எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் பிரசவம்; ஆபத்துகள் அதிகம்!

Updated : ஆக 06, 2018 | Added : ஆக 06, 2018 | கருத்துகள் (17)
Advertisement
வீட்டில் பிரசவம்; ஆபத்துகள் அதிகம்!

''மருத்துவமனை பிரசவங்களால், உயிர் இழப்புகள் குறைந்துள்ளன; வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்தானது,'' என, பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர், இளங்கோ கூறினார்.

l திருப்பூர் மாவட்டம், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், தன் மனைவி கிருத்திகாவுக்கு, ஜூலை மாதம், வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அதிக ரத்த போக்கு காரணமாக, கிருத்திகா உயிரிழந்தார்lதேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவர், தன் மனைவி மகாலட்சுமிக்கு, சில தினங்களுக்கு முன், வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். அவருக்கு, ஆண் குழந்தை பிறந்தது.ஆனால், குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்கவில்லை. பின், சித்தா டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி, தொப்புள் கொடி அகற்றப்பட்டது.

இந்த சம்பவங்கள், தமிழகம் முழுவதும், அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.'வீட்டில் பிரசவம் பார்த்தல் கூடாது; மருத்துவமனைகளில் தான் பிரசவம் பார்க்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை கிடைக்கவிடாமல் செய்வது, தண்டனைக்குரிய குற்றம். அத்தகையோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு எச்சரித்துஉள்ளது.தமிழகத்தில், 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, லட்சத்திற்கு, 400 பேர் உயிரிழப்பு என்றிருந்த நிலை தற்போது, 62 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், வீட்டிலேயே, பாட்டி வைத்தியம் என, இளம் தலைமுறையினரிடம் ஏற்பட்டுள்ள மாற்றம், பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர், இளங்கோ கூறியதாவது:தமிழகத்தில், 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. இவற்றில், 30 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கிறது. வலியின்றி பிரசவம் வேண்டும் என்பதற்காக, அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை பெற்றெடுக்கும் நிலை அதிகரித்து வருகிறது.இவ்வாறு அறுவை சிகிச்சை செய்யப்படும் பெண்களுக்கு, மீண்டும் அறுவை சிகிச்சை வழியாக குழந்தை பிறக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, அதிக ரத்தப் போக்கு ஏற்படுகிறது.இதை உணர்ந்த இளம் தலைமுறையினர், சுக பிரசவம் செய்ய விரும்புகின்றனர். அதற்காக, வீட்டில் பிரசவம் என்பது சரியானது அல்ல. உலக சுகாதார நிறுவனமும், மருத்துவமனையில் பிரசவம் என்பதையே வலியுறுத்துகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், தரமான பிரசவ சிகிச்சை அளிக்க, அனைத்து வசதிகளும் உள்ளன. அரசு மருத்துவமனைகளில், தேவையின்றி, அறுவை சிகிச்சை மேற்கொள்வதில்லை. வீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகளை, மக்கள் உணருவதில்லை.

குறிப்பாக, 70 சதவீத பெண்களுக்கு ரத்த சோகை உள்ளது. பிரசவத்தின் போது, ரத்தப்போக்கால், விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குழந்தையின் தலை, எந்த திசையில் உள்ளது என்பது, முக்கியமானது. குறிப்பிட்ட காலத்திற்குள், தாய்க்கு பிரசவ வலி ஏற்படாத போது, குழந்தைக்கு மூச்சுதிணறல் ஏற்படும். அப்போது, இதய துடிப்பையும் கண்காணிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை வீட்டில் பிரசவம் பார்ப்பதால், கண்காணிக்க முடியாது; இது, உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும். வீட்டில் பிரசவம் கூடாது என்பதை, இளம் தலைமுறையினர் உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
06-ஆக-201820:43:10 IST Report Abuse
bal முந்தய ஜெனெரேஷன் அம்மாக்கள் எல்லாரும் குறைந்த பட்சம் 6 அல்லது 8 சுகப்பிரசவம் குழந்தை பெற்றார்கள்....இந்த ஜெனெரேஷன் ஒரு குழந்தை கூட சுகப்பிரசவம் இல்லை... இதற்கு இந்த கேடு கெட்ட ஆஸ்பத்திரிகள்தான் காரணம்... எல்லாவற்றையும் சிஸேரியனாகி விடுகிறார்கள்... இல்லையென்றால்.. குழந்தை செத்து விடும்...அம்மாக்கு ஆபத்து...அது இல்லையென்றால் குழந்தை விற்கப்படும் அல்லது கொல்லப்படும்... இதுதான் இவர்கள் படித்த மெடிக்கல் படிப்பு...
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
06-ஆக-201820:38:23 IST Report Abuse
bal தகுந்த மருத்துவச்சியின் உதவியுடன் பிரசவம் செய்யலாம். ஆஸ்பத்திரியில் 90 % சிசேரியன் பண்ணிவிடுகிறார்கள்... ஏன் சுகப்பிரசவம் செய்வதில்லை... ஆரம்பத்திலிருந்தே ஆஸ்பத்திரிக்கு பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது...ஏன் ஆஸ்பத்திரியில் பிரசவம் ஆகும்போது குழந்தை சாவதில்லையா... குழந்தை திருடப்படுகிறது...இன்குபேட்டர் உபயோகப்படுத்துகிறார்கள்..இதிலென்ன சுகம்....அந்த காலத்தில் எல்லா அம்மாக்களும் 6 முதல் 8 குழந்தைகள் வீட்டில் தான் பெற்றார்கள்..அவர்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்..இந்த ஜெனெரேஷன் ஒரு குழந்தை இல்லையேல் அதிக பட்சம் 2 ...அதுவும் சிசேரியன்...ஒரு தெம்பும் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
Prabhakar - Namakkal,இந்தியா
06-ஆக-201820:32:24 IST Report Abuse
Prabhakar ஏன் நல்ல வசதிகளுடன் அதிகமான பிரசவ மருத்துவனைகளை அரசே இலவசமாக நடத்தக்கூடாது...அப்போ ஏழை மக்கள் வீட்டில் பிரசவம் பார்க்க மாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X