அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை; மருத்துவர்கள் போராட்டம்

Updated : ஆக 07, 2018 | Added : ஆக 07, 2018 | கருத்துகள் (204)
Advertisement
Karunanidhi, Kauvery Hospital,  Karunanidhi Health,கருணாநிதி, திமுக, ஸ்டாலின், கருணாநிதி உடல்நிலை, காவேரி மருத்துவமனை அறிக்கை ,  காவேரி மருத்துவமனை, திமுக தலைவர் கருணாநிதி, கருணாநிதி உடல்நலக்குறைவு ,கலைஞர் கருணாநிதி, 
Karunanidhi health, kalaignar Karunanidhi, MKarunanidhi, DMKLeader ,DMK , stalin, mkstalin, DMK leader Karunanidhi,

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த அடுத்த மருத்துவ அறிக்கை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் திமுக தொண்டர்கள் சென்னை காவேரி மருத்துவமனை முன்பு காத்திருக்கின்றனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்திருப்பதால், அங்கும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க திமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சிறப்பு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதுமில்லை. டாக்டர்கள் போராடி வருகின்றனர்.


கருணாநிதி உடல்நிலை கடந்த 10 நாட்களாக தொடர்ந்து அபாயக்கட்டத்தில் தான் இருந்து வருகிறது. இதனால் கட்சி தலைவர் என்ற பாசத்தில் ஆண், பெண் என பல தொண்டர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர். மேலும் மருத்துவமனை வளாகம் அருகே தலைவர் திரும்பி வர வேண்டும் என கோஷங்கள் எழுப்பியபடி உள்ளனர்.


தொண்டர்கள் காத்திருப்பு

அங்கு கூடியிருந்த சென்னையை சேர்ந்த பெண் தொண்டர் ஒருவர் கூறுகையில்; ஸ்டாலின் அவர்களே நீங்கள் கலங்க வேண்டாம். நாங்கள் தாயாகவும், தந்தையாகவும் நாங்கள் இருக்கிறோம். மருத்துவமனையில் இருந்து மறு அறிக்கை எப்போது வரும் என காத்திருக்கிறோம்? மீண்டும் கருணாநிதி வருவார். சூரியனை பார்த்து வேண்டுகிறோம். அவர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்றார்.

அது போல் கரூரை சேர்ந்த ஒரு பெண் கூறுகையில்; கருணாநிதியை யாராவது குறைகூறினால் என்னால் பொறுக்க முடியாது. அய்யா மீண்டு வருவார். அவரது உடல்நிலை கவலைக்கிடம் என அறிந்த உடன் நான் தனியாகவே கரூரில் இருந்து கிளம்பி வந்து விட்டேன் இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் ஆலோசனை

கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை 6.30 மணிக்கு அறிக்கை வெளியிடப்பட்டது. இரவு 9 மணிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை நடந்தது. இரவு 10.10 மணிக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றார். நேற்று இரவு மருத்துவமனைக்கு மீண்டும் வந்த கனிமொழி இன்று காலை 6.15 மணிக்கு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் 7.45 மணியளவில் மீண்டும் மருத்துவமனை வந்துள்ளார். புதுடில்லியில் இருந்து சென்னை திரும்பிய தி.மு.க. ராஜ்யசபா எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.கருணாநிதியின் குடும்ப டாக்டர் கோபால் இன்று காலை 6.30 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ஸ்டாலின், அழகிரி, பொது செயலாளர் க. அன்பழகனும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (204)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
07-ஆக-201816:23:50 IST Report Abuse
இந்தியன் kumar மக்களே யாரும் பாவம் செய்யாதீர்கள் பாவம் செய்தால் அதட்கு கடவுள் தண்டனை உண்டு , நாம் எதை பிறருக்கு செய்கிறோமோ அது தான் நமக்கு திருப்பி கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
07-ஆக-201816:02:25 IST Report Abuse
வெகுளி அன்று வாக்கு பெட்டிகளை தூக்கி கொண்டு ஓடியது போல இன்று எண்ணிக்கை குறைவாக காட்டும் மருத்துவ உபகரணங்களை தூக்கிக்கொண்டு ஓடலாம்...... அன்று கள்ள ஓட்டு போட்டது போல் இன்று நாமாகவே மருத்துவ அறிக்கையில் எண்களை மாற்றிப்பாக்கலாம்....... ஆஸ்பத்திரிக்கு வந்த ஹிந்திக்காரர்களை திட்டி பார்க்கலாம்..... நம்மிடம் பகுத்தறிவுக்கா பஞ்சம்.....
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
07-ஆக-201814:58:12 IST Report Abuse
கைப்புள்ள யோவ் இதுக்கு மேல என்னையா? 95 வரைக்கும் ராஜ வாழ்க்கை வாழ்ந்து முடிச்சாச்சு. 95 வயசு ஆச்சு. இனி அவரு எந்திரிச்சு வந்து கிரிக்கெட்டா ஆட போறாரு. விடுங்கயா. தொல்லை பண்ணாதீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X