கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

Updated : ஆக 08, 2018 | Added : ஆக 08, 2018 | கருத்துகள் (70)
 RIPKalaignar ,Karunanidhideath ,Karunanithi, கருணாநிதி, திமுக தலைவர் கருணாநிதி, கலைஞர் கருணாநிதி,  கருணாநிதி மறைவு ,ஸ்டாலின், ராஜாஜி அரங்கம்,   மெரினா கடற்கரை,  உடல்நலக்குறைவு , மெரினா  பீச் , காவேரி மருத்துவமனை,  திமுக தலைவர் , தமிழ்நாடு, கலைஞர் ,மெரினா , ராஜாஜி ஹால், கருணாநிதி, பொது மக்கள் அஞ்சலி, கனிமொழி, தேசிய கொடி ,முரசொலி நாளிதழ் ,
Rajaji Hall, 
DMK, ,kalaingarKarunanidhi ,Kalaingar ,dmkleader ,Marina4Kalaignar ,MarinaBeach, Kauvery Hospital, DMK leader Karunanidhi, Karunanidhi health, kalaignar Karunanidhi, MKarunanidhi, DMKLeader ,DMK , stalin, mkstalin, KarunanidhiHealth, MissUKarunanidhi, Karunanidhi Died ,Chennai ,DMK, Murosoli, Marina Beach Chennai, tribute,

சென்னை: மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் ராஜாஜிஹாலில் வைக்கப்பட்டது. அங்கு பொது மக்கள் மற்றும் பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று இரவு கருணாநிதி உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், சி..ஐ.டி.காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அதிகாலை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


சாரல் மழை


சி.ஐ.டியூ காலனி வீட்டில் இருந்து கருணாநிதியின் உடலை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆம்புலன்ஸ் வேன் சாரல் மழையுடன் ராஜாஜி ஹாலை வந்தடைந்தது.


கவர்னர், முதல்வர் மரியாதை



ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு கவர்னர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மேற்கு வங்க முதல்வர் மம்தா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, வைகோ, முத்தரசன், ராமதாஸ், திருமாவளவன், நடிகர்கள் ரஜினி, கமல், சிவக்குமார், சூர்யா, டி.ராஜேந்தர், அஜீத், வடிவேலு, சரோஜாதேவி தினகரன் மற்றும் அவரது அணியை சேர்ந்த எம்.எல்.ஏக்களான வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


தேசிய கொடி போர்த்தப்பட்டது



அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் கருணாநிதியின் உடல் மீது ராணுவத்தினர் தேசிய கொடியை போர்த்தினர். மேலும் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலைமை செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X