எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'பாதிக்கிணறு' பழக்கமில்லை

கருணாநிதி தினமலர் நாளிதழுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பேட்டி அளித்துள்ளார். அந்த வகையில் கடைசியாக தமிழகத்தில் 2016 மே 16ல் நடந்த சட்டபை தேர்தலுக்காக, மார்ச் 10ம் அவர் அளித்த சிறப்பு பேட்டி : அதில் சில

கருணாநிதி,தினமலர்,பாதிக்கிணறு,பழக்கமில்லைதமிழகத்தில், கூட்டணி ஆட்சி சாத்தியமா; அதற்கு நீங்களே, பிள்ளையார்சுழி போடுவீர்களா?

கூட்டணி ஆட்சி என்பது, தேர்தலுக்குப் பிறகு வெற்றியின் பரிமாணத்தைப் பொறுத்து உருவாக வேண்டியது. ஒரு கட்சி, முழுப் பெரும்பான்மை பெற்று விட்டால், அப்போது கூட்டணி ஆட்சி தேவையில்லை. எந்தக் கட்சிக்கும் முழுப் பெரும்பான்மை கிடைக்காத போது, கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாதது. கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றதும் உண்டு; தோல்வி அடைந்ததும் உண்டு.


தமிழக அரசியலில் இலவசங்கள் இல்லாமல் தேர்தலை சந்திக்க, எந்தக்கட்சிக்கும் தைரியம் இல்லையே ஏன்?

மக்களிடம் இல்லாமையும், போதாமையும் இருக்கின்ற வரை, இலவசங்கள் தவிர்க்க முடியாதவை தான். இலவசங்களை காலப் போக்கில் குறைக்கின்ற அதே நேரத்தில், மக்களின் ஏழ்மை நிலையை போக்கிட முயற்சிக்க வேண்டும்.


நாங்களும் அகராதியில்தேடி விட்டோம்...'தப்பிலித் தனம்' என்றால் என்ன?

பேச்சு வழக்கில் உள்ளசொல் அது; 'தப்பிலித்தனம்' என்றால், தப்பு அல்லது தவறை தாராளமாகச் செய்யும்தீய குணம்.


எதற்கு இந்த அரசியல்; எல்லாவற்றையும் விட்டு விட்டு சென்று விடுவோம்' என்று எப்போதாவது உங்களுக்கு எண்ணம்வந்தது உண்டா?

பாதி கிணறு தாண்டும் பழக்கம், எனக்கு எப்போதும் கிடையாது. சிறுவனாக இருந்த போது, நானும், என் நண்பன் தென்னனும், திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தில் நீந்தி மைய மண்டபத்திற்குச் செல்ல முயன்றோம். முக்கால் துாரம் சென்றதும், என் நண்பனால் நீந்த முடியவில்லை. 'திரும்பிவிடலாம்' என்றார்.


'திரும்புவதென்றால், முக்கால் பகுதி நீந்த வேண்டும்; மைய மண்டபம் என்றால், கால் பகுதி துாரம் தான் நீந்த வேண்டும்; அதற்கே செல்லலாம்' என்று நான் கூறி, நீந்தி மையமண்டபத்தை அடைந்தோம். எனவே, எதற்கு இந்த அரசியல்; எல்லாவற்றையும் விட்டு விட்டுச் சென்று விடுவோம் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை. அரசியல், நான் விரும்பித் தேர்ந்தெடுத்த பாதை. வாழ்க்கையின் எல்லாப் பாதைகளிலும், குளிர்ச் சோலையும் இருக்கும், சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டவுடன் பதுங்கி ஓடுபவன் நானல்ல!


கடந்த, தி.மு.க., ஆட்சியில் நடந்ததவறுகளுக்காக, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என, 'நமக்கு நாமே' பிரசாரத்தின் போது, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பல முறை கூறினார்; இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

ஏற்கனவே, இதற்கு நான் பதில் கூறி விட்டேன். பொருளாளர் கூறியது பெருந்தன்மையின் பாற்பட்டது. தி.மு.க., அரசு தவறு செய்து விட்டதாக, எதிர்க்கட்சியினர் சொன்னதை நம்பியதால் தானே, கடந்த முறை மக்கள் எங்களுக்கு ஓட்டளிக்கவில்லை. அவர்கள் அப்படி கருதியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் யதார்த்தமாகக் கூறியிருக்கிறார்.


