கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் அதிகாரி கைது இல்லை ஐகோர்ட்டில் தனிப்பிரிவு தகவல்

Added : ஆக 10, 2018
Advertisement

சென்னை:சிலைகடத்தல் தடுப்பு பிரிவு தொடர்ந்தவழக்கில், அறநிலையத் துறை பெண் அதிகாரியை, கைது செய்ய மாட்டோம் என, உயர் நீதிமன்றத்தில், தனிப்பிரிவு போலீஸ் சார்பில்உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, முன்ஜாமின் விசாரணையை, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, சோமஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி சிலைகள் செய்யப்பட்டன. இந்த சிலைகள் தயாரிப்பில், ௮.௭௭ கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாக, சிவகாஞ்சி போலீஸ் பதிவு செய்த வழக்கில், அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார்.

கவிதாவுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக உள்ள, திருமகள் என்பவர், முன்ஜாமின் கோரி, தாக்கல் செய்த மனு,டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.போலீஸ் தரப்பில் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதுவரை, கைது செய்ய தடை விதிக்கும்படி, திருமகள் சார்பில் ஆஜரானவழக்கறிஞர் கோரினார்.

இதையடுத்து, 'தற்போது, பெண் அதிகாரியை கைது செய்ய மாட்டோம்' என, தனிப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X