ஸ்டேஷனில் நடக்கிறது கட்டப்பஞ்சாயத்து..!காபந்து செய்யப்போவது யாரு?| Dinamalar

ஸ்டேஷனில் நடக்கிறது கட்டப்பஞ்சாயத்து..!காபந்து செய்யப்போவது யாரு?

Added : ஆக 07, 2018 | |
திருப்பூர் சப் கோர்ட் வளாகத்தில் உள்ள கோர்ட் கேண்டீனில் இரு போலீசார் பேசிக் கொண்டது: ''என்ன மாப்ளே... டீ சாப்பிடறதுக்கு, 500 ரூபாய் நோட்டை நீட்டறே. இரு எங்கிட்டே சில்லரை இருக்கு. நான் கொடுக்கறேன்,'' என அவரை மறித்தார். ''அட பரவாயில்லை விடு மச்சான். எனக்கு கொஞ்சம் செலவு இருக்கு,'' என்றபடி மீதி சில்லரையை வாங்கி இரு பாக்கெட்டுகளில் பிரித்து தனியாக வைத்தார். ''அங்கே
ஸ்டேஷனில் நடக்கிறது கட்டப்பஞ்சாயத்து..!காபந்து செய்யப்போவது யாரு?

திருப்பூர் சப் கோர்ட் வளாகத்தில் உள்ள கோர்ட் கேண்டீனில் இரு போலீசார் பேசிக் கொண்டது: ''என்ன மாப்ளே... டீ சாப்பிடறதுக்கு, 500 ரூபாய் நோட்டை நீட்டறே. இரு எங்கிட்டே சில்லரை இருக்கு. நான் கொடுக்கறேன்,'' என அவரை மறித்தார்.
''அட பரவாயில்லை விடு மச்சான். எனக்கு கொஞ்சம் செலவு இருக்கு,'' என்றபடி மீதி சில்லரையை வாங்கி இரு பாக்கெட்டுகளில் பிரித்து தனியாக வைத்தார். ''அங்கே என்னப்பா செலவு உனக்கு' என முதலாமவர் கேட்க, 'அட நீ வேற. அவருக்கு ஏதாவது 'வெட்டினால்' தான் வேலையே பார்க்குது. ஏதாவது சொன்னால் நீங்க வாங்கிறதில் தானே எனக்கு தர்றீங்கன்னு நியாயம் வேறு பேசுது,'' என்று சலித்துக் கொண்டார். ''சிசிடிவி கேமராவை முதலில் இங்கதான் மாட்டணும் போல,'' என்று சிரித்தபடியே இருவரும் நகர்ந்தனர்.
அவிநாசி அருகே சேவூர், கைகாட்டியிலுள்ள சலுானில், இரண்டு இளைஞர்கள் பேசிக்கொண்டது.''ஏன் தம்பி... சேவூருக்குள்ள சுத்தி சுத்தி சந்துக்குள்ளயும், போலீஸ்காரங்க நின்னு வாயை ஊதுன்னு, சொல்லி, கையில இருக்கறத வாங்கிட்டு போறாங்க தெரியுமா?''''ரொம்ப நல்லாவே தெரியுண்டா. மக்கள் குடிச்சா, துரத்தி துரத்தி புடிக்கிறாங்க. போலீசே குடிச்சா, யார் கேப்பாங்க?''''என்ன மச்சி... சொல்றே. தெளிவா சொல்லுடா''''எப்பவும் புல்லட்டில் 'படபட'ன்னு போற ஏட்டு, எப்பவுமே, 'சரக்கில்'தான் இருக்கிறாராம். கிட்ட போனாலே நாறுது. ஆனா, அவரை யாரையும் கேட்க மாட்டேங்கிறாங்களே,''''நீ.. கவலைப்படாதே.எல்லாத்தையும் அந்த 'மயில்சாமி' பார்த்துப்பாரு,'' என, கூறிக்கொண்டே, பேப்பரை புரட்டினார்.


