அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் இரங்கல் கூட்டம் ஸ்டாலின் - அழகிரி பங்கேற்பு?

Added : ஆக 12, 2018 | கருத்துகள் (2)
Share
Advertisement
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு, 14ல், கூடுகிற செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. ஆனால், அவருக்கு பதவி வழங்குவதில், இரு தரப்பினரும் முன்வைக்கும் நிபந்தனைகளால், இழுபறி நீடிக்கிறது.நிபந்தனைஇது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கட்சியில், அழகிரிக்கு முக்கிய பதவி வழங்குவதில்

தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு, 14ல், கூடுகிற செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.

ஆனால், அவருக்கு பதவி வழங்குவதில், இரு தரப்பினரும் முன்வைக்கும் நிபந்தனைகளால், இழுபறி நீடிக்கிறது.

நிபந்தனை

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கட்சியில், அழகிரிக்கு முக்கிய பதவி வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. அதாவது, 'தென் மண்டல அமைப்பு செயலர் பதவி வழங்கினால், தென் மாவட்டங்கள் முழுவதும், என் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும். 'இல்லையென்றால், மாநில அளவில் முக்கிய பொறுப்பு, சென்னை, அறிவாலயத்திலிருந்து பணியாற்றுவது போல, வழங்க வேண்டும். என் ஆதரவாளர்களை கட்சியில் சேர்க்க வேண்டும்' என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை, அழகிரி வைக்கிறார்.

இந்த நிபந்தனைகளை, ஸ்டாலின் ஏற்கவில்லை. 'அழகிரியை, முதலில் கட்சியில் சேர்த்து விட்டு, பதவி விவகாரத்தை, பின்னர் பார்த்துக் கொள்ளலாம்' என, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, ரெசிடென்சி ஓட்டலில் தங்கியுள்ள அழகிரி, அங்கிருந்தபடி, குடும்ப உறுப்பினர்களிடம், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறார்.

கருணாநிதியின் மகள் செல்வி, அவரது கணவர் செல்வம் ஆகிய இருவரும், அழகிரி, ஸ்டாலின் இடையே துாதர்களாக சென்று, கட்சியில் அழகிரியை சேர்க்க, தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

முதல் நிகழ்ச்சி

இதற்கிடையில், 18ல், மதுரை, ராஜா முத்தையா மன்றத்தில், கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடத்த, மதுரை மாவட்ட, தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். இதில், ஸ்டாலின் பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைத்து பேசுகிறார். அக்கூட்டம் நடப்பதற்கு முன், அழகிரி கட்சியில் சேர்க்கப்பட்டு, அண்ணனும், தம்பியும் இணைந்து பங்கேற்கும், முதல் நிகழ்ச்சியாக, இது அமையுமா என்ற கேள்வி, தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B Srinivasan - trichy,இந்தியா
12-ஆக-201820:12:30 IST Report Abuse
B Srinivasan இங்கதான் ஆரம்பம் . இதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் .....இடுக்கண் வருங்கால் நகுக .. தமிழ்நாட்டிற்கு மொத்தத்தில் நேரம் சரியில்லை.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஆக-201809:45:45 IST Report Abuse
Bhaskaran அவிங்க குடும்ப பிரச்சனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X