அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்

கருணாநிதி மறைவுக்கு பின் தி.மு.க.,வில் அடுத்தது என்ன என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதற்கு விடை காண விரைவில் கட்சியின் உயர்மட்ட அமைப்பான பொதுக்குழு கூட்டப்படுகிறது. காலியாகியுள்ள கட்சி தலைவர் பதவி ஸ்டாலினுக்கு என்பதில் பெரிய அளவில் சர்ச்சை எழப் போவதில்லை என தெரிகிறது.

அதேநேரத்தில் அழகிரிக்கும், கனிமொழிக்கும், கட்சியில் என்ன பதவி தரப் போகிறார் ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கருணாநிதியின் உடலை நேற்று முன்தினம் மெரினாவில் நல்லடக்கம் செய்தபோது கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களின் கூட்டம் தி.மு.க.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றிய பணிகள் :


கருணாநிதியின் அயராத உழைப்பு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் சமூக வலைதள பிரசாரமாகி இருக்கிறது.

இதன் வாயிலாக தி.மு.க.,வின் சாதனைகள், கருணாநிதியின் மறைவால் இளைஞர்களுக்கு தெரிய வந்துள்ளது.

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சிலர் முதல்வர் பழனிசாமி தரப்பினரிடம் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. பின் ஸ்டாலின் அழகிரி, கனிமொழி ஒன்றாக சென்று முதல்வர் பழனிசாமியிடம் இடம் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் சட்ட சிக்கல்களை காரணம் காட்டி, மெரினாவில் இடம் தர அரசு மறுத்தது. ஸ்டாலின், இப்பிரச்னையை சட்டரீதியாக அணுகி வெற்றி பெற்றார்.

கருணாநிதி மறைவுக்கு குடும்ப ரீதியாக செய்ய வேண்டிய சடங்குகள் முடிந்த பின் தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, கட்சியில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றி முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்திமுடித்துள்ளார்.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பொதுக்குழுவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவியை கனிமொழிக்கும், தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை மீண்டும் அழகிரிக்கு வழங்குவது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஸ்டாலினுக்கு போட்டியாளராக இருக்க கனிமொழி விரும்பவில்லை. எந்த ஒரு காரியத்தையும் ஸ்டாலின் அனுமதி பெற்று தான் செய்கிறார். அதேசமயம், கட்சி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுகிறார். எனவே, அவருக்கு பொருளாளர் பதவி வழங்குவதால், தனக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார் என ஸ்டாலின் கருதுகிறார். அதேபோல அழகிரி விரும்பினால் தென் மண்டல அமைப்பு செயலர் பதவியை அவருக்கு வழங்கவும் ஸ்டாலின் தயாராக இருப்பதாக தெரிகிறது.

பொதுக்குழு :


'கருணாநிதியை தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்' என அழகிரி கருதினால், அவரது மகன் துரை தயாநிதிக்கு, கட்சி பதவியும், முரசொலி அறக்கட்டளை உறுப்பினர் பதவியும் வழங்க பேச்சு நடத்தப்பட்டுள்ளது. பொதுச்செயலர் பதவிக்கு தற்போது அன்பழகனே தேர்வு செய்யப்படுகிறார். அவர் முன்மொழிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில், பொதுக்குழு கூடும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SARAVANAN G - TRICHY,இந்தியா
11-ஆக-201804:56:23 IST Report Abuse

SARAVANAN Gஉன் வயித்தெரிச்சலை என்னால் உணர முடிகிறது.......நீ மெரினா எப்போதாவது வந்தால் முதலில் உன் கோமளவள்ளியை பார்த்து விட்டு, மனமிருந்தால் , அப்படியே அங்கு ஓய்வெடுக்கும் இரட்டை சூரியர்களையும் பார்த்து விட்டு, மெரினாவில் விற்கும் கரும்பு சாற்றையும் அருந்தி விட்டு வா..... உன் மனசூடு குறையும்.......நன்றி....

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-ஆக-201820:52:06 IST Report Abuse

Natarajan Ramanathanசாவுக்கு வந்த கூலிப்படையில் செத்துப்போன நாலுபேர் குடும்பத்தில் யாருக்கும் எந்த பதவியும் கிடையாதா? Atleast கனிமொளி வீட்டிலாவது "ஏதாவது" வேலை தரலாமே

Rate this:
Hariharan Iyer - Nagpur,இந்தியா
10-ஆக-201817:51:27 IST Report Abuse

Hariharan Iyerபொருளாளர் பதவி மட்டும் வெளி ஆள் யாருக்கும் தர மாட்டோம்.,

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-ஆக-201805:20:10 IST Report Abuse

Manianகொள்ளை அடித்த விஷயம் வெளியே வரலாமா? பினாமிகள் பெயர் தெரிந்தால் அவர்கள் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுமே. சில பல காரங்களால் எல்லமே குடும்பம் கையில்தான். தொண்டர்கள் அடிமைகளாகவே (ஈஜிப்டில் இருந்ததுபோல்) இருக்க வேண்டும். ...

Rate this:
மேலும் 110 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X