அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காமராஜருக்கு மெரினாவில்
இடம் தர மறுத்தவர் கருணாநிதி:
ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்

சென்னை : 'வழக்குகள் ஏதும் இல்லாத நிலையில், முதல்வராக இருந்து மரணமடைவோருக்கு தான், மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி அளிக்கப்படும் எனக்கூறி, காமராஜருக்கு இடம் தர மறுத்தவர் தான் கருணாநிதி' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

D.M.K,Marina,Marina Beach,karunanidhi,கருணாநிதி,தி.மு.க,மெரினா,மெரினா கடற்கரை


அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினின் குற்றச்சாட்டு கண்டு, உள்ளம் பதைபதைக்கிறது. 'அண்ணாதுரை சமாதி அருகே, கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் கேட்டதாகவும், காழ்ப்புணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும், இடம் ஒதுக்க மறுத்து விட்டனர்' என்ற, நச்சுக்கருத்தை, அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

கருணாநிதிக்கு உள்ளார்ந்த மரியாதையுடன், அ.தி.மு.க., அரசு செய்திருக்கும் சிறப்புக்களை, பட்டியலிட்டு கூறும் நிலைக்கு, ஸ்டாலின் நம்மை தள்ளியுள்ளார். கருணாநிதியின் இறுதி சடங்கு நாளன்று, அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு, பொதுமக்கள் அஞ்சலி

செலுத்துவதற்காக, ராஜாஜி ஹாலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது.

ராணுவ மரியாதையுடன் நல்லடக்கமும் செய்யப்பட்டது; இறுதி சடங்கின் போது, குண்டுகள் முழங்க, அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மெரினா கடற்கரையில், புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக, ஐந்து பேர் தாக்கல் செய்த மனுக்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. அவை, ஜெ., நினைவிடத்தை, மெரினா கடற்கரையில் இருந்து, அப்புறப்படுத்த துடித்தவர்கள் தொடுத்தவை.

அவற்றால், சட்ட சிக்கல்கள் உருவாகி, கடைசி நேரத்தில் பெரும் குழப்பம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான், அண்ணா சதுக்கத்தில் இடம் தருவது இயலாமல் போனது. காமராஜர் நினைவிடம் அருகே, கருணாநிதிக்கு, 2 ஏக்கர் நிலம் ஒதுக்க, அரசு முன் வந்தது. இதில், ஏதுகாழ்ப்புணர்ச்சி.

காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் மறைந்த போது, அவர்களுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

'முதல்வராக இருந்து மரணமடைவோருக்கு மட்டும் தான், மெரினாவில் நினைவிடம் அமைக்க, அனுமதி அளிக்கப்படும்' என,

Advertisement

வழக்குகள் எதுவும் இல்லாத நிலையிலும், மறுத்தவர் தான் கருணாநிதி. அவரை சந்தித்து கோரிக்கை வைத்து, ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள், இன்றும் நம்முடன் வாழ்கின்றனர்.

தாங்கள் அள்ளிக்குவித்து வைத்திருக்கும், ஆயிரம் தலைமுறைக்கான செல்வம், தங்கள் அயராத உழைப்பாலும், அறிவு திறத்தாலும் வந்தது போல, ஜெ., மீது எண்ணற்ற வழக்குகள் போட்டனர். அவரை சிறையில் தள்ளி, சித்ரவதை செய்து, அவருக்கு மன வேதனையையும், அவமானத்தையும் பரிசளித்த, தி.மு.க.,வினருக்கு, அ.தி.மு.க., அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது.

ஆனால், அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும், தமிழ் சமூகம் புரிந்து கொள்ளும். தி.மு.க., தலைமை பழைய பாதையில் பயணித்து, பழிச்சொல் வீசுவது கண்டு, நாங்கள் கலங்கப் போவதுமில்லை; கடமை தவறப் போவதுமில்லை. இவ்வாறு ஜெயகுமார் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (178)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan - Kanyakumari,இந்தியா
15-ஆக-201819:27:46 IST Report Abuse

Balakrishnanதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்.... உடல் நலம் மோசமாகி குமரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்று காலமானார்கள். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. 1969 ஜூன் மாதத்தில் காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது. இந்திராவை பிரதமராக்கிய கருப்பு காந்தி என வடநாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட காமராசரை, இந்திரா காந்தி தேசதுரோகி என குற்றம் சாட்டி காங்கிரசில் இருந்து நீக்கினார். பழைய காங்கிரஸ் (ஸ்தாபன காங்கிரஸ்) காமராஜர் தலைமையிலும், இந்திராவின் காங்கிரஸ் இந்திராகாந்தி தலைமையிலும் செயல்பட்டது. 1967 பிப்ரவரியில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் காமராசரை முதன் முதலில் தோற்கடித்தவர் கருணாநிதியும், அமெரிக்க உளவாளி அண்ணாவும்தான். இதற்க்கு முழுமையாக துணை நின்றது CSI சர்ச் என்ற தென்னிந்திய திருச்சபையும்,கிறிஸ்துவ நாடார் மதம் மாற்ற கும்பல்களும்தான். CSI சர்ச் எனப்படும் தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த CSI பிரிவு கிறிஸ்துவர்கள் சந்தோசத்துக்காக 1968ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது, நாடார்களை கேவலமாக எழுதிய கார்டுவெல்லுக்கு சென்னை கடற்கரை சாலையில் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த கருணாநிதியால் கால்டுவெல்லுக்கு சிலை அமைக்கப்பட்டது. மத்திய CBSC பாட திட்டத்தில் நாடார்களை கேவலபடுத்த காரணமாக இருந்த "tɦɛ tɨռռɛʟʋɛʟɨ sɦaռaʀs " என்ற புத்தகம் எழுதிய கால்டுவெல்லுக்கு சிலையை வைத்தது வேறு யாருமல்ல, கிறிஸ்துவ நாடார்கள் அதிகம் இருக்க கூடிய CSI தென்னிந்திய திருச்சபை தான். தமிழ் மண்ணில் திராவிடம் முளைக்க முக்கியமான காரணம் CSI கிறிஸ்துவர்களை வைத்து கால்டுவேல்தான். காமராசரை இரண்டாம் முறை நாகர்கோவில் பாராளுமன்ற இடைத்தேர்தலில் தோற்கடிக்க கருணாநிதி எடுத்த ஆயுதம் மூன்று . 1.சிலுவையும், 2.கிறிஸ்துவ நாடார்களும், 3.புரட்டுத் திராவிடமும் ... ஆகும். காமராஜருக்கு துணையாக அனைத்து சமுதாய இந்துக்களும், மீனவ சமுதயத்தை சார்ந்தவரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் குமரி மாவட்ட பிரிவின் முதல் செயலாளரும்,தலைவருமாக இருந்த கொட்டில்பாடு எஸ் துரைசாமி இருந்தனர்.. இவர் இந்திய தேசிய விடுதலை போராட்ட வீரரும் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் முக்கிய இடம் பெற்றவரும் ஆவர். இந்திய அளவில் அரசியல் செய்த காமராசரின் புதிய கட்சியான ஸ்தாபன காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க கூடாது. அப்படி பிடிச்சிட்டார்னா மீண்டும் இலவச கல்விக்கு பள்ளிகளும், கல்லூரிகளும் என கட்டி கல்வியை மூலமாக கொண்ட மதமாற்றம் தடைபடும் என கிறிஸ்துவ மிஷனரிகள் அஞ்சின . கல்விக்கு தமிழன் கிறிஸ்துவ மிஷனரிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என நினைத்தனர். இலவச பள்ளி, கல்லூரிகள் வந்து விட்டால் தமிழர்கள் முன்னேற்றி விடுவர், பின்னர் மதமாற்ற இயலாது என்ற பயம் திமுக கருணாநிதிக்கும் CSI கிறிஸ்துவ மத கும்பலுக்கும் வந்து விட்டது. விருதுநகரில் தோல்வியுற்ற காமராசரை, நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட குமரி வாழ் மக்கள் விரும்பி வேண்டினர். அவரும் அதை ஏற்று போட்டி இட்டார். அந்த நேரத்தில் “தமிழக முதல்வர் அமெரிக்க உளவாளி அண்ணா" அவர்களோ நோய்வாய்ப்பட்டு சிகிட்சை பெற்று வந்தார். தேர்தல் மன்னன் என்ற பெயரைக் காமராஜரிடமிருந்து தட்டிப் பறித்துக் கொண்ட கருணாநிதியோ 2 வது முறையும் ஒரு தேர்தல் தோல்வியைக் காமராசருக்குத் தரத் திட்டம் தீட்டுகிறார். திரு. காமராசருக்கு எதிராக குமரியில் யாரும் போட்டியிடுவதற்கு முன் வராத நிலையில்,கருணாநிதி அவர்களும், தினத்தந்தி நாளிதழ் அதிபர் சி.