பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கருணாநிதிக்கு, 'பாரத ரத்னா'
பார்லிமென்டில் கோரிக்கை

'தி.மு.க., தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான, கருணாநிதிக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில், பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கருணாநிதி, பாரத ரத்னா


ராஜ்யசபாவில், நேற்று, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேசியதாவது; திராவிட இனத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் கருணாநிதி. 80 ஆண்டுகள் பொது வாழ்விலும், 50 ஆண்டுகள்

கட்சியின் தலைவராகவும் இருந்தவர். தத்துவ மேதை அவரது புகழ் மகுடத்தில், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, தத்துவ மேதை, நாடக ஆசிரியர், நடிகர் என, எத்தனையோ பெருமைகள் பதிந்துள்ளன. தான் தடம் பதித்த, அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்தவர். இணையற்ற அந்த தலைவரின் புகழை, வார்த்தைகளால்விவரிக்க இயலாது. கடைசி மூச்சு வரையில், சமூகநீதி, மதச் சார்பின்மை, மாநில உரிமை, சுயமரியாதை ஆகியவற்றுக்காக போராடியவர்.ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை, இழிவான சொற்களால் அழைக்கப்படுவதை நீக்கி, மதிப்புமிகு சொற்களை சூட்டியவர். குடிசைகள் இருக்கும் இடங்கள் எல்லாம், குடியிருப்புகள் இருக்க வேண்டுமென, செய்தவர்.இத்தகைய பெருமைமிகு தலைவருக்கு, நாட்டின் மிக உயர்ந்த விருதான, 'பாரத ரத்னா' வை வழங்க வேண்டும். அது தான், அவருக்கு செய்யும் பொருத்தமான மரியாதையாக அமையும்.இவ்வாறு, சிவா பேசினார். அப்போது, அனைத்து, எம்.பி.,க்களும், மேஜைகளை தட்டி, வரவேற்பு தெரிவித்தனர். ராஜ்யசபா காலையில் கூடியதும், பல்வேறு பிரச்னைகளை கிளப்ப, எதிர்க்கட்சிகள் தயாராக

Advertisement

இருந்தன.அமைதி : ஆனாலும், முதல் அலுவலாக, மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து, தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா பேசப் போகிறார் என்பதை அறிந்ததும், சபையில் உள்ள எல்லா, எம்.பி.,க்களும் அமைதி காத்தனர்.வேறு சில விஷயங்கள் குறித்து பேசவும், எம்.பி.,க்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால், அதற்கெல்லாம் இடம் தராமல், சிவா பேசி முடித்ததுமே, எதிர்க்கட்சிகளின் அமளியும், ரகளையும் துவங்கியது.


Advertisement

வாசகர் கருத்து (236)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayasankar. v - Mumbai,இந்தியா
17-ஆக-201801:00:30 IST Report Abuse

Jayasankar. vமஞ்சள் துண்டு கட்டுமர விஞ்ஞானமுறை ஊழல் திலகம், மக்கள் பணத்தை புறங்கை தேன் நக்கினவர், இந்திய IPKF ஸ்ரீலங்காவிலிருந்து 1990 -இல் திரும்பி வந்தபொழுது அதற்கு மரியாதை கொடுத்து அழைக்காதவர், இலங்கையில் தமிழர்கள் கூட்டமாக சாவதற்கு UPA அரசுடன் உதவி செய்து " மௌன அழுகை " அழுகிறேன் என்று நாடகமாடியவர். இவருக்கு பாரத ரத்னா விருதா ? விருதை கேட்டு வாங்குவதா திருச்சி சிவா ? விருதுகள் வழங்கப்படவேண்டும் . விருதை கேட்டு வாங்குவது பெறுபவரின் கண்ணியத்தைக் குறைக்கும். கலைஞருக்கு பாரத ரத்னா கொடுப்பதை விட, அண்ணா ஜின்னா பெரியார் காந்தி கக்கன் ராஜாஜி காமராஜ் தேசிய முற்போக்குத் தலைவரான எனக்கு இந்த விருதை வழங்குவதே அந்த விருதிற்கும் அதை வழங்குபவர்க்கும் பெருமை சேர்க்கும். அண்ணா நாமம் வாழ்க. தமிழக மக்களாகிய உங்களுக்கு மூன்று நாமமே. அது தான் நமக்கு நாமமே திட்டம். புரிகிறதா

Rate this:
Manian - Chennai,இந்தியா
17-ஆக-201809:03:24 IST Report Abuse

Manianமுதலில் சங்கப் புலவர்கள்- வள்ளுவர் போன்றவர்களுக்கு தென் பாரத ரத்னம் , அப்புறம் கம்பர், பாரதி வரை, இதெயெல்லாம் முடிஞ்சு நூறு வருசம் கழிச்சு பாரத லஞ்ச ரத்தனா கொடுக்கலாம்....

Rate this:
rajaram avadhani - Tiruchy,இந்தியா
16-ஆக-201815:46:13 IST Report Abuse

rajaram avadhani பாரத ரத்னா என்பது சம்ஸ்கிருத விருது. இந்திய மணி[" money "] என்று கொடுத்தால் வாங்கிக்கொள்ளுவோம்

Rate this:
Paddy Sundaram - Chennai,இந்தியா
16-ஆக-201801:37:16 IST Report Abuse

Paddy Sundaramபாரத் ஊழல் ரத்தினா வேணுமானாலும் தரலாம். விக்யான ரீதியாக ஊழல் செய்தவர் என்று சர்காரியாவிடமிருந்தே சர்டிபிகேட் பெற்ற தானை தலைவர்.

Rate this:
மேலும் 232 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X