பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

Updated : ஆக 11, 2018 | Added : ஆக 11, 2018 | கருத்துகள் (8)
Share
Advertisement
மேட்டூர் அணை, நிரம்பியது,metturdam

மேட்டூர்: மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 2வது முறையாக நிரம்பியது. அணை வரலாற்றில் 40வது முறையாக நிரம்பியுள்ளது.


4 ஆண்டுகளுக்கு பின்

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. கொள்ளளவு 93.47 டிஎம்சி. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. இதனால், அங்கிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், ஜூலை 23ம் தேதி மேட்டூர் அணை, 4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது.

பாசனத்திற்காக, தண்ணீர் திறக்கப்பட்டதால், அணை நீர்மட்டம் 116 அடியாக சரிந்தது. கர்நாடக பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால், காவிரியில் 1.43 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஒரே ஆண்டில் 2வது முறையாக இன்று (ஆக.,11) பிற்பகல் 1.30 மணியளவில் மேட்டூர் அணை நிரம்பியது.


எச்சரிக்கை

அணைக்கு 1.35 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின், அணையிலிருந்து அதிகபட்சமாக 1.25 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் இறங்க வேண்டாம் என காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதற்கு முன் மேட்டூர் அணை, 2004ல் 4 முறையும், 2005ல் 5 முறையும் நிரம்பியது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) கேட்க்கும் போது மனது ஆனந்தம் அடைகிறது...
Rate this:
Cancel
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
11-ஆக-201821:41:26 IST Report Abuse
Srinivasan Krishnamoorthi மிகுந்த முயற்சி எடுக்காமல் காவிரி தமிழகத்தில் பாயும் நிலை மகிழ்ச்சியானது. அதே சமயம் தண்ணீர் அதிகம் வரும் பொது அதை எப்படி கடல் சேராமல் நம் மண்ணில் ஈர்த்துக்கொள்ளும் வழியை எப்போது செய்ய போகிறோம் என்பது கவலை மிக செய்கிறது. எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அந்த வல்லமை தர என் பிரார்த்தனைகள்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-ஆக-201819:00:24 IST Report Abuse
Pugazh V //மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது// இதையா நல்லது நடக்க ஆரம்பித்தது என்று சொல்கிறார்கள்?? வாழைத் தோப்பு களும், மரவள்ளி கிழங்கு களும் அடித்து செல்லப்பட்டு விவசாயிகள் பலர் அம்போ என்றிருப்பது வருணபகவானின் கருணையா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X