பா. ஆதித்தனாரும், நேசமணியை அண்ணன், அண்ணன் என்று சதா காலமும் கூப்பட்டு பின் பற்றி வந்த டாக்டர் எம்.மத்தியாஸ் என்ற கிறிஸ்துவ நாடாரை காமராசருக்கு எதிராக தேர்ந்தெடுத்தனர். . “ஒரு காலத்தில் காங்கிரஸ்காராக இருந்து எப்படியும் அந்த இயக்கத்தில் தனக்கென ஒரு தனியிடம் பெற துடித்து, அது நிறைவேறாத நிலையில்,எதிரணியில் சேர்ந்து தன் பத்திரிகைச் செல்வாக்கால் காங்கிரஸ்காரர்களை கார்ட்டூன் போட்டே காமராரை வீழ்த்திய தினத்தந்தி ஆதித்தனாரின் புதிய நட்பு கருணாநிதிக்கு அன்று ஒரு வரப்பிரசாதகமாக அமைந்திருந்தது. எனவே காமராசரைப் பலி கொள்ள நாகர்கோவில் தொகுதியிலேயே ஒரு சரியான ஆளைத் தேடத் தொடங்கினார். அவருடைய கழுகுப் பார்வையில் சிக்கியவர்தான் டாக்டர் மத்தியாஸ். 1967- தேர்தலில் மார்ஷல் நேசமணியை எதிர்த்து நின்று தோன்றிருந்தவர். மக்கள் இவரை மார்ஷலின் மறு உருவமாக ஏற்றுக் கொள்வர் என்று கருணாநிதி கணக்குப் போட்டார். ஆனால் டாக்டர் மத்தியாசுக்குத் தலைவர் காமராசரை எதிர்த்து நிற்க விருப்பமில்லை. ஆனால், CSI சர்ச் எனப்படும் தென்னிந்திய திருச்சபை கிறிஸ்துவ மத கும்பல்கள் மற்றும் கிறிஸ்துவ நாடார் கூட்டமைப்பு கொடுத்த அழுத்தத்தால் மேலடித்து நகர்த்தப்பட்ட அம்மியாகத்தான் கடைசியில் ஒப்புதல் தந்தார். மத்தியாசுக்கு ஆதரவாக மு.கருணாநிதி பிரச்சாரம் செய்த போது, 'விருதுநகரில் விலை போகாத மாடு, வடசேரி சந்தைக்கு வந்திருக்கிறது, பல்லைப் பிடிச்சுப் பார்த்து, வாலைப் பிடிச்சு பார்த்து ஓட்டு போடுங்கள் என்று காமராஜரை கேவலமாக பொது மேடையிலே பேசினார். மத்தியாசுக்காக இரண்டு மாதங்கள் தொடர்ந்து நாகர்கோவிலில் தங்கி பிரச்சாரம் செய்தார் கருணாநிதி .காமராசரை தோற்கடிப்பதற்காக பல்வேறு உக்திகளைக் கையாண்டார். “ஒருவர் வந்த நாடார், ( காமராசர் விருது நகர்காரர்) மற்றொருவர் சொந்த நாடார் என்று நாடார்களை பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டார். ( குமரி நாடார்) கருணாநிதி வீசிய காமராஜருக்கு எதிரான் பிரசார ஆயுதங்களை கீழே படியுங்கள். ஒருவர் சிவனை வணங்குகிறவர். மற்றொருவர் சிலுவையை வணங்குகிறவர். இந்த மாவட்ட மக்கள் நன்கு படித்தவர்கள். எனவே சொந்த நாடாருக்கு (கிறிஸ்துவ நாடாாருக்கு)வாக்களியுங்கள்.” என்று கருணாநிதி பொது மேடைகளிலே பிரச்சாரம் செய்தார். "கிறிஸ்தவ நாடார் கூட்டமைப்பு "சார்பில், இந்தியன் எக்ஸ்பிரஸ் சனவரி 2 1969 அன்று ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் 'இந்த தொகுதியில் பாதிக்கு மேற்பட்டோர் கிறிஸ்தவ நாடார்கள். எனவே இத்தொகுதி கிறிஸ்தவர்களுக்குரியது. ஒரு கிறிஸ்தவரை தேர்ந்தெடுக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையாகும்' என குறிப்பிட்டு மத்தியாசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. அதாவது காமராஜர் ஒரு இந்து அவருக்கு ஒட்டு போடதீங்க என்பதே என்பதே தேர்தல் கோஷம். ஒவ்வொரு கிறிஸ்துவ நாடார் சர்ச்களிலும் மீட்டிங் போட்டு காமராஜர் ஒரு இந்து அவருக்கு ஒட்டு போடாதீங்க என்று பிரசாரம் செய்த புண்ணியவான்கள்தான் அன்று கருணாநிதிக்கு ஆதரவாக செயல்பட்ட கிறிஸ்துவ நாடார்கள். காமராஜர் ஒரு இந்து நாடார் ஒட்டு போடாதீங்க, அவர் சிவனை கும்பிடுபவர் என்று சொல்லி, பிரச்சாரம் செய்த கிறிஸ்துவ நாடார் கூட்டமைப்பு அன்று தெருத் தெருவாக பிரசாரம் செய்தது. காமராஜ் நாடாரை எதிர்த்து நிற்பவர் யார் ?. மத்தியாஸ் நாடார்தான் நிற்கிறார் என கருணாநிதி பேசிய செய்தி 23 டிசம்பர் 1968 இல் தினதந்தியில் வெளி வந்தது. 