பதிவு செய்த நாள் :
கேரளாவில் பெய்யும் பலத்த மழைக்கு 22 பேர் பலி
26 ஆண்டுக்கு பின் இடுக்கி அணை திறப்பு

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தின், இடுக்கி அணையில், நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதை அடுத்து, 26 ஆண்டுகளுக்கு பின், நேற்று நீர் திறந்து விடப்பட்டது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கேரளாவில் பெய்து வரும் பலத்த மழைக்கு பலியானார் எண்ணிக்க 26பேராக அதிகரித்துள்ளது.

kerala,rain,கேரளா,மழை


கேரள மாநிலத்தில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. இரு மாதங்களாக, கன மழை பெய்து வருவதால், இங்குள்ள அணைகள் உட்பட நீர் நிலைகள் நிரம்பி விட்டன; ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன; 100க்கும் மேற்பட்டோர் மழைக்கு பலியாகி உள்ளனர்.

சமீபகாலமாக பெய்து வரும் கன மழையால், கேரள மாநிலத்தின், இடுக்கி அணையில்,

நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இந்த அணையில், 2,403 அடிக்கு தண்ணீர் தேக்கலாம். 2,398 அடி தண்ணீர் தேங்கினால், அணை திறக்கப்படும். இதற்கு முன், 1992ல், இந்த அணை திறக்கப்பட்டது. அதன்பின், இப்போது தான் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை, இடுக்கி அணையின் நீர்மட்டம், 2,398 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் மதகுகள் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக, அணையில் இருந்து வினாடிக்கு, 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து, கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

'தண்ணீர் வரும் பாதையில், 'செல்பி' எடுக்கவோ, மீன் பிடிக்கவோ முயற்சிக்க வேண்டாம்' என, அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இதற்கிடையே, கேரளா முழுவதும், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கண்ணுார், கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

நேற்று, பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 26பேர் வரையில் பரிதாபமாக

Advertisement

உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்தனர்; மேலும், சிலரை காணவில்லை. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில், மின்சாரம் தடைபட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில், மீட்புப் பணிகளை மேற்கொள்ள, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். கன மழை காரணமாக, இடுக்கி, கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

விமான நிலையத்திற்குள் புகுந்த வெள்ள நீர்

கேரளா முழுவதும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கொச்சி விமான நிலையத்திற்குள், வெள்ள நீர் புகுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டு மணி நேரம், விமான நிலையம் மூடப்பட்டு, பின், மீண்டும் திறக்கப்பட்டது.


ரூ.5 கோடி நிதி உதவி:

கேரளாவில் வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ள, தமிழக அரசு சார்பில், ஐந்து கோடி ரூபாய் வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய, தமிழக மக்களும், தமிழக அரசும் தயாராக உள்ளது எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
13-ஆக-201806:22:48 IST Report Abuse

ஆ.தவமணி,   சாஸ்திர - சம்பிரதாய மீறல் செய்து, சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயத்திற்குள் .. பெண்களை அனுமதிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதால் ஏற்பட்ட இயற்கையின் சீற்றம் இது... மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் என்ற பெயரில் விளம்பரம் தேட முயற்சிப்பவர்கள் பாரம்பரிய இந்துமத சனாதன தர்மங்களை எதிர்த்து விளையாடி மக்களையும், நாட்டையும் துன்பத்தில் ஆழ்த்த வேண்டாம்..

Rate this:
Mal - Madurai,இந்தியா
10-ஆக-201815:38:44 IST Report Abuse

MalWe are not against keralites but we condemn their silence when Hindus are converted in masses all these years to desert religions which have only preachers and no gods. Sabari... Related to God Rama has lived in there... Seramaan Perumal nayanmar have lived there... What is native has become a mocking stock for keralites... And their communist and christian minds... Let your education help you.

Rate this:
Mal - Madurai,இந்தியா
10-ஆக-201815:34:27 IST Report Abuse

MalHindus who don't fight for their rights n existence and who succumb to conversion pressures n who remain silent when their traditions are attacked and who dont do anything to preserve their culture and are silent spectators or supporters of conversions are better dead this way than remain alive.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X