பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கர்நாடகா அணைகளில் 1.35 லட்சம் கன அடி நீர் திறப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


சேலம் : கர்நாடகா அணைகளில், வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது. எட்டு மாவட்ட மக்களுக்கு, மத்திய அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துஉள்ளது.

கர்நாடகா அணை,நீர் திறப்பு,வெள்ள அபாய எச்சரிக்கைசேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி. இதில், 93.47, டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும். கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த பருவமழையால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பின. அங்கு திறக்கப்பட்ட உபரி நீரால், ஜூலை, 23ல், மேட்டூர் அணை நிரம்பியது. இங்கிருந்து, டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பதால், நேற்று, அணை நீர்மட்டம், 117.50 அடியாக சரிந்தது.


இந்நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில், நேற்று முன்தினம், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், இவற்றின் உபரி நீர், தமிழகத்திற்கு திறக்கப்பட்டது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் உபரி நீர் திறப்பு, நேற்று மாலை,

1.35 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கபினியில் இருந்து, 80 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ்.,சில் இருந்து, 55 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.


இந்த நீர், இன்று காலை முதல், தொடர்ச்சியாக வரும் என்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம், மளமளவென உயரும். கர்நாடகா அணைகளில், உபரி நீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், வினாடிக்கு, 17 ஆயிரத்து, 500 கன அடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு, நேற்று மதியம், 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.


இதன் ஒரு பகுதி, 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டது. நாளை, மேட்டூர் அணைக்கு வரும் நீரில் பெரும் பகுதி, உபரி நீராக திறக்க வாய்ப்புள்ளதால், காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் முதல் டெல்டா பாசன பகுதிகள் வரை, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


குறிப்பாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை ஆகிய எட்டு மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு, மத்திய அரசு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, 9,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று, 32வது நாளாக, அருவிகளில் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Advertisement


மீண்டும் நிரம்பிய அமராவதி:

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்மேற்கு பருவமழையால் மூன்று ஆண்டுகளுக்கு பின் அமராவதி அணை ஜூலை 16ல் நிரம்பியது. 3ம் தேதி வரை 19 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு திடீரென நீர் வரத்து அதிகரித்து மொத்தமுள்ள 90 அடியில் 87.90 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது. இரண்டாவது முறையாக அமராவதி அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.முழுவதும் கடலுக்கே :

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, கர்நாடகா ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 177.25, டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இதில் ஜூலையில் 31.24, டி.எம்.சி., வழங்க வேண்டும். ஆனால் பருவமழை கைகொடுத்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து அபரிமிதமாக 122 டி.எம்.சி., உபரி நீர் மேட்டூர் அணைக்கு கிடைத்தது. இதில் பாசனத்துக்கு 31, டி.எம்.சி., போக, 17, டி.எம்.சி., நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. தற்போது கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட 1.35 லட்சம் கன அடி உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரும்பட்சத்தில் அதன் பெரும் பகுதியை உபரியாக காவிரியாற்றில் வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது பாசனத்துக்கு பயன்படாமல் கடலுக்கே செல்லும்.Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
10-ஆக-201816:39:57 IST Report Abuse

Loganathan Kuttuvaவைகை நதி வறண்டு உள்ளது இந்த உபரி நீரை இந்த பக்கம் திருப்பி இருந்தால் இங்கு விவசாயம் செழித்திருக்கும்.

Rate this:
Meenu - Chennai,இந்தியா
10-ஆக-201808:59:59 IST Report Abuse

Meenuகட்டுமரம் தான் ஏகப்பட்ட அணைகளை கட்டியதா செய்திகள் வந்ததே, அந்த அணைகள் எல்லாம் என்னாச்சு, அதில் இந்த தண்ணீரை தேக்கி வைக்க வேண்டியதுதானே.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-ஆக-201808:55:15 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇப்பொழுது கருநாடக அணையை திறக்கவேண்டாம் என்று குமாரசாமி சொல்லுவாரா.. ? டப்பா டான்ஸ் ஆடிவிடும்

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X