'காமராசர் நேசமணியின் அரசியல் வாழ்வை நாசம் செய்தார்' என நேசமணியின் சகோதரரின் பேட்டி டிசம்பர் 10 1968 மாலை முரசு இதழில் வெளியானது…. காமராசர் இந்தியை வரவேற்கிறார். எனவே அவருக்கு வாக்களிக்காதீர்கள் என முஸ்லீம் லீக் கட்சியிலுள்ள இஸ்மாயில் சாகிப் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்… மத்தியாசுக்காக கருணாநிதி, நெடுஞ்செழியன், தினத்தந்தி பத்திரிகையின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார், தமிழரசுக் கழகம், முஸ்லீம் லீக், திராவிட கழகம் என பல கட்சிகள் வேலை செய்தன. பிரச்சாரத்தில் முக்கியமாக சாதி மத உணர்வுகள் தூண்டி விடப் பட்டன. சாதி மதம் பார்க்காமல் தமிழ்நாட்டை முன்னேற்றிய கல்விக் கண் திறந்த காமராஜரையே தோற்கடிப்பதற்காக நாடார் சாதிக்குள் மத சண்டையை மூட்டி விட்டது திமுகவும், அதற்கு ஆதரவாக CSI சர்ச் என்ற தென்னிந்திய திருச்சபையும்தான். CSI சர்ச் எனப்படும் தென்னிந்திய திருச்சபை கும்பல் மற்றும் கிறிஸ்துவ நாடார் கூட்டமைப்பு மூலம், பத்திரிக்கையில் காமராஜர் இந்து நாடார் ஒட்டு போடாதே என வெளியிட வைத்தவர் திமு க, கருணாநிதி . பொதுக் கூட்டங்களுக்கு முக்கியத்துவம் தராமல், காமராசர் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரங்கள் செய்தார். காமராசரைக் குறித்த அத்தனை விமர்சனங்களுக்கும் கொட்டில்பாடு மீனவ சமுதாய தலைவர் எஸ்.துரைசாமியே பதிலடி தந்தார். மீனவர் கொட்டில்பாடு எஸ் துரைசாமியின் தேர்தல் பிரச்சார நுணுக்கத்தைப் பார்த்த காமராசர் கொட்டில்பாடு எஸ் துரைசாமியிடம், 'நீ தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பிறகுதான் எனக்கு தெம்பாக இருக்கிறது' என கூறினார். கிருஸ்தவ நாடார்களில் பெரும்பான்மையோர் மருத்துவர் மத்தியாசுக்கு வாக்களித்தனர். இந்து நாடார்களில் பெரும்பான்மையோர் காமராசருக்கு வாக்களித்தனர். முஸ்லீம்களில் பெரும்பான்மையோர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திரு.அலிக்கு வாக்களித்தனர். கொட்டில்பாடு எஸ்.துரைசாமியின் அபார முயற்சியினால் மீனவர்கள் பெரும்பான்மையோர் காமராசருக்கு வாக்களித்தனர். ஜனவரி 8, 1969 அன்று வாக்குகள் எண்ணப்பட்ட போது காமராசர் 1,28,201 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காமராசரை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த பெருமை அனைத்து சமுதாய இந்துக்களுக்கும் மீனவ மக்களுக்கும் உண்டு என்றால் அது மிகையாகாது. ஆம் இதில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்த கொட்டில்பாடு எஸ்.துரைசாமி அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்த இடைத் தேர்தலுக்குப் பிறகு அடுத்த தேர்தல் 1971-ல் நடந்தது. அதிலும் பெருந்தலைவர் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட்டார். இச்சமயம் டாக்டர் மத்தியாஸ் இவரை எதிர்த்து நிற்பதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இவரை எதிர்ப்பதற்கு யாரும் முன் வராததை உணர்ந்த தி.மு.க. அரசு (அப்போது கருணாநிதி முதலமைச்சர்) திரு. எம்.சி. பாலனை போடடியிடச் செய்தது.“பின்னாளில் திரு. பாலன் அவர்களை திரு. பீட்டர் அவர்கள் “காமராசரை எதிர்த்துத் தேர்தலில் நிற்க மாட்டேன் என்று சொல்லியிருக்கலாமே? என கேட்டதற்கு ,அது “திமுக கட்சி தலைவர் கலைஞரின் நிர்ப்பந்தம்.” என்று கூறினார். அதாவது நாடார் சமுதாயம் தனியாக தலை எடுக்க கூடாது என்பதே அதன் உள் அர்த்தமாகும், டாக்டர் மத்தியாசு திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து எம்.எஸ். சிவசாமியை கருணாநிதி தி.மு.க. சார்பில் களமிறக்கினார். வாக்குகள் எண்ணப்பட்டன. டாக்டர் மத்தியாசு முன்னிலை பெற்றார். ஆனால் டாக்டர்.