பொது செய்தி

இந்தியா

எண்ணெய் இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மிச்சப்படுத்த பிரதமர் இலக்கு

Updated : ஆக 10, 2018 | Added : ஆக 10, 2018 | கருத்துகள் (38)
Advertisement
கச்சா எண்ணெய், உயிரி எரிபொருள், பிரதமர் மோடி

புதுடில்லி: உயிர் எரிபொருள் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மிச்சப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.


கூடுதல் வருமானம்

உலக உயிரி தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், உயிர் எரிபொருளானது, கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும். சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கொடுக்கும். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் பெருகும்.


மிச்சம்

பெட்ரோலில் எத்தனால் கலப்பது, 2002ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது . ஆனால், பின்னால் வந்த அரசுகள் இதில் கவனம் செலுத்தவில்லை. மீண்டும் 2014 ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் தான் இந்த திட்டம் மீண்டும் துவக்கப்பட்டது.
மத்திய அரசின் தொடர் முயற்சி காரணமாக, 2013-2014ல் 38 கோடி லிட்டர் எத்தனால் கலந்த பெட்ரோல் தயாரிக்கப்பட்டது. இது, 2017 - 18 ல் 141 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் இறக்குமதியில் அரசுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. அடுத்த 4 ஆண்டிற்குள் 450 கோடி லிட்டர் எத்தனால் கலந்த பெட்ரோல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 12 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடியும். 2022க்குள் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலந்து எரிபொருளாக பயன்படுத்தப்படும். இதனை, 2030ல் 20 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு

உயிரி எரிவாயு சுத்திகரிப்பு ஆலைகள், ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 12 ஆலைகள் நிறுவப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-ஆக-201804:35:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நவம்பர் 2017. U.S. ethanol producers, looking to relieve a growing domestic glut, are hunting for new international fuel markets to replace China and Brazil after trade disputes slashed exports to those top buyers. Without new markets, U.S. producers may have to pare output after spending hundreds of millions of dollars on biofuel production plants in recent years. Currently, the most promising potential destinations for U.S. fuel exports appear to be Mexico and India, industry utives said. அதாவது அமெரிக்காவில் எத்தனால் உற்பத்தி அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டபடியால், அதை உள்ளூர் மார்க்கெட்டில் விற்பது கடினமாகி விட்டதால், புது சந்தைகளை (இந்தியா, மெக்சிகோ) தேடுகிறார்கள். அதான் நம்ம மோசடி மஞ்சப்பையை தூக்கிகிட்டு நாடு நாடா சுத்துறாரே. பெட்ரோல் வாங்குவதை குறைத்து விட்டு இப்போ அம்பானி எத்தனால் இறக்குமதி செய்ய போறாப்புலே. அதுக்கு அண்ணன் மோசடி அரிதாரம் பூசி நாடகமாடுராறு.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-ஆக-201804:20:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எண்ணெய் இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மிச்சப்படுத்த பிரதமர் இலக்கு.. இந்தாளு பண்ணிய பெட்ரோல் விலை ஏற்றத்தில் இந்த நாலு வருடத்தில் 12 லட்சம் கோடி ரூபாய், மக்கள் பணத்தை அடிச்சி பிடுங்கியிருக்காரு.. ஆக்சுவலி, அதுக்கு மேலே இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
raaj - surat,இந்தியா
11-ஆக-201802:31:57 IST Report Abuse
raaj எல்லாம் வாய் பேச்சு மக்கள் முன்னேற இல்லை நாடும் முன்னேற இல்லை நீங்களும் அம்பானியும் நல்ல முன்னேற்றம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X