பொது செய்தி

தமிழ்நாடு

முதல் பருவத்தேர்வில் 'பாஸ் மார்க்'! புதிய பாடத்திட்டத்தால் திக்..திக்...

Added : ஆக 10, 2018
Advertisement

உடுமலை:புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடந்த முதல் தேர்வில், மாணவர்கள், அதிக தேர்ச்சி பெற்றுள்ளதால், அரசுப்பள்ளி நிர்வாகத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டதும், ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.வினாக்கள் எவ்வாறு கேட்கப்படும் என்ற மாதிரி இல்லாததால், பாடம் முழுவதும் நடத்த வேண்டிய கட்டாயத்தில், ஆசிரியர்களும், அனைத்தையும் படிக்க வேண்டிய நிலை மாணவர்களுக்கும் தொடர்கிறது.
இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தின் முதல் தேர்வின் மூலம், வினாக்கள் எவ்வாறு அமையும், மற்றும் மதிப்பெண் கணக்கீடு குறித்து அறிந்துகொள்ள முடியும் என எதிர்பார்த்தனர். முதல்நிலை பருவத் தேர்வு அனைத்து பள்ளிகளிலும் நிறைவடைந்து, மாணவர்களுக்கு தேர்ச்சி அட்டைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில், பெரும்பான்மையான பள்ளிகளில், 90 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி பெற்றிருப்பதால், பள்ளி நிர்வாகத்தினர் நிம்மதியடைந்துள்ளனர். இருப்பினும், முதற்கட்ட தேர்வின் அடிப்படையில், பொதுத்தேர்வின் மாதிரியை முழுவதும் அறிந்துகொள்ள முடியாது.காலாண்டு தேர்வில்தான் கூடுதலாக பாடங்களும், பொதுத்தேர்வின் மாதிரியான நடைமுறையும் பின்பற்றப்படும். இதனால், அடுத்தகட்டமாக காலாண்டு தேர்வுக்காக ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X