மத்தியாசு தோற்கும் வரை அவரது வாக்குகள் மீண்டும் மீண்டும் எண்ணப்பட்டன. முடிவாக, வெற்றியடைந்த நிலையில் இருந்த டாக்டர் மத்தியாசு 26 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அச்சமயம் தமிழக முதல்வராக கருணாநிதிதான் இருந்தான். நாகர்கோவில் பாராளுமன்ற தொகுயில் திரு.காமராசருக்கு எதிராகக் களமிறக்க டாக்டர்.மத்தியாசைத் தேடிச் சென்ற கருணாநிதி திருச்செந்தூர் தொகுதியில் டாக்டர் மத்தியாசுவைத் தோற்கடிப்பதற்காக பதிவான வாக்குகளை பல தடவைகள் மறு எண்ணிக்கைக்கு வழி கோலியது ஏன்?. காமராஜரை எதிர்க்க மத்தியாசு தேவைபட்டார். தி மு க வேட்பாளர் எம்.எஸ். சிவசாமியை எதிர்த்தவுடன் டாக்டர். மத்தியாஸ் தேவையில்லாமல் போனார்.சந்தர்ப்ப அரசியல் செய்வதில் இழி மன்னன்தான் கருணாநிதி. ஆனால் டாக்டர் மத்தியாஸ்?. கிறிஸ்துவ மத வெறியால் இந்து என்ற காரணத்திற்காக காமராசரை விழ்த்தும் ஆயுதமாக இருந்ததன் பலன் ,கருணாநிதியால் திட்டமிட்டு தோற்கடிப்பட்டார்.பிராமண எதிர்ப்பு ,இந்து மத எதிர்ப்பு என்ற திமுகவின் கட்சி கொள்கைகளை நாடார் சமுதாய கொள்கை என CSI தென்னிந்திய திருச்சபை கிறிஸ்துவ மத கும்பல் மூலம் நாடார் சமுதாயத்திற்குள் திணித்து வைத்துள்ளனர்.இதற்கு காரணம் திமுக கருணாநிதிதான். சிறுபான்மை என்ற ஒரு கேவலமான சலுகைக்காக காமராஜரை தோற்கடித்த கருணாநிதி காலில் கிறிஸ்துவ நாடார்கள் விழுந்து கிடப்பதை உணர்த்துவற்காகதான். இவைகளை ஏன்? இங்கே விரிவாக எடுத்துரைத்துள்ளேன் என்றால், கருணாநிதி தமிழர்களிடையே சாதி சண்டைகளை உருவாகுவதிலும் மத பிரிவினைகளை உண்டாக்குவதிலும் வல்லவன் என்பதை விளக்கவேயாகும். காமராசரையே பதம் பார்க்க நினைத்த கேவலமான கிறிஸ்துவ மதம் இனியும் வேண்டுமா என நாடார்களாகிய நாம் சிந்திக்க வேண்டும். காமராஜர் உயிருடன் இருந்த கடைசி நிமிடம் வரை தொல்லை கொடுத்த கருணாநிதியும், திமுகவும் காமராசரை தன் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு வலம் வருகிறார்களே எதற்காக?. காமராசரின் பெயரைச் சொல்லி நாடார் சமூக மக்களின் அரசியல் ஆதரவு பெறுவதற்காக மட்டும்தான். நாடு போற்ற வாழ்ந்த பச்சை தமிழர் காமராஜரை சாதி சங்க தலைவர் போல சுருக்கி விட்டதற்கு காரணம் சுய நலமாக அன்று செயல் பட்ட கிறிஸ்துவர்களும், திராவிடமும், இந்திராவின் காங்கிரசும்தான்.. காமராஜர் இறந்த பொழுது காங்கிரசும் இறந்து விட்டது. தற்போது இருப்பது இந்திராவின் குடும்ப காங்கிரஸ். காமராஜரின் கடைசி ஆசையே திராவிடத்தை ஒழிப்பதுதான்.. திராவிடம் தமிழர்களையும் தமிழ்நாட்டு மக்களையும் இந்து மற்றும் கிறிஸ்தவ நாடார் சமூக மக்களையும் நசுக்கி விட்டது. காமராஜரின் மரண சாசனமே "திராவிடத்தை ஒழிப்பது" தான்.அதை நிறைவேற்ற வேண்டும். தவறினால் தமிழினம் அழிந்து விடும். ஓட்டுக்காக காமராஜரை ஒரு சாதிக்கு தலைவர் போல சித்தரித்து காட்டுகிறது திராவிட கட்சிகள். இரண்டு பிரதமர்களை தந்த தலைவன் என்பதால் பெருந்தலைவர் என்றும், வட இந்திய மக்களால் கருப்பு காந்தி என்றும் அழைக்கபட்டார். காமராஜர் வாழ்ந்த கடைசி நிமிடம் வரை தன்னை நாடாராக சிந்தித்தது இல்லை. நாட்டு மக்களின் முன்னேற்றதிற்காகவே சிந்தித்தார் என்பதை அந்த காலத்து பெரியவர்கள் நன்றாகவே அறிந்து இருந்தனர். ஆனால் இந்த காலத்து இளைஞர்களுக்கு தெரியவில்லை. காமராஜரை தனிப்பட்ட ஒரு கட்சியின் தலைவராகவும் சாதி அடையாளத்தோடும் நோக்கக் கூடாது. அவரை ஒட்டு மொத்த தமிழகத்தின் தலைவராக அனைவரும்(கட்சி,மத,ஜாதி வேறுபாடின்றி) நோக்க வேண்டும். ஆனால் காமராஜரை தோற்கடித்தது சி.எஸ்.ஐ கிறிஸ்துவ என்ற அந்நிய மத வெறியும், திமுக கருணாநிதியும்தான் என்பது உண்மை உண்மை உண்மை............................... திருட்டு திராவிடம் அழியட்டும் தமிழன் ஆட்சி மலரட்டும்

