ராஜிவ் கொலையாளிகள் விடுவிப்பு விவகாரத்தில் மத்திய அரசு கைவிரிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
ராஜிவ் கொலையாளிகள், சுப்ரீம் கோர்ட், கைவிரிப்பு

புதுடில்லி: முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், 'ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பது, மோசமான முன்னுதாரணமாக இருக்கும்; அவர்கள் செய்தது, ஒப்புமைப்படுத்த முடியாத குற்றம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க அனுமதிக்கக் கோரி, 2016ல், மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது.அந்த கடிதத்தில், 'ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிப்பதென, மாநில அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, மத்திய அரசின் ஒப்புதல் அவசியமாகிறது' என, கூறப்பட்டிருந்தது.'இந்த கடிதம் தொடர்பாக, மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்' என, ஜன., 23ல், உச்ச நீதிமன்றம்

உத்தரவிட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக இணை செயலர், வி.பி.துாபே, உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவில், மத்திய அரசுக்கு சம்மதம் இல்லை. அவ்வாறு விடுவிப்பது, மோசமான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும்.சர்வதேச தொடர்புள்ள பிற பயங்கரவாதிகள் குறித்த வழக்குகளில், இத்தகைய முடிவு, மோசமான ன்விளைவுகளை ஏற்படுத்தும்.ராஜிவ் கொலையாளிகளுக்கு, மரண தண்டனை விதிக்க உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றம், பொருத்தமான காரணங்களை முன்வைத்தது. 'ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், வேறெதற்கும் ஒப்புமைப்படுத்த முடியாத

பயங்கர குற்றம்' என, உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, இந்த மனுவை பரிசீலித்த பின், விசாரணையை ஒத்தி வைத்தது.

25 ஆண்டு சிறைவாசம் :

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதுாரில், 1991, மே, 21ல், காங்., சார்பில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பங்கேற்றார். அப்போது, மனித வெடிகுண்டாக ஊடுருவிய பெண் விடுதலைப்புலி தணு, வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், ராஜிவ், உடல் சிதறி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில், மேலும்,

14 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த, சென்னை, 'தடா' நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட, 26 பேருக்கும் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய நால்வருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.பிறருக்கு, பல்வேறு வகைகளில், சிறைத் தண்டனை விதித்தது. இவர்களில், நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, காங்., தலைவர், சோனியா தாக்கல் செய்த மனுவை ஏற்று, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.இந்த வழக்கில், பலரது தண்டனை காலம் முடிந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளான, முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் மட்டும், 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க, அளவு கடந்த தாமதம் ஆனதை காரணம் காட்டி, 2014, பிப்., 18ல், அவர்களின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-ஆக-201822:05:27 IST Report Abuse

Parthasarathy Badrinarayananராஜீவ் கொலையாளிகளை சீக்கிரம் தூக்கில் இடவேண்டும் . அவர்களுக்கு ஆதரவாக பேசும் தேசத்துரோகிகளையும் தூக்கிலிடவேண்டும்

Rate this:
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
11-ஆக-201822:05:02 IST Report Abuse

R.MURALIKRISHNANகளவாணிக்கு கூட ஒத்துழைத்தவனும் கூட்டு களவாணி தான்.இவனுகளுக்கு ஒத்தூதுபவர்களும் தமிழ் எதிரிகளே

Rate this:
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
11-ஆக-201822:00:20 IST Report Abuse

R.MURALIKRISHNANஇவர்களை வெளியே விடக்கூடாது.அப்பாவிகளை கொன்ற நயவஞ்சக கயவர்கள்.

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X