விடுமுறை நாள் என்பதால், சித்ராவும், மித்ராவும் வழக்கம் போல் மாவட்ட மைய நுாலகத்துக்கு சென்று கொண்டிருந்தனர். இருவரின் பேச்சும், சிட்டி போலீசை சுற்றி வந்தது. ''ஏங்க்கா...! 'சவுத்' அதிகாரிக்கும், ஒதுக்குப்புறமாக உள்ள ஸ்டேஷன் அதிகாரிக்கும் எப்போதும் 'லடாய்'ன்னு சொல்றாங்களே..''''ம்... ம்... மித்து. உண்மைதான்டி. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, 'முத்தான' பெயர் கொண்ட கிராமத்தில், இருவருக்கு இடையே, 'லேண்ட் இஷ்யூ' சம்பந்தமாக, 'சவுத்' அதிகாரிகிட்ட ஒரு தரப்பு பஞ்சாயத்துக்கு போனது.''''லேண்ட் வேல்யூ, 4 'சி'ன்னு மோப்பம் பிடிச்சுட்ட 'தங்க'மான அதிகாரி, 'டீல்' ஓ.கே., ஆனதும், நியாயமில்லாத வகையில், மற்றொரு தரப்பினர் மீது, எப்.ஐ.ஆர்., பதியச்சொல்லி, ஸ்டேஷன் அதிகாரியிடம் சொன்னார்,''ஆனால், அவரோ, 'நான் இன்ஸ்., ஆக இருக்கேன். என்கிட்ட வராம, நேரா அங்கே போய்ட்டா, எப்.ஐ.ஆர்., போட்டுடுவனா? பார்க்கலாம் என்ன நடக்குன்னு,' சத்தம் போட்டாராம். இதை தெரிஞ்சுகிட்ட அதிகாரி, விஷயத்தை, 'தொகுதி' கிட்ட கொண்டு போனாராம். அவர் கொடுத்த 'பிரஷரில்' எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். இந்த மாதிரி, போலீஸ் அதிகாரிங்க மத்தியில், அப்பப்ப 'டக் ஆப் வார்' இருந்துட்டே இருக்காம். மித்து...இது எங்கே போய் முடியுமோ?''''கரெக்டா சொன்னீங்க. ஏங்க்கா, இந்த 'சவுத்' அதிகாரி, ஸ்டேஷன் பக்கமே வர்றதில்லையாம். வீட்ல வைச்சு பிரசவம் பார்த்த விஷயத்தில, அந்த வீடு எங்கேன்னு கூட தெரியாதாம். இப்படி ஒரு அதிகாரியிருந்தா, 'சவுத்' ரேஞ்சை எப்படி பார்க்றதாம்,''''அட.. நீ.. வேற. ஏதாவது, பஞ்சாயத்துன்னா, ஸ்டேஷனுக்கு வந்துட்டு, மின்னல் மாதிரி மறைஞ்சு போயிடுவாராம்,'' இருவரும் பேசிக்கொண்டே, சிக்னலில், பச்சை விளக்கு ஒளிர்ந்ததும், ஜீப்ரா கிராஸிங்கில் நடந்து சென்றனர்.''ரூரல் ஏரியாவில், 'வெள்ளமான' கோவில் பகுதிக்குள்ள எந்த மணல் லாரி வந்தாலும், அதனை மடக்கிப்பிடிச்சு, 'கட்டிங்' போடறதில், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் அதிகாரி 'பலே' கில்லாடியாம். லாரி டிரைவர், சரியான 'டாக்குமென்ட்' வச்சிருந்தாலும், 'கப்பம்' கட்டிட்டு போ'ன்னு மிரட்டுறாராம்,''''மித்து... நானும்தான் கேள்விப்பட்டேன். நீ... 'ஜெய'மான அதிகாரியைத்தானே சொல்கிறாய்? ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட, ஒரு லாரியை புடுச்சிட்டு, டிரைவர்கிட்ட, மொபைல் போன், லைசென்ஸ் வாங்கி வச்சுட்டு, 'பணத்தை கொடுத்து வாங்கிட்டுப் போ'ன்னு சொன்னாராம்,''''அந்த டிரைவர், ஓனர்கிட்ட விஷயத்தை சொல்ல, அவரும் போய், 'இப்படியா... பண்ணீங் கன்னா, எஸ்.பி.,கிட்ட 'கம்ப்ளைன்ட்' செஞ்சிருவேன்னு சொன்னதற்கு, 'நீ.. எங்கே வேணாலும் போய்ச்சொல்லு. யாரை கண்டும், நான் பயப்பட தேவையில்லை'ன்னு கொக்கரிக்கிறாராம்,'' ''அக்கா... இவர் மட்டுமல்ல... ரூரல் ஏரியாவில், பலரும் இப்படித்தான் இருக்காங்க. கண்டுபிடிச்சி, நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி, 'கம்முன்னு' இருக்கிறதால, எல்லா ஸ்டேஷனில், ஒரே பண மழையா பொழியுதுங்க்கா,''''ஓ.