எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அணைகளின் நாயகன்!
தமிழக அணைகளின் நாயகன் கருணாநிதி

தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த, 21 ஆண்டுகளில், 36 அணைகளை கட்டி மக்களின் குடிநீர், பாசன தேவையை பூர்த்தி செய்தார்.

தமிழக,அணைகளின் நாயகன்,கருணாநிதிகருணாநிதி முதல்வராக இருந்தபோது விவசாயத்தின் மீதும், மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை காட்டினார். தமிழகத்தில் உள்ள மொத்த அணைகள், 115. அதில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின், கட்டப்பட்டவை 90.


சுதந்திரத்திற்கு பின், ஐந்தாண்டுத் திட்டங்களில் அணைகள் கட்டுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. எனவே தான், காங்., ஆட்சியில், 19 ஆண்டு களில், 25 பெரிய அணைகள் கட்டப்பட்டன. 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஐந்தாண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டு, ஓராண்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.


முதல்வராக இருந்த கருணாநிதியின் விடாமுயற்சியால், அவர் ஆட்சி செய்த, 21 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும், உப்பாறு, மேல் ஆழியாறு, சோலையாறு, மணிமுக்தா நதி, சிற்றாறு, கீழ்கொடையாறு, மேல்கொடையாறு , கடனா, பரப்பலாறு, ஹைவேவிஸ், மணலாறு, பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, ஆனைக்குட்டம், அடவிநயினார் கோவில், செண்பகத்தோப்பு, இருக்கன்குடி உள்ளிட்ட,

Advertisement

36 அணைகள் கட்டப்பட்டு அவற்றை பாசனம், குடிநீர் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


தேனி மாவட்டத்தில், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கியும், பணிகளை பார்வையிட்டும், திறந்தும் வைத்தார்.


-நமது சிறப்பு நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala - chennai,இந்தியா
09-ஆக-201820:02:45 IST Report Abuse

balaதமிழ்நாட்டில் அணைகளின் நாயகன் என்றால் அது பெருந்தலைவர் அய்யா காமராஜ் அவர்கள் தான்

Rate this:
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
09-ஆக-201820:02:26 IST Report Abuse

tamilvananபிழையான பதிவு. வீராணம் திட்டம் என்று ஆரம்பித்து, காவேரி சிலையையும் சைதாபேட்டைளயில் திறந்து வைத்தார். பல கோடி செலவுக்கு பிறகு கை விடப்பட்டது. அதில் ராகவா வீரா என்னும் ஒப்பந்தக்காதர் ஏராளமான பணத்தை கமீஸுன் என்று திமுக அரசியல்வாதிகளுக்கு கொடுத்து விட்டு. துண்டை தலையில் போட்டுக்கொண்டு கம்பெனியை முடி விட்டு ஓடி விட்டனர். ஒருவர் தற்கொலையும் செய்து கொண்டார். இந்த லக்ஷணத்தில், கர்நாடகா எதனை அணைகள் வேண்டுமானாலும் காவிரியின் மீது கட்டி கொள்ளட்டும் என்று தாராளமாக தமிழ் நாட்டின் உரிமைகளை விட்டு கொடுத்த பெருந்தகை.

Rate this:
09-ஆக-201819:41:08 IST Report Abuse

nanthuji,thailandஅணை கட்டினாரு.., கடல்ல திமிங்கலம் விட்டாரு, தன் சொத்துகளை தன் உடன் பிறப்புகளுக்கு அர்பணித்தார்.. கட்சி பதவிகளை தன் உடன்பிறப்புகளுக்கு கொடுத்து அழகு பார்த்தார்.. இன்னுமா இந்த நாடு கட்டுமரத்தை நம்புகிறது.. என்ன செய்ய விதி..

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X