பொது செய்தி

தமிழ்நாடு

கலைஞர் காலமானார்

Updated : ஆக 08, 2018 | Added : ஆக 07, 2018 | கருத்துகள் (154)
Advertisement
திமுக, கருணாநிதி, காலமானார்

சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, இன்று ( ஆக.,7) மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 95

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ஜூலை 18ல், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையில், அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தொண்டையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டிருந்த, 'டிரக்கியோஸ்டமி' என்ற, செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது.


மஞ்சள் காமாலை

அக்கருவி மாற்றப்பட்டதால், கருணாநிதிக்கு தொற்று உருவானது. இதனால், அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. சளித் தொல்லை காரணமாகவும், அவர் அவதிப்பட்டார். சென்னை, கோபாலபுரம் வீட்டில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஜூலை 28 நள்ளிரவில், மூச்சு திணறல், ரத்த அழுத்தம் குறைவு காரணமாக, உடல் நிலை மோசமானது. அதையடுத்து, அதிகாலை, 1:30 மணிக்கு, காவேரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு, மூச்சு திணறல் குறைந்து, ரத்த அழுத்தமும் சீரானது. தொடர்ந்து அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து, சிகிச்சை அளித்தனர்.


காலமானார்

இருப்பினும் கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால்,அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தை கேட்ட திமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.


மருத்துவ அறிக்கை

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:திமுக தலைவர் கருணாநிதி இன்று (7.8.2018) மாலை 6.10 மணிக்கு காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். எங்கள் மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் அடங்கிய குழு, மிக கடுமையாக போராடி அவரை மீட்க முயற்சித்தது பலனளிக்கவில்லை. இந்தியாவின் உயர்ந்த தலைவர்களில் ஒருவரின் மறைவால் ஏற்பட்ட சோகத்தை அவரது உறவினர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Advertisement
வாசகர் கருத்து (154)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ivan - Trichy,இந்தியா
08-ஆக-201809:23:45 IST Report Abuse
Ivan ஓய்வில்லா சூரியனே ஓய்வெடு ஸ்ரீரங்க நாதரை பீரங்கியால் துளைக்க சூளுரைத்து தோல்வியுற்ற சூரியனே ஓய்வெடு இந்துக்கள் என்றால் திருடன் என்ற ஒப்பற்ற தத்துவத்தை உதிா்த்த சூரியனே ஓய்வெடு இந்துக்கள் நெற்றியில் இருக்கும் குங்குமம் சிவபெருமான் தலையி்ன் உள்ள கங்கையில் மாதவிடாய் என கூறிய சூரியனே ஓய்வெடு அம்மன் கோவில்களில் தீமிதிப்பவன் காட்டுமிராண்டி என கண்டிபிடித்த சூரியனே ஓய்வெடு மனைவி,இணைவி,துணைவி என தமிழ்பண்பாடு காத்தவனே ஒய்வெடு ஊரான் பிள்ளையின் ஹிந்தி மொழியை பிடிங்கி துணைவியின் மகளுக்கும்,பேரன்களுக்கும் கொடுத்த சூரியனே ஓய்வெடு இலங்கை தமிழா் சாகின்ற போது உல்லாச உண்ணாவிரதம் இருந்த சூரியனே ஓய்வெடு ஒசி ரயிலில் வந்து இன்று விமானம் விடுகின்ற அளவு உயா்ந்த உழைப்பாளி சூரியனே ஒய்வெடு கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் மறைந்து மீண்டும் உதிக்கா விடில் உலகம் இருண்டு விடும் தமிழக சூரியனே உன் மறைவுக்கு பின் தான் ஒரு புதுவெளிச்சம் தோன்றுகிறது... இனி ஒரு சூரியன் தேவையில்லை தமிழகத்திற்க்கு.....
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
08-ஆக-201807:18:57 IST Report Abuse
rajan.  எத்தனையோ தியாக தலைவர்களை மாநில அளவிலும் தேசிய அளவிலும் கண்ட தமிழகம் (A KING MAKERS LAND) இந்த ஒரு திருக்குவளை மன்னனுக்கும் ஈடு கொடுத்து விட்டது. தமிழகத்தில் இனி துவங்குவது திருந்திய நெல் சாகுபடி. வாழ்க தமிழகம்.
Rate this:
Share this comment
Cancel
sbatch - sg ,சிங்கப்பூர்
08-ஆக-201806:45:53 IST Report Abuse
sbatch ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து, தமிழை/ தமிழனை/ தமிழ்நாட்டை உயர்த்திய ஆசானே. தமிழ் உள்ள காலமெல்லாம் உம் புகழ் நிலைத்திருக்கும். அமைதி பெறுக. நன்றிகள் அய்யா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X