கே... ஓ.கே.. கூல் டவுன் மித்து. நீதி, நேர்மை, நியாயம், இதையெல்லாம், பேப்பரில்தான் எழுதி பார்த்துக்கோணும் போல. அதே ரூரல் ஸ்டேஷனில் நடக்கிற விஷயத்தை சொல்றேன் கேளு,''''ம்...ம்.. சொல்லுங்க...'' என்றாள் மித்து.''திருப்பூருக்கு வடக்கே உள்ள ஒரு ஸ்டேஷனில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்றதேயில்லையாம்.ஏதாவது, ஏக்ஸிடென்ட், தற்கொலைன்னா ஒன்றிரண்டோடு சரியாம். கிராமங்கள் அதிகமா இருக்கறதால, லாட்டரி, 'சரக்கு' சீட்டாட்டம்னு கொடி கட்டி பறக்கிறது. இதுல மட்டும், தினமும், பல லகரம், மாசாமாசம் கமிஷன் கரெக்டா போறதால, 'அடி' முதல் 'நுனி' வரை அனைவரும் 'கப்சிப்'ன்னு இருக்காங்களாம்,'' ''போலீசில் இப்படின்னா... இன்னொரு டிபார்ட்மென்டில், டிரான்ஸ்பருக்கு, லேடி ஆபீஸர், லட்சக்கணக்கில் வாங்குறாராம். உங்களுக்கு தெரியுங்களா?,'' ஆர்வத்துடன் மித்ரா கேட்டாள்.''தெரியாம என்ன? 'முனிசிபாலிட்டி' ஆபீஸரோட, கண்ட்ரோலில், மூணு 'டிஸ்ட்ரிக்' இருப்பதால, முனிசிபாலிட்டியிலுள்ள அதிகாரிங்கள 'டிரான்ஸ்பர்' பண்றப்ப, 'இவ்ளோ கொடுத்தாதான்' டிரான்ஸ்பர் செய்வேன்'னு ரொம்ப கெடுபுடியாம். இப்படி, பல பேரிடம், 'லகரமா' வாங்கி குவிக்கிறாங்களாம்,''''ஏதாவது, கேட்டா... நான் என்ன பண்றது. மேல கொடுக்கணும். அப்பதான், 'காரியம்' நடக்கும்னு சொல்றாங்க. சரி.. சரி.. இந்தம்மாகிட்ட ஏன், சண்டை போட்டுட்டுன்னு, பலரும், வைட்டமின் 'ப' வை கொடுத்திட்டு, போய்ட்டே இருக்காங்க,'' என்றாள் சித்ரா.அப்போது, வெள்ளி விழா பூங்கா நெருங்கவே, ''அக்கா.. உள்ளே போய், ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்திட்டு போலாமா?'' என்றாள் மித்ரா. இருவரும், பூங்காவிலுள்ள பெஞ்சில் அமர்ந்தனர். அங்கிருந்த கேன்டீனில், நிலக்கடலை வாங்கி வந்த மித்ரா, சித்ராவுக்கும் கொடுத்து விட்டு, சாப்பிட்டாள்.அப்போது, மித்ராவின் மொபைல் போன் அடிக்கவே, எடுத்து பேசி விட்டு, சிரித்தாள்.அதைப்பார்த்த சித்ரா, ''மித்து... ஏண்டி... சிரிக்கறே!'' என்றாள்.''அக்கா... இந்த காமெடிய கேட்டீங்கன்னா... நீங்களும் சிரிப்பீங்க,''''சரி.. சரி.. சொல்லுடி'' ''ஒரு சங்கத்தை சேர்ந்த மெம்பர்களுக்கு, ஒரு ஜோஷியர் அடிக்கடி போன் பண்ணி, 'உங்க தொழிலில் உள்ள நஷ்டத்துக்கு பரிகார பூஜை, ேஹாமத்தை, ரொம்ப கொறைஞ்ச செலவில் பண்ணிடலாம். எப்ப வர்றது'ன்னு கேட்கிறாராம்,''''எக்ஸ்போர்ட்டர்ஸ் நம்பர் அவருக்கு எப்படி கெடைச்சுதாம்,''''தேனீர் சங்கத்துக்கு போட்டியா, உருவான சங்கத்தோட நிர்வாகிகள்தான், எல்லா எக்ஸ்போர்ட்டரோட, நம்பரை பூராவும் கொடுத்திருக்காங்க. அதை வெச்சுட்டுத்தான், ஜோஷியரும் போன் பண்றாராமா,''''ஜி.எஸ்.டி., இன்கம்டாக்ஸ், நுால் விலை.. இப்படி எக்ஸ்போர்ட்டர்ஸ் கவலைப்பட்டுட்டு இருக்கிற நேரத்தில, இந்த ஜோஷியர் மேட்டர்தான், ைஹலைட்டாம்க்கா,'' உடனே, கலகலவென, சிரித்த சித்ரா, ''கரெக்டுடி... உண்மையிலேயே, காமெடி மேட்டர்தான்,'' என்றாள். ''ஏன்... மித்து. வி.ஐ.பி.,க்கள் வேலை செய்யற தெற்கு தாலுகா ஆபீசுல என்ன நடக்குதுனே தெரியறதில்லையாம்'' ''ஆமாக்கா... சாதாரணமா நேட்டிவிட்டி சர்டிபிகேட், கூட வாங்க முடியாத நிலைதான். 