பொது செய்தி

தமிழ்நாடு

காளான் வளர்ப்பில் களமிறங்க அழைப்பு:ஊக்கமளிக்கும் தோட்டக்கலைத்துறை

Added : ஆக 10, 2018
Advertisement

உடுமலை:குறைவான முதலீட்டில், நிறைவான லாபம் பெறுவதற்கு காளான் வளர்ப்பு சிறந்த தொழிலாகும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலையில், அனைத்து வகையான பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், காளான் வளர்ப்பில், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. குறைந்த முதலீட்டிலும், சிறப்பான வருவாய் ஈட்ட காளான் வளர்ப்பு சிறந்த உதாரணம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மொட்டுக்காளான், சிப்பிக்காளான் உள்ளிட்ட பல்வேறு வகை காளான் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், கோ.1 மற்றும் 2 என்ற ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதைத்தவிர, ஏ.பி.கே., 1, 2, எம்.டி.ஏ., 1, ஊட்டி, 1 உள்ளிட்ட பல்வேறு வகையான காளான்களும் உள்ளன.காளாண் படுக்கை அமைக்க, 60க்கு, 30 செ.மீ., அளவு உள்ள பாலித்தீன் பைகள் போதுமானதாகும்.
அதன் ஒருபுறம் கட்டிவிட்டு, ஒரு செ.மீ., இடைவெளியில், 2 துளைகள் இட வேண்டும். அதில், 5 செ.மீ., உயரத்தில் வைக்கோல் அடுக்கி, 25 கிராம் காளான் விதைகள் துாவ வேண்டும். இதேபோல் ஒரு பை முழுவதும் ஐந்து அடுக்குகளாக அமைத்துக்கொள்ளலாம். பின் மேல்பகுதியையும் இறுக்க கட்ட வேண்டும். தினமும், காளான் படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம். முளைக்க துவங்கிய ஒருவார காலத்தில் அறுவடைக்கு வரும் காளான்களை ஒருநாள்விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம். குடில்களை சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் பராமரிப்பதன் மூலம், தரமான காளான் கிடைக்கும்.காளான் வளர்ப்புக் குறித்து, கோவை வேளாண் பல்கலையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.ஆர்வமுள்ளவர்கள் பயிற்சிபெற்று காளான் வளர்ப்பில் ஈடுபட்டால் நல்ல வருவாய் கிடைப்பது உறுதியாகும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X