'மக்கள் குரலே மகேசன் குரல்' என்பதை ஏற்ற பிறகு, மக்களிடம் மன்னிப்பு கோருவது ஒன்றும், மாபாதகம் அல்ல. எனவே, அதை வைத்துக் கொண்டு கழகத்திற்குள் புரிதல் பிழை உண்டாக்க முடியாதா என்று சிலர் நினைத்தனர், ஓய்ந்து போய் விட்டனர்; அவ்வளவு தான்!


Advertisement

கடைசியாக என்ன படம் பார்த்தீர்கள்?”

நான் உரையாடல் எழுதி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த 'மந்திரி குமாரி' திரைப்படத்தை ஒருசில நாட்களுக்கு முன் மீண்டும் பார்த்தேன்.”


'டி.வி-'யில் நீங்கள் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி எது?

செய்திகளைத்தான் விரும்பிப் பார்ப்பேன். நான் எழுதி வெளிவரும் 'ராமானுஜர்', 'தென்பாண்டிச்சிங்கம்' போன்ற தொடர் நாடகங்களைப் பார்க்கிறேன்.”


இப்போதும் யோகா பயிற்சி செய்கிறீர்களா?

மூச்சுப்பயிற்சி போன்ற பயிற்சிகளை மட்டும் செய்கிறேன்.


உங்களுக்குப் பிடித்த பண்டிகை எது?

ஆண்டுதோறும் வேளாண் பெருமக்கள் மன மகிழ்ச்சியோடு கொண்டாடும் 'தமிழர் திருநாள்' எனப்படும் பொங்கல் பண்டிகை.


பேஸ்புக்கை ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்க்கிறீர்கள்?”

பல்வேறு பணிகளைச் செய்வதற்கு ஏற்ப, என்னிடம் பல உதவியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சுரேஷ், நவீன் ஆகியோர், பேஸ்புக்கில் என் சம்பந்தமான செய்திகளோ, அல்லது நான் அனுப்பும் அறிக்கைகளோ இடம்பெறும் நேரத்தில், அவர்களே அதை என்னிடம் காண்பிப்பார்கள். இதற்கு, கணக்கு இல்லை.”


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
n.palaniyappan - karaikal ,இந்தியா
08-ஆக-201822:09:39 IST Report Abuse

n.palaniyappanதமிழ் அன்னையின் தலை மகன் பல்திறன் வித்தகர் திரை படங்களில் தனது வசனத்தால் உயிரூட்டியவர். அவரது ஆற்றில் பிரமிக்கககூடியது. வாழ்க அவரது புகழ். அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது. வாழ்க தமிழ் .

Rate this:
bal - chennai,இந்தியா
08-ஆக-201819:59:23 IST Report Abuse

balமற்றவர்களை கிணற்றில் தள்ளிதான் பழக்கம்.