15 நாளாகியும், சான்றிதழ் கிடைக்காம போராடற அளவுக்கு நிலைமை மோசமா இருக்கு. யார் போனாலும், 'சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேல வாங்க'ன்னு திருப்பி அனுப்பிடறாங்க''''ராத்திரி, 8:00 மணி வரைக்கும், புரோக்கர்ஸ் கூட்டமாக இயங்குறாங்க. இந்தப்பிரச்னையில், கலெக்டர் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்கறாருன்னு தெரியலை'' என்ற மித்ரா, ''புதுசா, வந்திருக்கற மண்டல துணை தாசில்தார், யாருக்கும் பயப்படறதே இல்லையாம். 'சர்டிபிகேட்' வரலைனு, மக்கள் காட்டாம கேட்டா, ''நான் ஓ.பி.எஸ்.,க்கு நெருங்குன சொந்தக்காரன். என்னை ஒண்ணும் செய்ய முடியாது''னு மிரட்டறாராம்,'' என கூடுதல் தகவலை சொன்னாள்''ஒருவேளை, கலெக்டர் அதான் கண்டுக்காம இருக்கிறாரோ என்னவோ?''என்ற சித்ரா, ''கலெக்டர் ஆபீசுக்கு, 'புட்செல்' அதிகாரிங்க மேல புதுசு புதுசா புகார் வந்திட்டே இருக்கு,'' என்றாள் மித்ரா.''யார்கிட்ட புகார் செய்ய முடியும்... 'புட்செல்' விவகாரத்த டி.ஆர்.ஓ., தானே விசாரிக்கணும் மித்து'' ''ஆமாக்கா... அவர்கிட்ட தான் சொல்ல வந்துட்டு திரும்பி போயிருக்காங்க. விவசாயிகள் மாட்டுக்காகவும், ஏழை மக்கள், இட்லி, தோசைக்கும், ரேஷன் அரிசிய அரைச்சு பயன்படுத்தறாங்க. 'மாவுமில்லில் ரேஷன் அரிசி அரைக்கக்கூடாது'னு, 'புட்செல்' அதிகாரிங்க மிரட்டியிருக்காங்க''''அதுக்காக, மாதம், ஆயிரம் ரூபா 'கப்பம்' கட்ட உத்தரவாம். இல்லைன்னா, ரேஷன் அரிசி அரைச்சாங்கனு, புகார் பதிவு செஞ்சு, வழக்கு, விசாரணைனு, வாட்டி எடுத்துடுவோம்னு மிரட்டறாங்களாம். அதுக்கு பயந்து, மாவு மில்காரங்க, மாசாமாசம் ஆயிரம் ரூபாய், கந்து வட்டி மாதிரி கட்றாங்களாம். இப்படி,மங்கலம் ஏரியாவுல மட்டும், மாதம், 20 ஆயிரம் வேட்டையாம். நால்ரோட்ல இருக்க பேக்கரிதான், இந்த பைனான்ஸ் வேலய செஞ்சு கொடுக்குதாம்.'''அரிசி கடத்தறவங்கள கண்டுக்காம விட்டுடறாங்க. எங்களை புடிக்கறாங்க,'ன்னு, மாவு மில்காரங்க புலம்பறாங்களாம்.கலெக்டர் ஆபீசுல புகார் பண்ணிடலாம்னு புறப்பட்டு வந்தவங்கள, மறுபடியும் மிரட்டி திருப்பி அனுப்பியிருக்காங்க. 'ஆட விட்டு வேடிக்கை பார்க்கறாங்க'னு புகார் வர்றதுக்குள்ள, கலெக்டர் நடவடிக்கை எடுத்தா பரவாயில்லை,'' என்று விளக்கினாள் மித்ரா.''முதலிபாளையம் சிட்கோ வளாகத்தில் நிறைய பிரச்னை இருக்குதாண்டி மித்து. இதை ரிப்போர்ட்டர் யாராவது போட்டோ எடுத்தா, செக்யூரிட்டிகள் ஓடி வந்து, அவங்க வந்த வண்டி நம்பரை நோட் பண்ணி, 'என்ன படம் எடுக்கறீங்க'ன்னு கேட்டு, 'ரவுண்ட்' கட்டி ஏக கெடுபிடி செஞ்சாங்களாம்,''''உடனே, போட்டோகிராபர், 'இப்படி செஞ்சீங்கன்னா, இதையும் போட்டோ எடுத்து போட வேண்டியது வரும்'ன்னு சொன்னதும், எல்லோரும் தெறிச்சுட்டாங்களாம். சரி.. கிளம்பு மித்து. லைப்ரரியை பூட்டிட போறாங்க,'' என்று சித்ரா எழுந்தாள்.''மடியில கனம் இருந்தா வழியில பயம் இருக்கத்தானே செய்யும்,'' சொன்ன மித்ராவும் நடக்க ஆரம்பித்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X