 வயது தாத்தா சைக்கிள் ஓட்ட ஆசைப்படுகிறார், உயிருக்கு ஆபத்து வேண்டாம் என தடுக்கிறார்கள் டாக்டர். அடுத்தாக அந்த தாத்தா 'கடவுளை தேடி' என்ற விலை உயர்ந்த புத்தகம் வாங்க பணமின்றி தவிக்கிறார்...

தாத்தா, ஆசைப்பட்டபடி சைக்கிள் ஓட்டினாரா, விரும்பிய புத்தகம் வாங்கினாரா என்பதே '93 நாட் அவுட்'குறும்படத்தின் மையக் கதை. தள்ளாத வயதிலும் துள்ளி குதிக்கலாம் என்ற நம்பிக்கையை முதியோர்கள் மனதில் விதைக்கும் இந்த குறும்படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வாங்கி குவித்துள்ளது. சினிமா கனவுகளுடன் குறும்படம் இயக்கி 'கோலிசோடா 2' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் திருச்சி அருத்ரா சரவணக்குமார் குறும்பட பயணம் குறித்து மனம் திறக்கிறார்... ''அப்பாவின் கட்டுமான தொழிலை கவனித்து வருகிறேன். ஒரு குறும்படம் பெரும்படமாக இருக்க வேண்டும்; அதுவும் இந்த சமூகத்திற்கு ஏதவாது ஒரு விஷயத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதற்காக நான் தேர்ந்தெடுத்த கதைக்களம் '93 நாட் அவுட்'. என்னுடைய 93 வயது தாத்தா கலியபெருமாள் தான் இந்த படத்திற்கு ஹீரோ.

நிஜமாகவே அவருக்கு இதயத்தில் 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதனால், அதில் இருந்தே என் கதைக்கான கருவை உருவாக்கினேன். வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து தாத்தாவால் நடிக்க முடியாது என்பதால் 20 நிமிடம் ஓடும் படத்திற்காக 2016ம் ஆண்டு 50 ஞாயிறுகளில் படப்பிடிப்பு நடத்தி முடித்தேன். அதற்கு பின் கொல்கத்தா திரைப்பட விழாவிற்கு வந்த 2000 படங்களில் முதல் 20 படம் தேர்வானது. அந்த 20ல் தாத்தா படமும் ஒன்று. ஹாலிவுட்டில் 'பேராமவுன்ட்' நிறுவன திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு 10 லட்சம் வரை வருமானம் பெற்று தந்தது. 2015 ஆக., 15ல் தியேட்டர் ஒன்றில் வெளியாகி 50 ஆயிரம் கலெக்ஷனை அள்ளியது. இதுவரை இந்த படம் 125 விருதுகளை பெற்று, சில நாட்களுக்கு முன் 'YUV' அலைபேசி ஆப்பில் வெளியாகி இருக்கிறது.

இப்போது என் தாத்தா என்னோடு இல்லை தவறிவிட்டார். ஆனால், அவர் இருந்த நாட்களில் நடந்த விழாக்களில் அவரோடு இணைந்து விருதுகளை வாங்கினேன். என் தாத்தா 'லிம்கா' சாதனை புத்தகத்தில் உலக அளவில் வயதான அறிமுக நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் நான் இயக்கிய துாய்மை இந்தியா பற்றி பேசும் 'முதலிடம் நோக்கி' என்ற குறும்படத்தை யூடியூப்பில் 3 கோடி பேர் பார்த்துள்ளனர். 'திரு கங்கை' என்ற படமும் 25 விருதுகளை வாங்கி கொடுத்தது... என்று, பேசியபடி அடுத்த படத்திற்கான கதையை யோசிக்க ஆரம்பித்தார்.... இந்த குறும்படத்தை பார்க்க கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து YUV ஆப் டவுண்லோட் செய்யலாம் அல்லது www.myyuv.com இணையத்தளத்தில் பார்க்கலாம். arudrapictures@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X