எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் அடுத்தது என்ன? : 14ல் கூடுகிறது செயற்குழு

Updated : ஆக 11, 2018 | Added : ஆக 11, 2018 | கருத்துகள் (5)
Advertisement
தி.மு.க., செயற்குழு, ஸ்டாலின், கருணாநிதி

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, தி.மு.க., செயற்குழு கூட்டம், வரும், 14ல், கூடுகிறது என, அக்கட்சியின் பொதுச்செயலர், அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் மறைவை தொடர்ந்து, தி.மு.க., சார்பில், ஏழு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. சென்னை, மெரினாவில், கருணாநிதியின் சமாதியில், தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களும், தி.மு.க., தொண்டர்களும், சமாதியில் வணங்கிச் செல்கின்றனர். கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டு, தொண்டர்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வரும், 14ல், சென்னை, அறிவாலயத்தில் உள்ள அரங்கத்தில், தி.மு.க., செயற்குழு கூட்டம், அவசரமாக கூடுகிறது. அதில், மறைந்த கருணாநிதிக்கு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.செயல் தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்க, துணைப் பொதுச்செயலர்கள், மாநில நிர்வாகிகள், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என, மொத்தம், 750 பேருக்கு, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.புதிய தலைவராக, ஸ்டாலினை தேர்வு செய்வது, மீண்டும் அழகிரியை, கட்சியில் சேர்ப்பது குறித்தும், கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என, தெரிகிறது.


இதுகுறித்து, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் அறிக்கை:

ஸ்டாலின் தலைமையில் வரும், 14ல், காலை, 10:00 மணிக்கு, தி.மு.க., தலைமை செயற்குழு அவசரக் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நடைபெறும். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இதில், கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
baskeran - london,யுனைடெட் கிங்டம்
11-ஆக-201820:48:36 IST Report Abuse
baskeran கட்சியை வைகோ இடம் ஒப்படைப்பது மிக சாலச்சிறந்தது .இல்லை திமுக காணாமல் போகும் ராஜவீரமுத்து
Rate this:
Share this comment
Cancel
Raja - Erode,இந்தியா
11-ஆக-201811:16:42 IST Report Abuse
Raja திரு.கருப்பட்டி அவர்களே. வராத அந்த நாலு பேரு யாரு? ஒருவரை யூகிக்க முடியுது. மற்ற மூவரின் பெயரை குறிப்பாக உடனடியாக சொல்லவும். சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஆக-201808:58:40 IST Report Abuse
Srinivasan Kannaiya அடுத்தது... ஸ்டாலின்,. தலைவர்.. அழகிரி செயலாளர்..கனிமொழி பொருளாளர்... செயற்குழு உறுப்பினர்கள்.. ராஜாத்தி அம்மாள். அறிவு நிதி, தமிழ் நிதி.. உதயநிதி... தயாநிதி... கணக்கு தணிக்கை ,,, செல்வி... எல்லாமே முடிந்தது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X