அரசியல் செய்தி

தமிழ்நாடு

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கருணாநிதி மறைவு செய்தி

Updated : ஆக 08, 2018 | Added : ஆக 07, 2018 | கருத்துகள் (17)
Advertisement
கருணாநிதி, நியூயார்க் டைம்ஸ், அமெரிக்கா

நியூயார்க் : கருணாநிதியின் மறைவு தொடர்பாக, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : அரசியல்வாதி, சினிமா பிரமுகர் என பன்முக திறமை கொண்ட இந்தியாவின் மூத்த அரசியல்வாதி முத்துவேல் கருணாநிதி (94) உடல்நலக்குறைவு காரணாமாக காலமானார்.
வயது மூப்பின் காரணமாக, ஏற்பட்ட உடல்நலக்குறைவிற்காக, சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிலநாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், செவ்வாய்கிழமை, (7 ம் தேதி) உடற்பாகங்கள் செயலிழந்ததன் காரணமாக, காலமானார். அவர் உடல்நலம் பெற வேண்டி, மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் காத்துக்கிடந்தனர்.

1950ம் ஆண்டின் முற்பகுதியில், தமிழ் திரையுலகில் கருணாநிதி அசைக்கமுடியாத சக்தியாக விளங்கினார். பின், அரசியலில் பிரவேசித்த அவர், 5 தலைமுறைகளாக கோலோச்சி வந்துள்ளார். கருணாநிதி 1969ம் ஆண்டில், தமிழக முதல்வராக பதவியேற்றார். 5 முறை முதல்வர் பதவி என 19 ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்துள்ளார்.

கருணாநிதியின் மறைவிற்கு, பிரதமர் மோடி, டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதுபெரும் தலைவரை இழந்துவிட்டோம். நேர்மறை சிந்தனையாளர். ஏழைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, தனது வாழ்வையே தியாகம் செய்தவர் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இரண்டு வருட இடைவெளியில் திமுக தலைவர் கருணாநிதியும் காலமாகியுள்ளதால், பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
08-ஆக-201813:02:54 IST Report Abuse
Rafi பாடிக்கொண்டிருந்த சினிமாவை பேசும்படி செய்த பெருந்தகை கலைஞர், ஒரு கடிதம் எழுதுவதற்கு அல்லல் பட்டு கொண்டிருக்கும் நிலையில் 7000 கடிதங்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ளார், 75 திரைப்படங்களுக்கு உயிரோட்டத்தை கொடுத்த்துள்ளார், நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், இன்னும் எண்ணற்றவைகள், என்ற அவரின் காவியங்கள் எல்லாம் அவரின் இலக்கிய சிந்தனைகளுக்கு இடையில் அரசியல், என்று நினைக்கவே மலைக்கின்றது அவரின் வாழ்க்கை பயணம், இவற்றுக்கெல்லாம் அவருக்கு எப்படி நேரம் ஒதுக்கினார், எப்போது தூங்கினார், எப்போது ஓய்வு எடுத்துள்ளார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் உழைப்பே கலைஞர் என்ற முடிவுக்கு வந்துள்ளேன், மீண்டும் இது போன்ற உழைப்பாளியை இந்த உலகம் காணுமா?
Rate this:
Share this comment
Cancel
RR Iyengar - Bangalore,இந்தியா
08-ஆக-201812:06:22 IST Report Abuse
RR Iyengar பிரிட்டிஷ் கிறிஸ்தவன் "மெக்காலே" உருவாக்கிய (திராவிட கட்டுக்கதை) "திராவிடன்" என்ற வார்த்தையை சீரும் சிறப்புமாக பரப்பி தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தற்கு நன்றி கடன் ... இனி கிறிஸ்தவ யாவாரம் எப்பிடி செய்யிறதுங்கிற வருத்தம்
Rate this:
Share this comment
Robins - Chennai,இந்தியா
08-ஆக-201813:56:36 IST Report Abuse
Robinsஐயங்கார், கலைஞர் வருவத்துக்கும் முன்னே நாங்கள் கிறிஸ்துவ வியாபாரம் (உங்கள் மொழியில் ) செய்து வருகிறோம். இது எதிர்ப்பால் வளர்ந்த மதம். உங்களை போன்ற குறுகிய சிந்தனை உள்ளவர்களை மென் மேலும் வளரும் (உங்கள் மொழியில்: எங்கள் வியாபாரம்) .... ஏனென்றால் கலைஞரை நம்பி ஆரம்பிக்க பட்டதல்ல எங்கள் மதம் (வியாபாரம் ) . ஹா.. ஹா....
Rate this:
Share this comment
RR Iyengar - Bangalore,இந்தியா
08-ஆக-201819:46:55 IST Report Abuse
RR Iyengarஅது தான் எங்களுக்கு தெரியுமே ......
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
08-ஆக-201810:50:57 IST Report Abuse
Ray மலரின் மணம் காற்றடிக்கும் திசையில் மட்டுமே பரவும் ஆனால் நல்லவர்களின் புகழ் எட்டு திசையிலும் பரவும் என்று சாணக்கியன் கூற்றை நினைவு கூறுகிறது இந்த நியூயார்க் டைம்ஸ் செய்தி
Rate this:
Share this comment
bala - chennai,இந்தியா
08-ஆக-201820:13:24 IST Report Abuse
balaகருணாநிதி ஒரு வல்லவர் என்பதில் ஐயம் இல்லை அனால் நல்லவரா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X