Rate this:
Raja - Astana,கஜகஸ்தான்
15-ஆக-201817:00:21 IST Report Abuse

Raja. காமராஜருக்கு தேனாம்பேட்டையில் தான் இறுதி மரியாதையை நடத்த திட்டம் தீட்ட பட்டிருந்தது . ஆனால் கலைஞர் தான் காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கினர்.

Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
15-ஆக-201809:34:14 IST Report Abuse

kowsik Rishiசூப்பர் இதை தான் இப்படி தான் அறிக்கைகள் வரவேண்டும் மு.கருணாநிதி குடும்பம் அண்ணா நினைவிடத்தை ஆக்ரமிப்பு செய்து விட்டது என்று ஒரு பொது நல வழக்கு போடுங்கள் அண்ணா நினைவிடம் தமிழ் இந்திய தேசிய பொது சொத்து அதை ஆக்ரமிப்பு செய்து அவதூறு பரப்பும் இவர்களை சட்டத்தில் வைத்து அகற்றவேண்டும் சபாஷ் ஜெயகுமார் சார் - மக்கள் அவர்கள் பக்கம் இல்லை மு.கருணாநிதியின் குடும்ப அராஜகம் இது திமுக என்ற கட்சியே இல்லை அப்புறம் எங்கே அவர் ஒரு தலைவர்

Rate this:
மேலும் 175 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X