சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ராஜாஜி அரங்கத்தில் திடீர் நெரிசலுக்கு காரணம்;
போலீசாருக்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பில்லை

சென்னை : பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, தி.மு.க., நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்காததே, கருணாநிதி உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பலர் பாதிக்க காரணமாகி விட்டது.

கருணாநிதி,ராஜாஜி அரங்கம்,திடீர் நெரிசல்,காரணம்,போலீசாருக்கு,நிர்வாகிகள்,ஒத்துழைப்பில்லை


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, சென்னை, ராஜாஜி ஹாலில், 2016 டிச., 6ல் வைக்கப்பட்டது. அப்போது, ஜெ., உடல் இருந்த கண்ணாடி பெட்டி அருகே, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் சூழ்ந்திருந்தனர். அவர்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த போலீசாரை சுற்றி, கயிறு கட்டப்பட்டிருந்தது. அதற்கு வெளிப்புறமாக சென்று, முக்கிய பிரமுகர்கள், ஜெ.,வுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ராஜாஜி ஹாலின் மையப்பகுதியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில், சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு வேண்டியவர்களை தவிர, வேறு யாரும்

அனுமதிக்கப்படவில்லை. முதல்வராக இருந்த, பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர், ராஜாஜி ஹாலின் படிக்கட்டுகளில் தான் அமர்ந்திருந்தனர்.

மதியம், கட்சி நிர்வாகிகள் பலர், ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த ஹாலின், இடது மற்றும் வலது பக்க வளாகத்தில் குவியத் துவங்கினர். போலீசார், யார் மீதும் தடியடி நடத்தாமல், அவர்கள் கொண்டு வந்த தடியை, தரையில் பலமாக அடித்தபடி சென்றனர். அதை பார்த்த தொண்டர்கள் பயந்து, அரங்கத்தை விட்டு கீழே இறங்கினர். கட்சியினர், போலீசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதால், கூட்டத்தால் பிரச்னை ஏற்படவில்லை.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல், அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில், அதிகாலை, 4:00 மணிக்கு, சர்க்கரை துறை ஆணையர் அனு ஜார்ஜ், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் லலிதா உள்ளிட்ட, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருந்தனர். அவர்கள், முன்னேற்பாடுகள் தொடர்பாக, ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

காலை 10:00 மணி வரை, வி.ஐ.பி.,க்கள் வரும் வழியில், கட்சி தொண்டர்கள் வரவில்லை. சில முன்னாள் அமைச்சர்கள் மட்டும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன், வி.ஐ.பி., வழியில் வந்தனர்.

Advertisement

அதை பார்த்த வெளியூரில் வந்திருந்த தொண்டர்கள், பொது வழி என, கருதி, அந்த வழியில் வர முயற்சித்தனர்.

தடுப்பை மீறி உள்ளே நுழைந்தனர்.அதில், ஒரு பகுதியினர், மைய அரங்கின் வலது பக்கத்தில் திறந்திருந்த கதவு வழியாக, உள்ளே நுழைந்து விட்டனர். இதனால், மைய அரங்கிலும், மூச்சு திணறல் ஏற்பட்டது.

கட்சியினருக்கு நன்கு அறிமுகமான நிர்வாகிகள், அறையில் இருந்தும், அவர்கள், கூட்டத்தை கலைக்க முயற்சிக்கவில்லை. பின், ஸ்டாலின் மற்றும் அவருடன் வந்த போலீசார், கூட்டத்தினரை கலைந்து செல்லும்படி கூறினர். அவர்களை பார்த்ததும், ஒளிந்து கொண்டனரே தவிர, பலர், இடத்தை விட்டு நகரவில்லை. தி.மு.க.,வினர் போலீசாருக்கு ஒத்துழைப்புவழங்கி இருந்தால், நெரிசல் ஏற்பட்டிருக்காது.


Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
12-ஆக-201818:26:41 IST Report Abuse

அம்பி ஐயர்“கட்டுப்பாடு கடைசியில் வருவதால் அதற்க்கு கழக மட்டைகள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை... கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற வாசகத்தை உருவாக்கியவர்கள் தவறு... “ சரி ... காசிமணி.... அப்படியெனில் கழக மட்டைகள் கடமையும் கண்ணியமும் காப்பவர்கள் என்ற அர்த்தம் வரதா....??? அவர்களிடம் மருந்துக்கும் கூட இம்மூன்றும் இல்லையே...

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-ஆக-201807:00:11 IST Report Abuse

Natarajan RamanathanAvan varla Ivan varlanu solreenga. Thyagi aravindane varalaiye ( 2g kesukku mattum miratti alaithu vandharkal)

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
10-ஆக-201820:14:30 IST Report Abuse

siriyaarFor karunaniti and co cadres are just like ants,

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X