இறப்பிலும் சரித்திரம் படைத்த கருணாநிதி...

Updated : ஆக 09, 2018 | Added : ஆக 09, 2018 | கருத்துகள் (12)
Advertisement
இறப்பிலும் சரித்திரம் படைத்த கருணாநிதி...

ஒரு பெரிய உயிர் விடைபெற்றுப் போனதும் எப்படி வீட்டில் ஒரு வெறுமை சூழுமோ அது போல நாட்டிலும் ஒரு வெறுமை சூழ்ந்தது போன்ற உணர்வு உள்ளது, திமுக தலைவர் கருணாநிதியின் மரணம்தான் இதற்கு காரணம்.

அவரது சமாதிக்கு இரவென்றும் பகலென்றும் பாராமல் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது அவ்வப்போது அவரத சமாதயில் மேல் உள்ள மலர்களை தொண்டர்கள் மாற்றிக்கொண்டு இருக்கின்றனர்.எந்த இடத்திலும் செல்பி எடுக்கும் மக்கள் இங்கேயும் செல்பி எடுத்து அடுத்த ஒரு செல்பி சென்டராக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இரண்டு நாட்களாக கருணாநிதியைப் பற்றிய செய்தியும் படங்களும்தான் ஊடகங்களில் பக்கம் பக்கமாய் நிறைந்து இருக்கிறது ஆனால் எதுவுமே திகட்டவில்லை, மாறாக ஒரு மனிதன் இத்தனை துறைகளில் இத்துனை சாதனை படைக்கமுடியுமா?இவ்வளவு சாதிக்கமுடியுமா?இப்படியெல்லாம் சிந்திக்க முடியுமா?செயலாற்றத்தான் முடியுமா? என்ற வியப்பே ஏற்பட்டது.

இத்தனைக்கும் வாழ்ந்த காலம் முழுவதும் இவருக்கு வந்தது போல எதிர்ப்புகளும், எழுந்தது போல விமர்சனங்களும் வேறு எந்த தலைவருக்கும் நேர்ந்திருக்காது

இவர் மீது மலர்களை எய்ததை விட சொல்லெனும் கல்லெறிந்தவர்கள்தான் அதிகம் ஆனாலும் அவை அனைத்தையும் தன்னை வாங்கிக்கொண்டும் தாங்கிக்கொண்டும் தன்னை கூராக்கிக்கொண்டவர்.
கடைசியாக பதினொரு நாட்கள் அவர் காவேரி மருத்துவமனையில் உயிருககு போராடிக் கொண்டு இருந்த போது உள்ளபடியே அத்தனைபேரும் அவருக்கு எதிரான தங்கள் எதிர்மறை கருத்துக்களை ஒரங்கட்டி வைத்துவிட்டு அவருக்காக பிரார்த்தித்தனர்.
எழுந்துவந்து விடுவார் என்ற நம்பிய நேரத்தில் உடன்பிறப்புகளிடம் இருந்து விடைபெற்று விட்டார்.இவர் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் ஆஸ்பத்திரி வாசலில் அழுது துடித்தவர்களில் பெண்களே அதிகம் இத்தனைக்கு அவரை ஒரு முறை கூட இவர்களில் பலர் நேரில் பார்த்தது இல்லை ஆனாலும் அவர் மீது பாசம் கொண்டவர்கள்..
இவரது உடல் ராஜாஜி அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட அந்த அதிகாலை நான்கு மணிக்கு என்னைப் போன்ற ஊடகங்களைச் சார்ந்தவர்கள் அங்கே சென்றோம், அந்த வேளையிலேயே அவரைப்பார்ப்பதற்கு தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்திருந்தனர்.சாத,மதமின்றி சாரை சாரையாக கூட்டம் மாலை வரை வந்து அஞ்சலி செலுத்தியபடியே இருந்தது.
அத்தனை பேரின் ஆறுதலையும் துாணில் துக்கத்துடன் சாய்ந்தபடி நின்றிருந்த ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். துக்கத்தை தனக்குள் அடக்கி்க்கொண்டு உறுதியாகத்தான் இருந்தார் ஆனாலும் மெரினாவில் ‛தலைவரின்' உடலை அடக்கம் செய்யலாம் என்று வந்த கோர்ட் தகவலின் போது தன்னையுமறியாமல் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டார்.
பிரதமர் முதல் கவர்னர் வரை நேரில் வந்து ஆறுதல் தந்தனர் அதிலும் பன்வாரிலால் பல காலம் பழகிய குடும்ப நண்பர் போல கட்டிப்பிடித்து கரம்பிடித்து ஆறுதல் சொன்னார்.
இத்தனைபேரும் எங்கே இருந்தனர் என்று வியக்கும்படியான கூட்டம் மாலையில் நடந்த ஊர்வலத்தின் போது காணமுடிந்தது.இறுதிச்சடங்கின் போது நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர்.
கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப்பேழையை குழி்க்குள் இறக்கும் போது சுற்றியிருந்த குடும்பத்தினர் உறவினர்கள் தொண்டனர்கள் பொதுமக்கள் என பலரும் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் மனம் உடைந்து கண்ணீர் விட்டனர் அந்த கண்ணீரில் நமது கண்ணீரும் கலந்து இருந்தது.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஆக-201808:06:59 IST Report Abuse
Bhaskaran செய்தி சானெல்களைத்தவிர மற்ற சானெல்கள் வழக்கமாக தங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக்கொண்டுதான் இருந்தனர்
Rate this:
Share this comment
Cancel
Anushya Ganapathy - Bangalore,இந்தியா
13-ஆக-201805:40:50 IST Report Abuse
Anushya Ganapathy சென்னையில் இவருடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கோயம்பேடு தவிர ஒரு இடத்திலும் நான் பார்க்கவில்லை. தினகரன், ஜெயலலிதா, OPS EPS கட்டவுட் தான் அதிகம் இருந்தது. ஒரு பெரிய தலைவரை இழந்த அடையாளம் இல்லை. ஒரு சாதாரண இறப்பு போல தான் சென்னை காட்சி அளித்தது. ஒரு வேலை DMK ஆட்சியில் இல்லாததாலயா என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Vaidhyanathan Sankar - Chennai,இந்தியா
12-ஆக-201817:21:00 IST Report Abuse
Vaidhyanathan Sankar +வெறுமையும் இல்லை வெங்காயமும் இல்லைடிவி சாந்நெல்கள் மேல தாள பேண்ட் இசை முழங்க கேளிக்கை nikazhchikaludan விளம்பரங்கள் மூலம் வருமானத்தை பெருக்கிக்கொண்டுதான் இருக்கின்றனபஸ்களும் ரயில்களும் வழக்கம்போல் இயங்கிக்கொண்டுதான் உள்ளனவிடுமுரை தினமாகையால் மக்கள் தாது ஊசுற்றுவதுடன் சம்மதிக்கும் போகிறபோக்கில் ஒரு விசிட் அடிக்கிறார்கள்வீட்டு சாப்பாடு viduமுறை நாள் மெனு வோடு amarkkalamaaka நடந்துதான் உள்ளது.திரை அரங்குகளில் ,காட்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளன.உணவு விடுதிகளில் மக்கள் கூட்டம் இயல்பாகத்தான் உள்ளது.இவ்வாறு இருக்கையில் வெறுமை பொறுமை என்பதெல்லாம் கப்ஸா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X