அவை குறிப்பிலிருந்து பிரதமரின் கருத்து நீக்கம்

Added : ஆக 11, 2018 | கருத்துகள் (49)
Advertisement
பிரதமர் மோடி, ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல், காங்கிரஸ், ராஜ்யசபா அவை குறிப்பு, வெங்கைய்ய நாயுடு,  ஹரிவன்ஷ் நாராயண்சிங் , ஹரிபிரசாத், பிரதமர் கருத்து நீக்கம், Prime Minister Narendra Modi, Rajya Sabha Vice President election, Congress, Rajya Sabha Reference, Venkayya Naidu, Harivansh Narayan Singh, Hariprasad, 
The Rajya Sabha note,

புதுடில்லி : ராஜ்யசபா துணை தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் காங்கிரஸ் குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்து, அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் ஆக.,9 அன்று நடைபெற்றது. இதில் பாஜ., கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஹரிவன்ஷ் நாராயண்சிங் வெற்றிபெற்றார். இது தொடர்பாக அவையில் அவரை வாழ்த்தி பேசிய பிரதமர் மோடி, இது இரண்டு 'ஹரி'கள் இடையே நடந்த போட்டி. இதில் காங்.,ன் இழிவான, மோசமான எண்ணத்திற்கு கடுமையான அடி கொடுக்கும் விதமாக ஹரிவன்ஷ் வெற்றி பெற்றுள்ளார் என தெரிவித்தார். காங்., குறித்த பிரதமரின் கருத்திற்கு எதிராக, காங்., வேட்பாளரான ஹரிபிரசாத், ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவிடம் முறையிட்டார்.
உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பது அழகல்ல என ஹரிபிரசாத் குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட வெங்கையா, பிரதமர் மோடியின் அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார். பார்லி., வரலாற்றில், இது போன்று பிரதமரின் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
11-ஆக-201814:51:33 IST Report Abuse
 N.Purushothaman அவை குறிப்பில் இருந்து வேண்டுமானால் நீக்கலாம் ..ஆனால் கருத்து உண்மையே ...
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
11-ஆக-201814:38:59 IST Report Abuse
vasumathi ஹரி என்பதற்கு குரங்கு என்ற அர்த்தம் உண்டு. அரசியல்வாதிகள் குரங்குகள். வேடிக்கை. குறிப்பில் இருந்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
arun - ,
11-ஆக-201814:37:48 IST Report Abuse
arun சபை குறிப்பிலிருந்து நீக்கிறது முன்னாடி கண்டிப்பா மோடியிடம் கேட்டிருப்பார் வெங்கய்யா....மோடி அது உங்களோட முடிவு என்று கூறியிருப்பார்....இதையும் எதிர் கட்சிகள் அரசியலாக்கும் என்று தெரிந்தும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X