அரசியல் செய்தி

தமிழ்நாடு

மெரினாவில் இடம்: ஐகோர்ட் அனுமதி

Updated : ஆக 09, 2018 | Added : ஆக 08, 2018 | கருத்துகள் (214)
Advertisement
கருணாநிதி, சென்னை ஐகோர்ட், உடல் அடக்கம்

சென்னை: கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் அனுமதி கோரி தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடந்தது. நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், அரசு தரப்பில் சி, எஸ். வைத்தியநாதன், தி.மு.க சார்பில் சண்முகசுந்தரம், வில்சன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.


பதில் மனு:

தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், கருணாநிதி உடலை அடக்கம் செய்ய காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும், விதிகளுக்கு உட்பட்டு முன்னாள் முதல்வர்களுக்கு கிண்டி காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இடம் ஒதுக்குவதில் தமிழக அரசின் கொள்கை முடிவில் கோர்ட் தலையிட முடியாது எனவும், ராஜாஜி, காமராஜர், ஜானகி ஆகியோருக்கு மெரினாவில் இடம் ஒ துக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


திமுக வாதம்

திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல்வராக இருந்த ஜெயலலிதாவையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் ஒப்பிடக்கூடாது. ராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் வேறு. திராவிட சித்தாந்தம் வேறு. மாற்று சித்தாந்தம் கொண்ட தலைவர்கள் மத்தியில் கருணாநிதியை அடக்கம் செய்யக்கூடாது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்யாவிட்டால், மக்கள் மனம் புண்படும். பாரபட்சம் காட்டுவதாகிவிடும். அற்பமான, சட்டத்திற்கு உட்படாத காரணங்களை கூறி அரசு மறுக்கிறது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்குவதில் சட்டச்சிக்கல் இல்லை என வாதாடப்பட்டது.


மீண்டும் வாதம்

தமிழக அரசு வழக்கறிஞர் மீண்டும் வாதாடுகையில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்தனர். தற்போது இது வாபஸ் பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். ஆனால் திமுக இதனை அரசியலாக்குகிறது எனக்கூறினார்.


தீர்ப்பு

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (214)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஆக-201812:24:18 IST Report Abuse
Selvaraj Chinniah தமிழ் நாடு கெட்டு, குட்டி சுவராக போனதற்கு காரணம். ஒன்றா, இரண்டா? 01. கள்ளுக்கடை திறந்து,தமிழ் நாட்டு மக்களை குடிகாரர்களாக ஆக்கிய பெருமைக்கு உரியவர். 02.உலகத்திலேயே இலவசத்தை ஆரம்பித்து வைத்து,தமிழ் நாட்டு மக்களை சோம்பேறிகளாக்கிய உத்தமர் 03.ரூபாய்க்கு 3 படி அரிசி என்று அறிவித்து,மக்களை இலவசங்களுக்கு அடிமை ஆக்கிய மகான். 04.உலகத்திலேயே முதல் முறையாக ஊழல் செய்து, மக்கள் பணத்தை கொள்ளையடித்து. உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்து, இந்தியாவின் சொத்தை கொள்ளையடித்த மலை முழுங்கி மகாதேவன். இன்னும் நிறைய சொல்லலாம்.
Rate this:
Share this comment
Cancel
Sangeedamo - Karaikal,இந்தியா
09-ஆக-201811:04:45 IST Report Abuse
Sangeedamo என்றென்றும் நீதி மட்டுமே வெல்லும். அதற்கு இந்த வழக்குகள் வாபஸ் பெற்றதே சாட்சி ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை, அது போல் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை போட்ட நபராலேயே வாபஸ் பெற வைப்பது என்பது நம் அம்மா அவர்களால் மட்டுமே முடியும் என்பதை இந்த வழக்குகள் வாபஸ் பெற்றதே சாட்சி இங்கே வென்றது ஜெயா அம்மையார் மட்டுமே அவரும் வென்று உம்மையும் வெல்லவைத்த பெருமை ஜெயா அம்மைக்கே சாரும் உண்மையை உணர்விரோ கலைஞரே
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
09-ஆக-201810:55:40 IST Report Abuse
christ முன்பு வந்த மாதிரி சுனாமி வந்தால் மொத்த சமாதியும் காணாமல் போகும் .ஏற்கனவே புவி வெப்பம்மயலால் அண்டார்டிக்காவில் பனிக்கட்டி உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து சென்னை போன்ற நகரங்கள் மூழ்க வாய்ப்பு என செய்திகள் வருகின்றன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X