Rate this:
தலைவா - chennai,இந்தியா
09-ஆக-201800:38:13 IST Report Abuse

தலைவா மரணம் இல்லாத மாவீரன் கலைஞர் கருணாநிதி ஏனென்றால் அவர் கலைஞர் அந்த மரணத்தையே வென்றவர் ... ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் மறையாது எப்போதும் பிரகாசிக்கும் திராவிட சூரியனுக்கு என்றும் இல்லை அஸ்தமனம் தெள்ளுத்தமிழில் கவிப்பாடும் போதெல்லாம், அவர் துள்ளுத்தமிழ் உரை கேட்க்கும் போதெல்லாம் அவர் நம்முடன் வாழ்வார். ஒரு மனிதன்,இரு இதயங்கள் மாவீரன் இதயம் என்று செயல் இழந்து இருக்கிறது அந்த மா மனிதனின் கோடி (உடன்பிறப்புகள்) இதயத்துடிப்புகள் துடிக்கும் போதேல்லாம் அவர் நம்முடன் வாழ்வார். கலைஞர் ஓர் தேவலோக தட்சன் அவர் படைப்புக்கள் ஆன வள்ளுவர் கோட்டம் ,138 அடி வள்ளுவர் சிலை, புதிய தலைமை செயலகம் , பல மேம்பாலங்கள்., அண்ணா நூற்றாண்டு நூலகம் இவை அனைத்தும் வாழும் வரை அவர் நம்முடன் வாழ்வார். கலைஞர் ஓர் மந்திர வாதி தமிழின் யாசகன் சமூக நீதியின் நேசன் அந்த மந்திர வாதி அவர் செய்த மாயா ஜாலங்கள் தான் பெண்களுக்கான சொத்து உரிமை சட்டம் ,சமச்சீர் கல்வி, மகளிர் காவல் நிலையம், கைவண்டி ரிக்க்ஷா ஒழிப்பு, தமிழை அலுவலக மொழியாக்கல் ,சமத்துவபுரம், அரசு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து, சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கொடி ஏற்றும் உரிமை என பல சட்ட மற்றும் திட்ட செயல் வடிவங்கள். நேசனுக்கும், யாசனுக்கும், ஏது மரணம் ? கலைஞரின் தாய் கர்ணனுக்கு ஒரு தாய் தர்ம தேவதை கலைஞருக்கு ஒரு தாய் சமூக நீதி தேவதை கலைஞரைப்போல ஒரு மாமனிதரை இனி எந்த நூற்றாண்டும் காணப்போவதில்லை. பாரசக்திக்கு ஏது மரணம் ? அவர் பவுடர் பூசிக்கொண்டு அரசியலுக்கு வந்தவர் அல்ல அவர் இந்திய சமூக நீதியின் அடையாளம் போராட்டங்கள் தொடங்கி காவேரி தொடும் தருவாயில் அவரின் ஒவ்வரு அசைவிலும் பூத்தன லட்சம் புரட்சிப்பூக்கள் கலைஞர் என்னும் பிரம்மன் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கைம்பெண்கள் என பிரம்மன் பிழை செய்தான். அதை கலைஞர் சரி செய்தார். போராட சொன்னார் மானத்தை இழந்து மண்டி இட சொல்லவில்லை கலைஞர் என்னும் கால சூரியன் கலைஞர் என்னும் கருத்துப்பெட்டகத்திற்க்கு, கால சூரியனுக்கு ஏது மரணம் ? பெரியாரின் வளர்ப்பிற்க்கு, அண்ணாவின் பாசறைக்கு ஏது மரணம் ? கலைஞரின் தமிழையும், உழைப்பையும், நாவன்மையையும்,தனித்தன்மையையும், செயல் ஆக்கும் தன்மையும் முன் எடுப்போம். நன்றி திரு காஜா நவாஸ். ...

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-ஆக-201814:43:52 IST Report Abuse

Malick Rajaஉண்மைகள் உறங்குவதில்லை ... சூரியனை மறைக்கவே முடியாது .. அது கலைஞரின் கதிரொலியாக கம்பீரமாகவே இருக்கும் .. அதற்க்கு திமுக எடுத்துக்காட்டாகவே இருக்கும் .. கலைஞர் சென்றாலும் அவரின் தமிழ் சொல்லின் கலைநயங்கள் தமிழ் உள்ளவரை இருக்கும் . கலைஞர் என்பவர் கோடான கோடி தமிழர்களின் உள்ளங்களில் இருப்பவர் .. போற்றுவோர் போற்றட்டும் .. தூற்றுவோர் தூற்றட்டும் .. நாம் நமது நேர்மை நீதி பணியை செய்வோம் என்ற நிலையில் திமுக வீறுநடை போடும் .. தமிழர்கள் ஒற்றுமை பெரும்பான்மையாகவே இருக்கும் .. நல்ல மரத்தில் புல்லுருவிகள் இருப்பதும் இயற்கை எனவே தூறுவோரை புல்லுருவிகளாக கருதுபவர்கள் திமுகவினர் ..

Rate this:
HSR - MUMBAI,இந்தியா
08-ஆக-201823:11:37 IST Report Abuse

HSRபோய் தண்ணிய குடிங்க.. ...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X