பொது செய்தி

இந்தியா

கேரளாவுக்கு ரூ.100 கோடி உடனடி நிதி: மத்திய அரசு

Updated : ஆக 12, 2018 | Added : ஆக 12, 2018 | கருத்துகள் (13)
Advertisement
கேரளா வெள்ளம், ராஜநாத் சிங், ஆய்வு, பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, ரூ.100 கோடி உடனடி நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உள்துறை அமைச்சர் ஆய்வு


வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானம் மூலம் பார்வையிட்டார். அவருடன் மத்திய அமைச்சர் கேஜே அல்போன்ஸ், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் உடன் சென்றனர்.


ரூ.100 கோடி:


வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டபின், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவிக்கையில், வெள்ள பாதிப்புகளை சமாளிக்க அனைத்து உதவிகளும் கேரளாவுக்கு வழங்கப்படும். கேரளாவுக்கு ஏற்கனவே ரூ.80 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.100 கோடி வழங்கப்படும். வெள்ள பாதிப்புகளை மதிப்பிட சில காலம் ஆகும் என்பதால், உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என்றார்.
ராணுவம் உதவி:

கனமழையால் இடுக்கி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மன்குளம் பகுதியில் உள்ள விரிஜ்சிபாரா கிராமத்தை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அங்கு வசித்து வந்த 800 பேர் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து ராணுவம், அந்த பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து, மக்கள் வெளியேற வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

ராணுவ அதிகாரிகள் கூறுகையில், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி மற்றும் மல்லபுரம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீரர்கள், மக்களை மீட்க 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். மோசமான வானிலை, தொலைதொடர்பு துண்டிக்கப்பட்ட கிராமங்களிலும் உழைத்து வருகிறோம் என்றனர்.


பிரதமர் உறுதி

வெள்ளம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், இதுவரை வெள்ளத்திற்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேரை காணவில்லை. இதுபோன்ற பேரழிவு இதற்கு முன்னர் ஏற்பட்டது கிடையாது. இந்த சூழ்நிலையில், வையானதை செய்ய அரசு தயாராக உள்ளது. மாநில அரசை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கேரளாவிற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


உரிமையாளரை காப்பாற்றிய நாய்

இடுக்கி மாவட்டம் கஞ்சிகழி கிராமத்தை சேர்ந்தவர் மோகனன். இவர் கடந்த 9 ம் தேதி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 3 மணியளவில் வீட்டு வாசலில் நின்றிருந்த அவர் வளர்த்து வந்த நாய் பயங்கரமாக கத்தியது. இதனால் சந்தேகமடைந்து அவரும், குடும்பத்தினரும் வெளியே வந்தனர். பின்னர் ஒரிரு வினாடிகளில் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு வீடு சேதமடைந்தது. அவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். தற்போது அவர்கள் அரசு நிவாரண முகாமில் தங்கியுள்ளனர்.


ஹீரோவான வீரர்


முழு கொள்ளளவை எட்டியதால், இடுக்கி அணை திறக்கப்பட்டது. இதனால், அணை பாய்ந்தோடும் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி, இடுக்கியில் உள்ள பாலத்தின் ஒரு முனையில் ஒருவர், அதிகளவு வெள்ளம் காரணமாக தனது குழந்தையுடன் கடந்து செல்ல தயங்கியபடி நின்று கொண்டிருந்தார். இதனை பாலத்தின் மற்றொரு புறத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த பீஹாரின் கன்னையா குமார் என்பவர், பார்த்ததும் அங்கிருந்து ஓடிச்சென்று அந்த நபரிடமிருந்து குழந்தையை வாங்கி கொண்டு மீண்டும், மறுபுறத்திற்கு ஓடி வந்தார். அவர் வந்த சில நொடிகளில் பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. மீட்பு படை வீரர் குழந்தையை தூக்கியவாறு ஓடுவதை பார்த்த சிலர் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இது வேகமாக பரவி வருகிறது.


புதிய பாஸ்போர்ட்:


கேரளாவில் பாஸ்போர்ட் சேதமடைந்தவர்களுக்கு புதிய பாஸ்போர்ட் இலவசமாக மாற்றித்தரப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பாஸ்போர்ட் சேதமடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Navn - Newyark,யூ.எஸ்.ஏ
13-ஆக-201806:29:46 IST Report Abuse
Navn எங்கள் பணம், எங்கள் உரிமை. கேரளா அரசு கேட்கும் மக்கள் பணத்தை கொடுத்தே ஆகவேண்டும். நுறு கோடி? மத்திய அரசு என்ன பிச்சை போடுகிறதா?
Rate this:
Share this comment
Cancel
raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ
12-ஆக-201822:36:55 IST Report Abuse
raguraman venkat நன்றியற்றவர்களுக்கு செய்யும் உதவிபோல் ஆகிவிடக்கூடாது. நான் இவர்கள் பிஜேபிக்கு ஒட்டு போடவேண்டுமென்று சொல்லவில்லை. மதமாற்றம், லவ் ஜிகாத், ஹவாலா, மற்றும், தீவிரவாதத்திற்கு துணை நிற்றல் போன்றவற்றை கேரளா சிறுபான்மையினர் கைவிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
v.subramanian - madurai,இந்தியா
12-ஆக-201822:28:31 IST Report Abuse
v.subramanian Please observe that the floods in kerala,tamilnadu and other places are man made due to sudden release of flood water from the reservoir which is already full and unable store further due to the heavy rain in their catchment areas.As already d by the supreme court the river wherever it has its origin it is belongs to all places it run and blocking it anywhere by the construction of reservoir is against nature and breach of rights of all living things along the the river it run.However we have already constructed reservoirs and i suggest the following to avoid desaster in future.1.Do not store water in reservoirs and allow the water to flow in the river all the days of the year.2.construct number of check dams wherever necessary and divert the water to nearby irrigation tanks,ponds etc.Due steady flow of water and storing in irrigation tanks,ponds etc the water will slowly go into the mother earth which is a very big natural reservoir and give it back us as and when we need in a very approachable depth.3.now in rainy season the reservoir will be empty with less water to its full capacity and can store water received from heavy rain in their catchment areas and also it is very easy to control and regulate the flow below the reservoir as and when required without causing any damage to th people living along the river side.Please make a study of flow in the rivers before and after the construction of reservoirs and come to a conclusion
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X